India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் பணியிடங்கள் நிரப்புவதற்காக 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் சார்பில் நாளை கள்ளக்குறிச்சியில் உள்ள 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது. பி.எஸ்.சி. நர்சிங் உள்ளிட்ட மருத்துவ உதவியாளருக்கு தேவையான படிப்பு முடித்தவர்கள் உரிய சான்றிதழுடன் நாளை கலந்து கொள்ளலாம் என மேலாளர் தெரிவித்தார்.
உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த கோவிந்தம்மாள் என்ற 80 வயதான முதிய பெண்மணி உடல்நிலை குறைவால் படுத்து படுக்கையாக வீட்டில் இருந்து உள்ளார். நேற்று இரவு வீட்டுக்குள் புகுந்த தெரு நாய்கள் இந்த பெண்ணை கடித்துக் குதறியது. இதை பார்த்த அவருடைய மருமகள் அஞ்சலி கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து அந்த பெண்ணை மீட்டனர். ஆனாலும் கோவிந்தம்மாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
கல்வராயன்மலை அடுத்த இன்னாடு கிராமத்தில் மலைவாழ் உண்டு உறைவிட துவக்கப் பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படிக்கின்றனர்.பள்ளியில் சமையல் செய்த பாத்திரங்களை மாணவியர் கழுவும் வீடியோ பரவியது.மாணவியரை சமையல் பாத்திரங்களை கழுவியது தொடர்பாக,பள்ளி தலைமை ஆசிரியர் ஜெபஸ்டீன்,சமையலர் ராதிகா ஆகியோரை தற்காலிக பணி நீக்கம் செய்து,கள்ளக்குறிச்சி மாவட்ட பழங்குடியினர் நலத்துறை அலுவலர் சுந்தரம் உத்தரவிட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (28.11.2024) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு முதல் முதுகலை படிப்புவரை படித்துள்ள பழங்குடியினர் இளைஞர்களுக்கு ‘உங்கள் வெற்றி எங்கள் நோக்கம்’ என்ற தலைப்பில் 30.11.2024 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கருமந்துறை அருகே கோவில் காடு கிராமத்தில் ஶ்ரீனித் இன்டர்நேஷனல் என்னும் மையத்தில் வேலைவாய்ப்பு திறன் வழிகாட்டுதல் நிகழ்வு நடைபெற உள்ளது. இதில்பங்கேற்று பயனடையுமாறு ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 30ஆம் தேதி காலை காரைக்காலுக்கும் மகாபலிபுரத்திற்கும் இடையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கும். இதன் காரணமாக, நாளை கள்ளக்குறிச்சியில் ஓரிரு இடங்களில் கனமழையும், வரும் 30ஆம் தேதி அதிகனமழை பெய்யும் என வானிலை மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன் எச்சரித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் ஒன்றியத்திற்குட்பட்ட திருப்பாலபந்தல் ஊராட்சியில் செயல்பட்டு வரும் நூலகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டு நூலகத்தின் செயல்பாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட ஊழியர்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
திருக்கோவிலூர் ஒன்றியத்திற்குட்பட்ட திருபாலப்பந்தல் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கலைஞரின் கனவு இல்ல வீட்டின் கட்டுமான பணிகளை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட அளவில் போக்குவரத்து சாலை விபத்துக்களை நிரந்தரமாக தடுக்கும் வகையில், வட்டார போக்குவரத்து அலுவலர், போலீசார் மற்றும் சாலை பாதுகாப்பு பணியாளர்கள், போக்குவரத்து துறை அலுவலர்கள் அனைவருக்கும் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் ஆலோசனை கூறினார். சாலை விபத்துகளை நிரந்தரமாக தடுக்கும் வகையில் அலுவலர்கள் ஊழியர்கள் உடனே இணைந்து ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளியில் நடந்த விளையாட்டு போட்டிக்கு மாவட்ட விளையாட்டு ஆய்வாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார். மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் 14, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு நீச்சல் போட்டி நடந்தது. 50, 100 மற்றும் 200 மீட்டர் தொலைவுக்கு மற்றும் 4 வகையான ‘ஸ்டைல்’களில் தனி,தனியாக போட்டி நடத்தப்பட்டது. வெற்றி பெறுபவர்கள் மாநில போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.
Sorry, no posts matched your criteria.