Kallakurichi

News March 17, 2025

பணி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்திய ஆட்சியர்

image

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி அலகில் இளநிலை உதவியாளராக ஒதுக்கீடு செய்யப்பட்டவர்களுக்கு இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் பணி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

News March 17, 2025

அங்கன்வாடியில் ரூ.24,200 சம்பளத்தில் அரசு வேலை!

image

தமிழ்நாடு முழுவதும் அங்கன்வாடி பணியாளர்களை நிரப்புவதற்கான அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. மொத்தம் 7,783 அங்கான்வாடி பணியாளர்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளனர். அதிகபட்சம் 12ஆம் வகுப்பும், குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பும் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். 25-35 வயதிற்குள் இருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு கிடையாது.ரூ.24,200 வரை சம்பளம். மேலும் தெரிந்துகொள்ள <>கிளிக்<<>> செய்யவும்.

News March 17, 2025

கள்ளக்குறிச்சி: மரக்கிளை முறிந்து விழுந்து பெண் பரிதாப பலி

image

கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் ஜோதி(48). இவர் கடந்த 6ம் தேதி சேலம் செல்ல ஏமப்பேர் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். சாலையோர புளியமரத்தின் கிளை முறிந்து அவர் மீது விழுந்தது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர், கோயம்புத்துார் தனியார் மருத்துவமனையில் மேல்சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். கள்ளக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.

News March 17, 2025

கள்ளக்குறிச்சி: நகை பாலிஷ் காவல்துறையினர் எச்சரிக்கை

image

சங்கராபுரம் பகுதியில் வட மாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள், கிராமங்களில் தங்க நகையை பாலிஷ் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் பாலிஷ் போடும் போது, அசல் நகையை எடுத்துக்கொண்டு, ‘கவரிங்’நகையை கொடுத்து மோசடியில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இதுபோன்ற நபர்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது குறித்து போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

News March 16, 2025

மலர் தூவி ரயிலை வரவேற்ற பொதுமக்கள்

image

உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்திற்கு கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் நின்று இன்று ஓராண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டும், இரண்டாம் ஆண்டு துவங்குவதை ஒட்டி இன்று உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்திற்கு வந்த கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு உளுந்தூர்பேட்டை பகுதி சமூக ஆர்வலர்கள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள், செய்தியாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட பலர் மலர்தூவி வரவேற்றனர்.

News March 16, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் (16.3.2025) இன்று இரவு 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம்.

News March 16, 2025

கல்வராயன்மலையில் 4700 கிலோ வெள்ளம் பறிமுதல்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள வாரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக அருள், ராமசாமி ஆகிய இருவரும் 4700 கிலோ வெள்ளம் பதுக்கி வைத்திருப்பதாக கள்ளக்குறிச்சி எஸ்பி ரஜத் சதுர்வேதிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் எஸ்பி ரஜத் சதுர்வேதி தலைமையிலான போலீசார் வாரம் கிராமத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4700 வெள்ளம் கண்டுபிடித்து சம்பவ இடத்திலேயே கொட்டி அழித்தனர்.

News March 16, 2025

கள்ளக்குறிச்சியில் விண்ணப்பிக்கலாம்

image

கள்ளக்குறிச்சியில் மாவட்டத்தில் படித்த இளைஞர்கள் பி.எம்., இண்டர்ஷிப் திட்டம் மூலம் வழங்கப்படும் இண்டர்ஷிப் பயிற்சிக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில் சேரும் மாணவர்களுக்கு மாதம் தோறும் 11 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். இதுதொடர்பான மேலும் விபரங்களை http://www.pminternship.mca.gov.in/ என்ற இணையமுகவரி மூலம் தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

News March 16, 2025

இந்திய ராணுவத்தில் ஆள்சேர்ப்பு: கொட்டிக்கிடக்கும் வேலை

image

இந்திய ராணுவத்தில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருமணமாகாத ஆண்கள், பெண்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 2025ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் எழுத்துத் தேர்வு நடைபெறும். கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த 8, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விருப்பம் உள்ளவர்கள் வரும் ஏப்ரல் 10ஆம் தேதிக்குள் இந்த லிங்கை <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். ஒரே நேரத்தில் 2 பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். 13 மொழிகளில் தேர்வு நடைபெறும்.

News March 16, 2025

நெஞ்சு வலியால் ஆட்டோ டிரைவர் துாக்கிட்டு தற்கொலை

image

கள்ளக்குறிச்சி அடுத்த விளக்கூரையைச் சேர்ந்தவர் ஏழுமலை, 43; ஆட்டோ டிரைவர். கடந்த 2 ஆண்டுகளாக நெஞ்சுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால், மனமுடைந்த அவர் வீட்டின் வெளியே உள்ள மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!