India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் உதயசூரியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நாளை கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் காஞ்சிபுரம் தனியார் கல்லூரியில் பவள விழா நடைபெறுகிறது. இதில், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட வடக்கநந்தல் சங்கராபுரம், சின்னசேலம், கல்வராயன் மலை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஒன்றிய நகர ஊராட்சி நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததில் 68 பேர் உயிரிழந்த வழக்கை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி., போலீசார், 24 பேரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இதில், 24 பேரின் நீதிமன்ற காவல் நேற்று முடிவடைந்தது. காணொலி மூலம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தினர். தொடர்ந்து, 24 பேரின் நீதிமன்ற காவலை, வரும் அக்.10ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (26.09.2024) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
உளுந்தூர்பேட்டை அருகே ஒலையனூர் ஊராட்சி ஒன்றிய ஆதிதிராவிட நலத் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் துரையரசன், 3ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், தலைமையாசிரியரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆதிதிராவிட அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் ஆட்சியர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாவட்ட ஆட்சியர் கூட்டறங்கில் வரும் 27ஆம் தேதி விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடைபெறுகிறது. இதில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு அவர்களின் குறைகளை மனுக்கள் ஆகவும் நேரடியாகவும் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கலாம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஒலையனூர் அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர் துரையரசன் (52) என்பவர் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் செல்போன் மூலமாக ஆபாச படம் காட்டியதாக அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து இன்று ஆசிரியர் துரை அரசனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்
தென்செட்டியந்தல் கிராமத்தைச் சேர்ந்த கௌதமி, மகளிர் சுய உதவி குழு மூலமாக கடனாக வாங்கிய ரூ.47 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு 24ஆம் தேதி மதியம் கள்ளக்குறிச்சி – சின்னசேலம் நோக்கி பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, சின்னசேலம் அருகே வந்து பார்த்தபோது, பணத்தை காணவில்லை என கௌதமி சின்னசேலம் காவல் நிலையத்தில் நேற்று அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சங்கராபுரம் அருகே உள்ள புத்திராம்பட்டு கிராமத்தில் ஏரிக்கரை அடிவார பகுதியில் முனியப்பர் கோவில் அமைந்துள்ளது. அப்பகுதி மக்கள் குலதெய்வமாக வழிபட்டு வந்த நிலையில், கோவில் உண்டியலை மர்ம நபர்கள் உடைத்து, பணத்தை திருடிச் சென்றதோடு, சாமி சிலைகளை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சின்னசேலம் சேலம் தேசிய நெடுஞ்சாலை மின் பராமரிப்பு அலுவலகம் முன்பு இருசக்கர வாகனத்தில் கள்ளக்குறிச்சி நோக்கி வந்த வாலிபர் எதிரே வந்த காரில் மோதி விபத்துக்குள்ளானர். இதில், அவர் பலத்த காயம் அடைந்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும், அடிபட்டவரின் விவரம் மற்றும் விபத்து குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலை உத்தரவு வழங்காததை கண்டித்து, இன்று ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் மேல் சட்டை இல்லாமல் அலுவலகத்தின் வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Sorry, no posts matched your criteria.