Kallakurichi

News September 10, 2024

முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி இன்று தொடக்கம்

image

தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் இன்று தொடங்குகின்றன. இந்த போட்டிகளை கள்ளக்குறிச்சி ஆட்சியர் மற்றும் ரிஷிவந்தியம் MLA வசந்தம் கார்த்திகேயன் மற்றும் கள்ளக்குறிச்சி MP மலையரசன் ஆகியோர் இணைந்து இன்று காலை 10:30 மணி அளவில் தொடங்கி வைக்க உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News September 9, 2024

கள்ளக்குறிச்சியில் புதிய பதவிகள்

image

புதிதாக தோற்றுவிக்கப்பட்ட செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களுக்கு சத்துணவுத் திட்ட செயலாக்கத்திற்கான புதியதாக பணியிடங்கள் தோற்றுவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா 7 பதவிகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. விரைவில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிய பதவிகளுக்கு அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

News September 9, 2024

கள்ளக்குறிச்சியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, புயல் சின்னமாக வலுவடைந்து வருவதால், தமிழகத்தின் வட மாவட்டங்களில், அடுத்த சில நாட்களுக்கு இடி மின்னலுடன் மழை நீடிக்கும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் பகிரவும்.

News September 9, 2024

பேருந்தை சிறை பிடித்து பெண்கள் சாலை மறியல்

image

சின்னசேலம் வட்டம் கீழ்க்குப்பம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சிறுமங்கலத்தில் புதிதாக அரசு மதுபானக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் ஈரியூர் செல்லும் நகரப் பேருந்தை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், வேறு இடத்திற்கு மதுபான கடையை கொண்டு செல்லுங்கள், எங்கள் ஊரில் வேண்டாம் என கோஷமிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

News September 8, 2024

கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் தகவல்

image

தியாகதுருகம் புறவழிச்சாலையில் அமைந்துள்ள மவுண்ட் பார்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தினமலர் நாளிதழ் சார்பில் பிரசுரமாகும் பட்டம் இதழின் வினாடி-வினா போட்டியினை செப்டம்பர் 9-ஆம் தேதியன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தொடங்கி வைத்து மாணவர்களிடையே சிறப்புரையாற்ற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 8, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (08.09.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களின் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 8, 2024

இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் பகிரவும்.

News September 8, 2024

சிசிடிவி கேமரா வைக்க நாளை உத்தரவு

image

கோமுகிஅணையில் விநாயகர் சிலை கரைக்க நாளை கள்ளக்குறிச்சி கச்சிராயபாளையம் சின்ன சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட சிலைகள் கோமுகி ஆற்றில் அந்த சிலைகள் கரைக்க உள்ளனர். இந்த இடத்தை மாவட்ட எஸ்பி ரஜத் சதுர்வேதி இன்று ஆய்வு செய்தார். அப்பொழுது அந்த பகுதியில் சிசிடிவி  கேமராக்கள் வைக்க உத்தரவிட்டார். உடன் இன்ஸ்பெக்டர் நந்தகுமார்சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் கார்த்தி உடன் இருந்தனர்

News September 8, 2024

விளையாட்டுப் போட்டிகள் குறித்து ஆட்சியர் அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2024 – 2025 ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் வரும் செப்.10ஆம் தேதி முதல் தொடங்கி வரும் செப்.24ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று அறிவித்துள்ளார். மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு ஆவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

News September 8, 2024

விளையாட்டுப் போட்டிகள் குறித்து ஆட்சியர் அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2024 – 2025 ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் வரும் செப்டம்பர் 10-ம் தேதி முதல் தொடங்கி வரும் செப்டம்பர் 24-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று அறிவித்துள்ளார். மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு ஆவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!