India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கு விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், கல்வராயன் மலையில் ஆம்புலன்ஸ் வசதியை உறுதி செய்ய வேண்டும்,சாலை வசதி மற்றும் மருத்துவ வசதிகளை ஏற்படுத்துவது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருக்கோவிலூரைச் சேர்ந்த அரசு பெண் மருத்துவரை கடந்த ஜீலை 29-ம் தேதி செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் தன்னை சிபிஐ அதிகாரி எனக் கூறி சுமார் 38 லட்ச ரூபாயைப் பெற்று மோசடியில் ஈடுபட்ட ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த பிரசாத் ராவ் என்பவரை நேற்று கள்ளக்குறிச்சி சைபர் கிரிம் போலீசார் ஆந்திராவிற்கு சென்று கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள அவரது தந்தை, தாய், மனைவி ஆகிய மூவரை தேடிவருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் இந்திலி ஜே ஜேநகர் அருகே சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சாலையைக் கடக்க முயன்ற போது, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் பாபு என்பவர் ஒட்டிச் சென்ற கார் மோதிய விபத்தில் அடையாளம் தெரியாத 55 வயது நபர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சின்னசேலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சியில் நடத்தபபடவுள்ள முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம்,நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய ஆட்சியர் பிரசாந்த், கள்ளக்குறிச்சியில் வரும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறும் போட்டிகளை சிறப்பாக நடத்த அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி சங்கராபுரம் ஒன்றியத்தில் புதுப்பட்டு, மூங்கில்துறைப்பட்டு கிராமத்திலும், தியாகதுருகம் ஒன்றியத்தில் நாகலூர் கிராமத்திலும், சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்தில் நயினார்பாளையத்திலும், கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் சிறுவத்தூர் கிராமத்திலும் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற உள்ளதாக இன்று ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறப்பான மருத்துவ சேவை புரிந்ததற்காக கள்ளக்குறிச்சி ராஜு மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் பாபு சக்கரவர்த்தி என்பவருக்கு இந்து தமிழ் திசை சார்பில் மருத்துவ நட்சத்திர விருதினை இன்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் வழங்கி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தேசிய அளவிலான தேக்வாண்டோ விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்ற கள்ளக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.நக் ஷத்ராவை இன்று ஆட்சியர் நேரில் அழைத்து சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினார். தொடர்ந்து ஆட்சியர் பிரசாந்த் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கான, மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் அரசு அலுவலர்கள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி, தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு இன்று நடைபெற்றது. இந்த மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டத்தில் குற்ற வழக்குகளை குறைப்பது குறித்தும், கோப்புக்கு எடுக்காத வழக்குகள் குறித்தும், உடனடியாக முடிக்க வேண்டிய வழக்குகள் குறித்தும் பல்வேறு விதமான ஆலோசனைகளை வழங்கினார்.
தமிழ்நாடு அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டுள்ள மகத்தான திட்டங்களில் ஒன்றான புதுமை பெண் திட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை 3,078 பேர் பயனடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.மேலும், இத்திட்டத்தினை 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவிகள் பயன்படுத்தி பயனடைய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.