India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் இன்று மாலை 4 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அண்மையில் பெய்த மழையால், குடியிருப்பு பகுதிகளில் முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது. மேலும், இன்று பெய்யவிருக்கும் மழையால் தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளது.
மூங்கில்துறைப்பட்டு போலீசார் நேற்று பொருவலுார் மோடாங்கல் மலை அருகே ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில், காருடன் நின்ற மூவரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். அதில், அவர்கள் திருவண்ணாமலையை சேர்ந்த ஆல்பர்ட், மூங்கில்துறைப்பட்டை சேர்ந்த மேகநாதன், தேவி நகர் முத்தமிழன் என்பதும் மூவரும் வன விலங்குகள், பறவைகளை வேட்டையாட ஏர்கன் துப்பாக்கியுடன் நின்றதும் தெரிந்தது. இதையடுத்து, அவர்களை கைது செய்தனர்.
எடைக்கல் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் கிஷோர். இவர் மீது, “விபத்து வாகனங்களுக்கு பணம் வாங்கிக் கொண்டு வாகனங்களை விடுவித்தது” உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்தன. அதன் பேரில் கள்ளக்குறிச்சி எஸ்.பி. ரஜத்சதுர்வேதி விசாரணை நடத்தினார். அதனைத் தொடர்ந்து தலைமை காவலர் கிஷோரை ஆயுதப்படைக்கு இடம் மாற்றம் செய்து நேற்று எஸ்.பி., உத்தரவிட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் பழைய சிறுவங்கூர் கிராமத்திலும், சங்கராபுரம் ஒன்றியத்தில் பொய்குணம் கிராமத்திலும், உளுந்தூர்பேட்டை ஒன்றியத்தில் சீதேவி கிராமத்திலும், திருக்கோவிலூர் ஒன்றியத்தில் கரடியார் கிராமத்திலும் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற உள்ளதாக இன்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று இரவு 10 மணி வரை கள்ளக்குறிச்சி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவண்ணாமலை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று 14 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 17.08.2024, 19.08.24, 20.08.2024 ஆகிய மூன்று தினங்கள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக வாட்ஸ் ஆஃபில் பரவி வரும் செய்தி வதந்தி எனவும், பொதுமக்கள் யாரும் அதனை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த் அறிவித்துள்ளார்.
திருக்கோவிலூர் மேல வீதியை சேர்ந்தவர் பஸ் உரிமையாளர் துளசிதாசன்(46). இவர் கடந்த 13ஆம் தேதி அங்குள்ள கெங்கையம்மன் கோவில் சாகைவார்த்தல் திருவிழாவின் போது அருள் வந்து சூலம் எடுத்து ஆடிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத வகையில் சூலாயுதம் துளசிதாசனின் கழுத்தில் குத்தியதில் உயிருக்கு போராடிய நிலையில் அவரை திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலம் கள்ளக்குறிச்சியில் உள்ள +2 முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பை சார்ந்த மாணவர்கள் உலகளாவிய IT நிறுவனத்தில் பணியினை துவங்க பயிற்சி வழங்கப்பட உள்ளது என கள்ளக்குறிச்சி ஆட்சியர் எம்.எஸ். பிரசாந்த் அறிவித்துள்ளார். இந்த திட்டத்தில் சேர தாட்கோ இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை 23ஆம் தேதி சின்னசேலம் பகுதிக்கு வருகை தர உள்ளார். 2026 சட்டமன்ற தேர்தல் குறித்தும், தேர்தலில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.