India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடப்பாண்டில் பசுந்தீவன உற்பத்தியினை அதிகரிக்க, பழத்தோட்டங்களில் பசுந்தீவன பயிரை ஊடுபயிராக பயிரிடுவதை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ் 50 ஏக்கர் பரப்பளவில் ஒரு ஏக்கருக்கு 3000 வீதம் அரசு மானியம் வழங்கப்படுகிறது. இதற்று, தகுதியுள்ள விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் விண்ணப்பித்து பயன்பெறலாம் என இன்று மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அக்னிவீர் வாய்வு இந்திய விமானப்படை தேர்விற்கு இணைய வழியாக ஜூலை 8 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தினை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக பிரசாந்த் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் பலர் பங்கேற்று தங்கள் பகுதியில் உள்ள பல்வேறு விதமான கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக அளித்தனர். இதில் விவசாய சங்க பிரதிநிதிகள் பலர் பங்கேற்றனர்.
அதிகாரிகள், ஆளும் கட்சியினர், காவல்துறை உதவியுடன் கள்ளசாராயம் காய்ச்சப்படுவதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். கடந்த ஆண்டு கள்ளச்சாராய மரணத்தின்போதே அரசு உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என இன்று ஆளுநரை சந்தித்த பின் பேட்டியளித்துள்ளார். மேலும், இந்த கள்ளக்குறிச்சி விவகாரத்தில் துறை சார்ந்த அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் பிரேமலதா சாடியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் வகுப்பைச் சேர்ந்த தனிநபர்கள் அல்லது குழுக்கள் கடன் பெறுவதற்காக விண்ணப்பிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் நேற்று(ஜூன் 27) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கு நிதி உதவி உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் ஆட்சியர் பிரசாந்த் நேற்று(ஜூன் 27) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். விண்ணப்பங்கள் அளிக்கும் தேவாலயங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு நிதி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் விருதுகளை பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் வரும் ஜூலை 5 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் நேற்று(ஜீன் 27) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியராக பிரசாந்த் பொறுப்பேற்ற பிறநாகு இன்று(ஜூன் 28) முதன்முறையாக விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளிக்குமாறும் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி, கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக நடைபெற்ற கலவரம் குறித்து மாணவியின் தாய் செல்வியை ஏன் இன்னும் விசாரிக்கவில்லை என காவல்துறையினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று கேள்வி எழுப்பியுள்ளது. “நல்ல நாளுக்காக காத்திருக்கிறீர்களா எனவும் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரத்தில் 10 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. மாதேஷ், கோவிந்தராஜ், விஜயா, ஜோசப், ஹரிமுத்து, சின்னதுரை, கதிரவன், சிவகுமார், ஷாகுல் ஹமீது, கண்ணன் ஆகியோரை காவலில் எடுக்க அனுமதி கோரியுள்ளனர். கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக இதுவரை 21 பேர் கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.