India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சின்னசேலம் காவல் நிலையத்தில் 2024 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் அமைதியான முறையில் கொண்டாடுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று ஆகஸ்ட் 26-ம் தேதி சின்னசேலம் காவல் ஆய்வாளர் ஏழுமலை தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் சின்னசேலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விநாயகர் சிலை வைத்து வழிபடும் நபர்கள் பலர் கலந்து கொண்டனர்
சின்னசேலம் அருகே தேசிய நெடுஞ்சாலை விருதாச்சலம் டு சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று இருசக்கர வாகனத்தில் செல்லும்போது மாரிமுத்து (40) என்பவர் நிலை தடுமாறி சாலை ஓரத்தில் இருந்த புளிய மரத்தில் மோதி தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். பிரேதத்தை எஸ் ஐ திரு சந்திரன் கைப்பற்றி கள்ளக்குறிச்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தியாகதுருகத்தை சேர்ந்த ஏழுமலை என்பவர் இருசக்கர வாகனத்தில் புக்குளம் டாஸ்மாக் கடையிலிருந்து வந்து கொண்டிருந்தபோது உளுந்தூர்பேட்டை நோக்கிச் சென்ற சையத் இம்ரான் என்பவர் ஏழுமலை மீது நேற்று மோதினார்.இருவருக்கிடையே ஏற்பட்ட மோதலில் சையத் இம்ரான் மற்றும் அடையாளம் தெரியாத 20 நபர்கள் கும்பலாக வந்து தாக்கியுள்ளனர்.சையது இம்ரான் மற்றும் இருபது பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி ஆட்சியர் உத்தரவின்பேரில் தனக்கனந்தல் ஊராட்சி செயலாளர் ஜெகநாதன் தற்காலி பணிநீக்கம் செய்யப்பட்டார். தனக்கனந்தலில் நேற்று குடிநீர் குடித்த மக்கள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை, செங்குறிச்சி சுங்கச்சாவடியில் வரும் செப்.1ஆம் தேதி முதல் 5% முதல் 7% வரை சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது. மேலும் தமிழகத்தில் உள்ள விக்கிரவாண்டி, சமயபுரம், மதுரை, எலியார்பத்தி, ஓமலூர், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜா உட்பட 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை (ஆக.27) திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்தில் களமருதூர் கிராமத்திலும், உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் பல்லவாடி கிராமத்திலும், திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியத்தில் வேங்கூர் கிராமத்திலும், ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்தில் ரிஷிவந்தியம் கிராமத்திலும் ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
உளுந்தூர்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கிரஷாந்த் டான்ஸ் ஸ்டுடியோவின் நூறாவது நாள் வெற்றி விழாவை முன்னிட்டு இன்று நடைபெற்ற விழாவில் சின்னத்திரை பிரபல நடிகை தீபா பங்கேற்று, நிகழ்ச்சியில் சிறப்பான நடனத்திறனை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏரிகள், குளங்களில் இருந்து மண் எடுப்பதற்கு நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த தெரிவித்துள்ளார். ஏரி, குளங்களில் இருந்து மண் எடுப்பதை சிலா் தவறாக பயன்படுத்தப்படுவதாக புகாா்கள் வருகின்றன. எனவே, ஏரிகளில் மண் வெட்டி எடுக்கப்பட்ட அளவு மீறாமல் இருக்கும் பட்சத்தில் மீதமுள்ள அளவுகளுக்கு மீண்டும் மண் எடுக்க அனுமதி வழங்கப்படும்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு உட்பட்ட கரும்புகளை தனியார் ஆலைகளுக்கு ஏற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்து இடைத்தரகர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் எச்சரித்துள்ளார். ஆலையின் அங்கத்தினர்கள் கரும்புகளை தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு விற்காமல் கள்ளக்குறிச்சி -2 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு வழங்குமாறு ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் அறிவித்துள்ளார்.
சின்னசேலத்தில் திரௌபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. கோயிலுக்கான சொத்துக்கள் சின்னசேலம் முழுவதும் ஆங்காங்கே இருந்து வருகின்றன. இந்த நிலையில், அம்சா குளம் அருகே உள்ள 70 சென்ட் நிலத்தை தட்டுப்புல் வைப்பதற்கு மானியத்திற்கு விடப்பட்டது. இந்த இடத்தை தற்போது தனிநபர் ஷேக் தாவுத்தான் என்ற பெயரில் பட்டா (5965) என்ற எண்ணில் அரசு அதிகாரிகள் கொடுத்துள்ளனர். இதனை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.