India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்தானம் வழங்கிய 8 குடும்பத்தினரை ஆட்சியா் நேற்று கெளரவித்தார். பின்னர் பேசிய அவர், “முதலாமாண்டு மருத்துவ மாணவா்களுக்கு இது பெரும் பங்கு வகிக்கிறது. உடல் தானம் செய்வதன் மூலம் மருத்துவத் துறை முன்னேற்றம் அடைந்து, வருங்கால சமுதாயத்திற்கு திறமையான மருத்துவா்கள் உருவாவா். பொதுமக்கள் உடல் தானம் வழங்க முன்வர வேண்டும்” என்றாா்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் வரும் 23ஆம் தேதி அன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள முன்னாள் படை வீரர்களுக்கான குறை கேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் முன்னாள் படை வீரர்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க சுய உதவி குழுக்கள் வாயிலாக பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பசுமை நிறுவனங்கள் உருவாக்கவும், ஏற்கனவே ஓராண்டுக்கு மேல் செயல்பட்டு வரும் நிறுவனங்கள் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் விதிகளுக்கு உட்பட்டு கள்ளக்குறிச்சி பெற்ற நிறுவனங்கள் கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கள்ளக்குறிச்சி, ஏமப்பேர், நீலமங்களம், கருணாபுரம், எம்.ஆர்.என்., நகர், சடையம்பட்டு, மட்டிகைக்குறிச்சி, சோமண்டார்குடி, நத்தமேடு, பொன்பரப்பட்டு, க.அலம்பளம், புதுமோகூர், கச்சிராயபாளையம், அக்கராயபாளையம், உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரிய செயல் பொறியாளர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சுற்றுலாத்துறை உலக சுற்றுலா தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சுற்றுலா தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு அரசு சுற்றுலா விருது வழங்கப்பட உள்ளது. அதற்காக கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சார்ந்த சுற்றுலா ஆப்பரேட்டர்கள், விமான நிறுவனங்கள், ஹோட்டல்கள் என சுற்றுலா விருதுக்கு வரும் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 78வது சுதந்திர தின விழாவில் கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வரும் ராஜமாணிக்கம் என்பவர் சிறப்பாக பணியாற்றியமைக்கான நற்சான்றிதழை இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்திடமிருந்து பெற்றுக் கொண்டார்
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் டிஎஸ்பியாக பணியாற்றி வந்த மனோஜ் குமார் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில், திருக்கோவிலூர் டிஎஸ்பி பணியிடம் காலியாக இருந்து வந்தது. இந்த நிலையில் திருக்கோவிலூர் டிஎஸ்பியாக பார்த்திபன் என்பவரை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் 2024-25 முழுவதும் செப்டம்பர் மற்றும் அக்டோபரில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஐந்து பிரிவுகளில் 27 விளையாட்டுகள் 53 வகையில் நடத்தப்பட உள்ளது. இதில் பங்கேற்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் நேற்று தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள பூமாரி நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற துரிஞ்சிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் சாலையின் அருகே உள்ள புளிய மரத்தின் மீது அதிவேகமாக மோதியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மார்க் மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுபான கடைகளை ஒட்டி உள்ள மதுக்கூடங்கள் உள்ளிட்டவை சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை ஆகஸ்ட் 15ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மீறி செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் பிரசாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.