India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மேட்டத்தூர் பகுதியில் அதிகாலை நடைபெற்ற கோர விபத்தில் ஆறு பேர் உயிரிழந்தனர். விபத்து நடைபெற்ற இடத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றார். அதிகாலை நடைபெற்ற விபத்து குறித்தும் போலீசாரிடம் கேட்டறிந்தார்.
உளுந்தூர்பேட்டையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் எக்ஸ் பதிவில், உளுந்தூர்பேட்டை சாலையோர மரத்தில் வேன் மோதியதில் 2 பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்தனர் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில், அச்சிறுமியின் தாய்மாமா செந்தில் முருகனை சிறப்பு புலனாய்வு போலீசார் சென்னையில் இன்று கைது செய்தனர். விசாரணைக்கு ஆஜராக பலமுறை சம்மன் அனுப்பியும், ஆஜராகாததால் கைது செய்து கள்ளக்குறிச்சிக்கு அழைத்து வருகின்றனர்.
தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான ஹெச்.ராஜா அக்டோபர் 10ஆம் தேதியன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். கட்சியின் வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பாக மாவட்ட வாரியாக ஆய்வு மேற்கொள்ள சுற்றுப்பயணம் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் கள்ளக்குறிச்சிக்கு வருகை தந்து, கட்சியின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளதாக பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் மதுவிலக்கு காவல்துறை சார்பில் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இதில் அப்பகுதியில் நடக்கும் மதுவிலக்கு தொடர்பான குற்றச் சம்பவங்கள் குறித்து தகவல் தெரிவிக்க மதுவிலக்கு போலீசாரின் தொலைபேசி எண்களும் குறிப்பிடப்பட்டுள்ளது. மதுவிலக்கு போலீசாரின் இத்தகைய முன்னெடுப்பு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.
கள்ளக்குறிச்சி பள்ளியில் அரசு பள்ளி ஆசிரியராக இருப்பவர் சாமிதுரை இவருக்கு நேற்று பசுமை முதன்மையாளர் என்பதற்கான விருதை மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வழங்கினார். இதையடுத்து, விருது பெற்ற ஆசிரியர் தன் தாய் தந்தையிடம் காண்பித்து ஆசி பெற்றார், மகன் விருது பெற்றதைக் கண்ட தாய் தந்தைகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கல்வராயன்மலையில் உள்ள மணியார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் சுமார் 52 பயனாளிகளுக்கு அவர்கள் பயன்படுத்தி வரும் விவசாய நிலங்களுக்கு வன உரிமைச் சான்று வழங்கும் நிகழ்ச்சி கல்வராயன் மலையில் இன்று நடைபெற்றது இதில் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் கலந்து கொண்டு வன உரிமைச் சான்றுகளை வழங்கினார் உடன் வனத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் இருந்தனர்
கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில் செப்.27ஆம் தேதி என்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நடைபெற உள்ளது. இதில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை அளித்து பயன்படலாம் என ஆட்சியர் கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சியில் பட்டாசு விற்பனை செய்வதற்கு தற்காலிக வெடிபொருள் விற்பனை உரிமம் பெற விருப்பம் உள்ளவர்கள் அரசு பொது சேவை மையத்தில் உரிய ஆவணங்களுடன் சென்று இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அரசு உத்தரவின்படி, தற்காலிக பட்டாசு உரிமம் கோரி அரசு பொது சேவை மையங்கள் மூலம் வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை செய்யப்படும் என அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி அருகே வாணாபுரம், அரியனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் செப்.28ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமிற்கு 8 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்த அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது. காலை 9 மணி முதல் 3 மணி வரை தங்கள் சுய விவரத்தை பதிவு செய்து கொள்ளலாம். 10,000 பேருக்கு மேல் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என மாவட்ட வேலைவாய்ப்பு வழிகாட்டும் மையம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.