Kallakurichi

News September 6, 2024

3 ஆசிரியர்களுக்கு விருது

image

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் ஆண்டுதோறும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சிறந்த ஆசிரியருக்கான விருது வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பகுதி சார்ந்த மூன்று ஆசிரியர்களுக்கு சிறந்த ஆசிரியர்களுக்கான விருது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் அவர்களால் இன்று வழங்கப்பட்டது.

News September 6, 2024

ஆதனூர் பள்ளி ஆசிரியருக்கு இராதாகிருஷ்ணன் விருது

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஆதனூர் ஊராட்சி பாச்சாப்பாளையம் அரசு பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வந்த சூரியகுமார் அவர்கள் தமிழக அரசின் இராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வுசெய்யப்பட்டார். இந்நிலையில் இன்று சென்னையில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் கரங்களால் விருது பெற்றார்.

News September 5, 2024

அதிமுக வாதம், வழக்கு விசாரணை செப்டம்பர் 10 தேதிக்கு மாற்றம்

image

கள்ளக்குறிச்சியில் தவறு நடந்துததற்கு ஆதாரமாக 73 பேரின் மரணங்கள் உள்ள நிலையில் இந்த வழக்கை ஏன் சிபிஐக்கு மாற்றக்கூடாது, கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணம் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கில் அதிமுக வாதம்.தமிழகத்தில் தடையை மீறி குட்கா விற்பனை செய்யப்படுவதாக கூறப்பட்ட வெறும் புகார் அடிப்படையில் அந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணை செப்டம்பர் 10 ஆம் தேதிக்கு மாற்றம்.

News September 5, 2024

மனப்பாச்சி கிராமத்தை விட்டு வெளியேறிய மக்கள்

image

வெள்ளிமலை அடுத்த வாரம் பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட மனப்பாச்சி கிராமத்தில் 70-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வசித்து வந்தார்கள். தற்போது அங்கு அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லை என்று கூறி அனைவருமே சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதிக்கு குடி பெயர்ந்து உள்ளதால் அந்த கிராமத்தில் மனிதர்கள் நடமாட்டமே இல்லாமல் வெறிச்சோடி உள்ளது.

News September 5, 2024

விசிக தலைவர் நாளை நேரில் ஆய்வு

image

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணி சார்பில் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு வரும் அக்டோபர் இரண்டாம் தேதி அன்று கள்ளக்குறிச்சி அருகே உள்ள உலகங்காத்தான் கிராமத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்த மாநாடு நடைபெற உள்ள இடத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து நாளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 5, 2024

கார் பனை மரத்தில் மோதி விபத்து

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் கடத்தூர் பகுதியைச் சேர்ந்த அற்புதவள்ளி தனது கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் காரில் இன்று கச்சிராயபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். நமச்சிவாயபுரம் அருகே கார் சென்று கொண்டிருந்த போது டயர் வெடித்து கார் பனை மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் அற்புதவள்ளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் 3 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News September 5, 2024

கள்ளக்குறிச்சி அருகே 300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் பங்காரம் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் இருந்து விற்பனையாளர் ரேஷன் அரிசி வியாபாரியிடம் மூட்டை மூட்டையாக ஆட்டோ மூலமாக கடத்திய ஏற்றி விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், இன்று விற்பனையாளர் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டு 300 கிலோ அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

News September 5, 2024

45 துணை பி.டி.ஓக்கள் பணியிடை மாற்றம் ஆட்சியர் உத்தரவு

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் 45 துணை பி.டி.ஓ.,க்கள் நேற்று பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கல்வராயன்மலையில் பணிபுரிந்த ஷபி கள்ளக்குறிச்சிக்கும், தியாகதுருகம் தினகர்பாபு ரிஷிவந்தியத்திற்கும், திருக்கோவிலூர் செல்வி திருநாவலூருக்கும், தியாகதுருகம் ஜெயசுதா கள்ளக்குறிச்சிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

News September 5, 2024

கல்வராயன் மலைக்கு வரும் உதயநிதி?

image

கல்வராயன் மலையில் அடிப்படை வசதிகள் செய்து தர சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்தது. இந்த விசாரணையில், முக்கிய அமைச்சர்கள் கல்வராயன் மலைக்குச் சென்று ஆய்வு செய்து மலைவாழ் மக்களின் நிலைமை அறிந்து வர வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், நாளை கல்வராயன் மலைக்கு உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் வருகை தந்து பல கிராமங்களில் ஆய்வு செய்ய உள்ளனர்.

News September 4, 2024

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் பொன்பரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராணி. இவர் இன்று காலை வீட்டை பூட்டிவிட்டு தனது காட்டிற்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பிய நிலையில், வீட்டின் வெளிப்பக்க கதவு மற்றும் உள்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 6 3/4 பவுன் தங்க நகை மற்றும் ஐயாயிரம் ரூபாய் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!