Kallakurichi

News October 23, 2024

கள்ளக்குறிச்சி அருகே மின்னல் தாக்கி விவசாயி பலி

image

கள்ளக்குறிச்சி அருகே வரஞ்சரம் அடுத்த எஸ்.ஒகையூரை சேர்ந்தவர் பிச்சப்பிள்ளை,36; விவசாயி. பிச்சப்பிள்ளையும், அவரது மனைவி தையல்நாயகியும் நேற்று மாலை நிலத்திற்கு சென்றனர். ஈயனுார் பகுதியில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது. அதில், வரப்பில் நடந்து சென்ற பிச்சப்பிள்ளை மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 23, 2024

கலெக்டருக்கு நீதிமன்றம் உத்தரவு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்து வரும் நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் மாவட்ட ஆட்சியருக்கு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில் வெள்ளிமலை முதல் சின்னத்திருப்பதி வரை பேருந்து வசதி தொடங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்.

News October 22, 2024

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (22.10.2024) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 22, 2024

இடி தாக்கி விவசாயி உயிரிழப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் எஸ்.ஒகையூர் கிராமத்தைச் சேர்ந்த பிச்சப்பிள்ளை என்பவர் ஈயனூர் எல்லையில் உள்ள தனது நிலத்தில் நடந்து சென்றுள்ளார். அப்போது இடி தாக்கியதில் பிச்சப்பிள்ளை என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். உயிரிழந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

News October 22, 2024

கள்ளக்குறிச்சி ஆட்சியர் எச்சரிக்கை

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தேநீர் கடைகள், உணவகங்கள், ஸ்வீட் ஸ்டால் மற்றும் உணவு பொருட்கள் தயார் செய்யும் நிறுவனங்களில் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் எரிவாயு உருளைகள் (சிலிண்டர்) 14.2 கிலோ கிராம் கொண்டதை வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடாது என தெரிவிக்கப்படுகிறது. அதனை மீறி பயன்படுத்தினால் சிலிண்டர் பறிமுதல் செய்யப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News October 22, 2024

ஆட்சியரகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டம்

image

கள்ளக்குறிச்சி ஆட்சியரகம் முன்பு மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கம் சார்பில் மத்திய அரசு சுகாதாரத் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். ஊழியர்களின் ஊதியத்தை மகளிர் திட்டத்துடன் வழங்குவதை கைவிட்டு ஊழியர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும். திறன் வளர்ப்பு பயிற்சி கொடுத்து சான்றிதழ் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டம் இன்று நடைபெற்றது.

News October 22, 2024

25 ஆண்டுகளுக்கு நிலையான வருமானம் தரும் சாகுபடி

image

கள்ளக்குறிச்சி வேளாண்மை இணை இயக்குனர் சிவகுமார் விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் 25 ஆண்டுகளுக்கு நிலையான வருமானம் பெற வேண்டும் என்றால் எண்ணெய் பனை சாகுபடி செய்யுங்கள். அதன் மூலம் 100% எண்ணெய் பனை கன்றுகள் மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு ஹெக்டருக்கு 5250 தான் செலவு ஆகும். ஆகையால், விவசாயிகள் இதை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

News October 21, 2024

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் (21.10.2024) இன்று இரவு 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் அல்லது 100 என்ற எண்ணை டயல் செய்யலாம்.

News October 21, 2024

343 மனுக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் பொதுமக்களிடமிருந்து நேரடியாக கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இதில் பொதுமக்களிடமிருந்து 331 மனுக்களும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 12 மனுக்கள் என 343 மனுக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டதாகவும், அதன் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

News October 21, 2024

சங்கராபுரம் பகுதியை சேர்ந்த நிர்வாகி நியமனம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகியும், சங்கராபுரம் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் சன்னியாசி என்பவரை, அதிமுகவின் விவசாய பிரிவின் மாநில துணை செயலாளராக அக்கட்சியின் பொதுச் செயலாளர், முன்னாள் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நியமித்து இன்று (அக்டோபர் 21) அறிவித்துள்ளார்.

error: Content is protected !!