India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குடும்ப அட்டை வைத்துள்ள குடும்ப அட்டைதாரர்களின் குடும்ப அட்டையில் உள்ள அனைத்து நபர்களும் தங்களது கைரேகை பதிவினை வரும் மார்ச் 31-ஆம் தேதிக்குள் நியாய விலை கடைகளில் பதிவு செய்ய வேண்டும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று தெரிவித்துள்ளார். எனவே இதுவரை கைரேகை பதிவு செய்யாதவர்கள் பதிவு செய்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது
கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் லூர்துசாமி தலைமையில் இன்று(மார்.18) அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பூத் மறுவரையறை உள்ளிட்ட தேர்தல் தொடர்பான பல்வேறு விதமான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பாக, குழந்தைகளுக்கு(6 மாதம் முதல் 6 வயது வரை) விட்டமின் ஏ சத்து குறைபாடு நோய்கள், மாலை கண் தொடர்பான நோய்களை தடுப்பதற்கு, விட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் மார்ச் 17 – மார்ச் 22 வரை நடைபெறுகிறது. அங்கன்வாடி மையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் இம்முகாம் நடைபெறுகிறது. குழந்தைகள் வைத்திருப்பவர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க.
கள்ளக்குறிச்சி மாவட்டம் செம்மணங்கூரை சேர்ந்தவர் கவியரசு. திருச்சியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து கடந்தாண்டு திருமணம் செய்துகொண்டார். இதில், கர்ப்பமான சிறுமிக்கு கடந்த 10ம் தேதி திருச்சியில் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின்பேரில், உளுந்துார்பேட்டை அனைத்து மகளிர் போலீசார், கவியரசு மீது போக்சோ சட்டத்தில் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் முனிவாழை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகன் சரத்குமார்( 9). அரசு நடுநிலைப்பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த இவர், அவரது நண்பருடன், அருகில் உள்ள குளத்தில் குளித்துள்ளனர். ஆழமான பகுதிக்கு சென்ற சரத்குமார் திடீரென நீரில் மூழ்கினார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே இறந்தார். ரிஷிவந்தியம் போலீஸ் விசாரிக்கின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் புதிதாக சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை அதிகப்படுத்தி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேலை வாய்ப்பை உருவாக்க அரசுத்துறை அலுவலர்களுடன் இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் இந்திலி பகுதியில் உள்ள டாக்டர் ஆர்.கே.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நாளை நடைபெற உள்ளது. இதனை இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி அலகில் இளநிலை உதவியாளராக ஒதுக்கீடு செய்யப்பட்டவர்களுக்கு இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் பணி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
தமிழ்நாடு முழுவதும் அங்கன்வாடி பணியாளர்களை நிரப்புவதற்கான அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. மொத்தம் 7,783 அங்கான்வாடி பணியாளர்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளனர். அதிகபட்சம் 12ஆம் வகுப்பும், குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பும் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். 25-35 வயதிற்குள் இருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு கிடையாது.ரூ.24,200 வரை சம்பளம். மேலும் தெரிந்துகொள்ள <
Sorry, no posts matched your criteria.