India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் 85 வயதுக்கு மேல் உள்ள வயதானவர்கள் வீட்டிலிருந்து வாக்களிக்க நடைபெற படுத்து உள்ளதால் அதனை தேர்தல் அலுவலருமான மற்றும் மாவட்ட ஆட்சியர் ஷரவன் குமார் அவர்கள் விளம்பாவூர் கிராம பகுதியில் இன்று மேற்பார்வையிட்டு வயதானவர் வாக்களிக்கும் முறையை அருகில் இருந்து பார்வையிட்டார்.
கள்ளக்குறிச்சி வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று பருத்தி வார சந்தை நடைபெற்றது. எல்.ஆர்.ஏ. ரக பஞ்சு 390 மூட்டைகள் விற்பனைக்கு எடுத்து வரப்பட்டன. எல்.ஆர்.ஏ. ரகம் குறைந்தபட்சம் ரூ.6,700க்கும், அதிகபட்சம் ரூ.7,780க்கும் விலை போனது. மேலும், 92 விவசாயிகள் கொண்டுவந்த 390 பஞ்சு மூட்டைகள், ரூ.9.17 லட்சத்துக்கு கொள்முதல் செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை திருவண்ணைநல்லூர் சாலையில் உள்ள மசூதியில் இந்தியா கூட்டணி வேட்பாளர் துரை. ரவிக்குமாருக்கு ஆதரவாக திமுக நகர செயலாளர் தலைமையில் திமுகவினர் வாக்கு சேகரித்து வருகின்றனர். இதில் உளுந்தூர்பேட்டை கைலாசநாதர் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினரும் செய்தியாளருமான ரமேஷ் பாபு உட்பட பலர் பங்கேற்றனர்.
கள்ளக்குறிச்சி ராஜா நகர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன். இவர் வழக்கம் போல் இரவு தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு சென்றார். மீண்டும் மறுநாள் காலை பார்த்த போது இரு சக்கர வாகனம் திருடு போனது தெரியவந்தது. இது குறித்த புகாரில் கிருபா கணேசன் என்பவரை நேற்று கள்ளக்குறிச்சி போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை அருகே உலக புகழ் பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை பெருவிழா நேற்று மாலை சாகைவார்த்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் முக்கிய விழாவான திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி 23ஆம் தேதியும், சித்திரை தேரோட்டம் 24 ஆம் தேதி நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கடைகள் மற்றும் வீடுகள் சொத்து வரி பாக்கியை செலுத்தாதவர்கள் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் செலுத்தினால் செலுத்தப்படும் தொகையில் 5 சதவீதம் திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், கள்ளக்குறிச்சி மக்கள் இதனை பயன்படுத்திக் கொண்டு சொத்து வரி பாக்கியை செலுத்தி சலுகைகள் பெற்றுக் கொள்ளுங்கள் என நகராட்சி செயல்கள் அலுவலர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி சின்னசேலம் தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட மாற்றுக்கட்சியினர் 20 பேர் இன்று திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் சத்தியமூர்த்தி அவர்கள் தலைமையில், என்கே சேகர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். சத்தியமூர்த்தி தலைமையில் கட்சியில் இணைந்த இருபது நபர்களுக்கும் பொன்னாடை போர்த்தி வரவேற்று கட்சியின் உறுதி மொழி படிவத்தை ஏற்றுக் கொண்டு கட்சியில் இணைந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் கள்ளச்சாராயம், கஞ்சா, லாட்டரி மற்றும் குட்கா விற்பனை போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வாணாபுரம் அடுத்த பழைய சிறுவங்கூரைச் சேர்ந்தவர் மூர்த்தி, மனைவி பேபி மனோரஞ்சிதம், (62). ஓய்வுபெற்ற அங்கன்வாடி மைய பொறுப்பாளர். இவர், நேற்று முன்தினம் இரவு, வீட்டிற்கு வெளியே சிமென்ட் சாலையில் துாங்கினார். அப்போது பழைய சிறுவங்கூரில் இருந்து பல்லகச்சேரிக்கு சென்ற மினி சரக்கு வேன் இவர் மீது ஏறியது. இதில் படுகாயமடைந்தவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பெஸ்கி உயர்நிலைப் பள்ளியில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலையொட்டி ஆசிரியர்களுக்கான தேர்தல் பயிற்சி வகுப்பு இன்று நடைபெற்றது. இதில் ஆசிரியர்களுக்கான பணிகள் பிரித்து வழங்கப்பட்டது. மேலும் தேர்தலை கையாளும் முறையை பற்றி வகுப்பில் கற்றுத் தரப்பட்டது.
Sorry, no posts matched your criteria.