India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை சுதந்திர தினத்தை ஒட்டி 412 கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அனைத்து பொதுமக்களும் பங்கேற்று தங்கள் பகுதியில் உள்ள பிரச்சனைகளை விவாதித்து தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைக்கலாம். எனவே, பொதுமக்கள், தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என ஆட்சியர் பிரசாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் 16ஆம் தேதி மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் விளம்பாவூர், புதுப்பட்டு, கரியாலூர், அம்மையகரம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற உள்ளது. இதில் 15 துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிஐயிடம் மாற்றக்கோரி அதிமுக மற்றும் பாமக உள்ளிட்ட கட்சியினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர். இந்த வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி காலை 9.05 மணிக்கு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். இதில், பொதுமக்கள் கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி உளவுத்துறை எஸ்.ஐ பூங்குன்றம், கள்ளக்குறிச்சி உளவுத்துறை போலீஸ் சேட்டு, தியாகதுருகம் உளவுத்துறை போலீஸ் பிரபு ஆகிய மூன்று பேரும் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். உதவி ஆய்வாளர் பூங்குன்றம் சென்னை சிறப்பு காவல் படைக்கும், போலீஸ் சேட்டு உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்கும், போலீஸ் பிரபு வரஞ்சரம் காவல் நிலையத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து சுற்றுலாத்தொழில் முனைவோரும், தமிழ்நாடு சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த விருதுகள் உலக சுற்றுலா தினமான வருகிற செப்டம்பர் 27ஆம் தேதி, சென்னையில் வழங்கப்படும். www.tntourismawards.com இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கி பூர்த்தி செய்து ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று அறிவித்துள்ளார்.
அரசம்பட்டை சேர்ந்த கிருஷ்ணன் என்பவருக்கும் பூட்டை சேர்ந்த கலைச்செல்வி என்பவருக்கும் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று கிருஷ்ணன் குடித்துவிட்டு வந்து கலைச்செல்வியை கத்தியால் குத்தியுள்ளார். கலைச்செல்வி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து புகாரின் பேரில் போலீசார் கிருஷ்ணனை இன்று கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று பெய்த மழையால் மாவட்டம் முழுவதும் பல பகுதிகள் பாதிப்படைந்தன. இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். இன்று மழை பெய்யுமா? பெய்யாதா?
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு தமிழ்நாடு அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 17 ஈப்பு வாகனங்களை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று(ஆகஸ்ட் 12) தொடங்கி வைத்து வாகனங்களின் சாவிகளை சம்பந்தப்பட்ட ஈப்பு ஓட்டுநர்களிடம் வழங்கினார். இதில் அரசு துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பிரகாஷ், தனது மகள் அதிசயாவை காணவில்லை என 2 நாட்களுக்கு முன்பு போலீசில் புகார் அளித்திருந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நேற்று முன்தினம் தாயாரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, கடன்காரர்கள் வீட்டிற்கு வந்து அவமானப்படுத்துவதால், துக்க வீட்டில் எப்படி பணம் கேட்பார்கள் என மகளை கொன்று கிணற்றில் வீசியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.