India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை என தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணையை வரும் 24-ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. இது தொடர்பாக அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை, பாமக வழக்கறிஞர் பாலு உள்ளிட்ட பலர் தனித்தனியாக பொதுநல வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர். இதனை விசாரித்த தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் குறிப்பிட்ட 5 வழக்குகலையும் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டத்தில் உள்ள ஆரியநத்தம், பாதூர், மடப்பட்டு, பெரும்பாக்கம், மட்டிகை, உளுந்தூர், உ. கீரனூர், மேப்புலியூர், செம்மனந்தல், காம்பட்டு உள்ளிட்ட 14 கிராம நிர்வாக அலுவலர்களை பணியிடை மாற்றம் செய்து திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் கண்ணன் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் இதுவரை 67 நபர்கள் உயிரிழந்துள்ளனர். கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவ உயிரிழப்புகள் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை மற்றும் பாமக வழக்கறிஞர் பாலு உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கை வரும் ஜூலை 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரின் கூடுதல் கட்டிடத்தில் நாளை (ஜூலை 19) தனியார் துறை சார்பில் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதனை, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாமினை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் 47-ஆம் ஆண்டு கபிலர் விழா நாளை(ஜூலை19) காலை 8.30 மணிக்கு தொடங்கவுள்ளது. திருக்கோவிலூர் பண்பாட்டு கழகம் சார்பில், திருக்கோவிலூரில் உள்ள ஸ்ரீ சுப்ரமணிய திருமண மகாலில் நடக்கவுள்ள இவ்விழாவில், ‘மூவர் மொழி வாசல்’ மற்றும் ‘ஒரு சொல், ஒரு இல், ஒரு வில்’ என்ற தலைப்புகளில் பேராசிரியர்கள் பேசுகின்றனர். இதில் மாலை 6 மணிக்கு அமைச்சர் பொன்முடி பங்கேற்று பேசவுள்ளார்.
TNPSC நடத்தும், குரூப்-2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க நாளை (ஜூலை 19) கடைசி நாள் ஆகும். இதில், உதவி இன்ஸ்பெக்டர் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள உதவியாளர் பணியிடங்கள் (2,327 பணியிடங்கள்) நிரப்பப்படவுள்ளன. விண்ணப்பதாரர்கள் tnpsc.gov.in அல்லது tnpscexams.in இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம். முதல்நிலை தேர்வு செப்.14 அன்று நடைபெற உள்ளது. நாளை இரவு 12 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி வரை லேசானது முதல் மிதமானது வரை மழைபெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை லேசானது முதல் மிதமானது வரை மழைபெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் மூன்று சிறப்பு உதவி ஆய்வாளர் உட்பட 17 காவலர்களை வேலூர் சரகத்திற்கு பணியிடை மாற்றம் செய்து வடக்கு மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க் இன்று உத்தரவிட்டுள்ளார். 17 காவலர்களை வேலூர் சரகத்திற்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பணிக்கு, கூடுதலாக 1,000 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், 2,768 பணியிடங்களுக்கு வரும் 21ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த தேர்வானது நடைபெற உள்ளது. தேர்வு கூடங்கள் பற்றிய விவரங்களை ஹால் டிக்கெட்டில் தெரிவிக்கப்படும். இன்னும் ஓரிரு நாட்களில் ஹால் டிக்கெட்டுகள் <
Sorry, no posts matched your criteria.