Kallakurichi

News June 21, 2024

கள்ளக்குறிச்சியில் 27 பேர் உயிரிழப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. இதில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 27 பேர், சேலத்தில் 15 பேர், விழுப்புரத்தில் 4 பேர், புதுச்சேரி ஜிப்மர் 3 பேர் என மொத்தம் 49 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 89 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

News June 21, 2024

ஆறுதல் கூறிய திருமாவளவன்

image

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில், கள்ளச்சாராயம் குடித்து 25க்கும் மேற்பட்ட நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நேரில் சென்று ஆறுதல் கூறினார். வீடு வீடாக சென்று அனைத்து குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறி விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் நிவாரணம் வழங்கினார்.

News June 21, 2024

ஆறுதல் கூறிய செல்வப்பெருந்தகை

image

கள்ளக்குறிச்சி, கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், 80க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று(ஜூன் 20) நேரில் சென்று உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். உடன் மாநில, மாவட்ட நிர்வாகிகள் இருந்தனர்.

News June 21, 2024

ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் – துரை வைகோ

image

கள்ளக்குறிச்சி, கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 80க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மதிமுக முதன்மை பொதுச்செயலாளர் துரை வைகோ நேரில் ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, “குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும்” என ஆவேசமாக கூறினார் .

News June 21, 2024

கள்ளச்சாராய உயிரிழப்பு 49 ஆக உயர்வு

image

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. 45 பேர் வரை உயிரிழந்திருந்த நிலையில் சேலம் மருத்துவனையில் இன்று(ஜூன் 21) காலையில் மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் துக்க நிகழ்வில் பங்கேற்ற 100க்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயம் அருந்திய நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு தொடர் மரணங்கள் நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

News June 20, 2024

உடல் அடக்கம் பணி நடைபெற்று வருகிறது

image

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்த கருனாபுரம் பகுதியை சேர்ந்த 21 நபர்களின் உடல் தகனம் செய்யப்பட்டு வருகிறது. அந்த 21 நபர்களின் உடல் ஒரே இடத்தில் வைக்கப்பட்டு தகனம் செய்யப்பட்டு வருகிறது. வரலாறு காணாத இந்த பேரிழப்பு கள்ளக்குறிச்சி பகுதி மக்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

News June 20, 2024

தவெக தலைவர் நடிகர் விஜய் நேரில் ஆறுதல்

image

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ள சாராயம் குடித்து 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் அவர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். உடன் மாநில பொதுச் செயலாளர் ஆனந்த், மாவட்ட தலைவர் பரணி பாலாஜி அவர்கள் ஆறுதல் கூறினார்கள்.

News June 20, 2024

கள்ளக்குறிச்சி: பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கெனவே 37 பேர் உயிரிழந்திருந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 42 ஆகியுள்ளது. தொடர் மரணத்தால் கருணாபுரம் பகுதியே துக்கத்தில் மூழ்கியுள்ளது. மேலும் கள்ளச்சாராயம் குடித்து உடல்நிலை பாதிக்கப்பட்ட 80க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

News June 20, 2024

உயிரிழப்புக்கு இது தான் காரணம்: அண்ணாமலை

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ள சாராயம் அருந்தி உயிரிழப்பு அதிகரிக்க காரணம் உண்மைய சொல்ல மறுத்ததால் தான் என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பாக்கெட் பாக்கெட்டாக கள்ளக்குறிச்சி நகர முக்கிய பகுதியில் கள்ள சாராய விற்பனை நடைபெற்றது ஏற்கக் கூடியதாக இல்லை என அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

News June 20, 2024

வீடு வீடாக அஞ்சலி செலுத்தி எடப்பாடி பழனிசாமி

image

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் வீடுகளுக்கு நேரில் சென்று(ஜூன் 20) மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர். இந்த நிகழ்வின்போது முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உட்பட பலர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!