India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பு.மலையனூர் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கார் ஓட்டிக்கொண்டு உளுந்தூர்பேட்டை நோக்கி சென்றார். அப்பொழுது அந்த கார் மலையனூர் என்ற இடத்தில் அருகே வரும்பொழுது அருகில் உள்ள பாசன வாய்க்கால் பகுதியில் நிலைத்தடுமாறி கீழே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் யாருக்கு எந்த காயமும் இல்லை.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாய தொழிலில் ஈடுபட்டுள்ள குறு, சிறு விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் அவர்களது குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் உறுப்பினராக பதிவு செய்யப்படவில்லை எனில் தங்கள் கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் அணுகி தங்களை உறுப்பினர்களாக சேர்த்து திட்டங்களை பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் இன்று அறிவித்துள்ளார்.
TN-Alert கைப்பேசி செயலி, பொதுமக்கள் வெப்பநிலை, மழை போன்ற வானிலை முன்னறிவிப்புகளை தமிழில் வழங்குகிறது.இதில் நான்கு நாட்களுக்கு முன்பான வானிலை அறிக்கைகள், தினசரி மழை அளவுகள், நீர்த்தேக்க நிலை மற்றும் வெள்ள அபாயம் போன்ற விவரங்களை அறிந்து கொள்ளலாம்.மேலும், பேரிடர் காரணமாக பாதிப்புக்குள்ளான மக்கள் புகார்களை பதிவு செய்யவும் கூகுள் பிளே ஸ்டோரில் tn-Alert பதிவிறக்கம் செய்யலாம்.
தமிழ்நாட்டில் மாவட்ட வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்தவும், பொது மக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்டங்களை கண்காணிக்கவும், இயற்கை சீற்றம், அவசர கால பணிகளை கூடுதலாக மேற்கொள்ளவும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பொறுப்பாளராக தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவை மீண்டும் நியமனம் செய்யப்படுவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கள்ளக்குறிச்சி , சங்கராபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்ட பாமக மாவட்ட செயலாளராக தமிழரசன் என்பவரை மீண்டும் நியமனம் செய்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இன்று உத்தரவிட்டு அறிக்கை வெளியீட்டுள்ளார். இவருக்கு பாமக நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
உளுந்தூர்பேட்டை அருகே பாதூர் காந்திநகர் என்ற இடத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற சங்கர் (விவசாயி). அந்த வழியாக சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் மோதி உயிரிழந்தார். விபத்தில் சிக்கி உயிரிழந்த சங்கரின் உடல் பிரேத பரிசோதனைக்காக விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து இந்த விபத்து குறித்து விழுப்புரம் ரயில்வே காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களின் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த மகேஸ்வரி பணியிடை மாற்றம் செய்யப்பட்ட நிலையில் கள்ளக்குறிச்சி நகராட்சியின் புதிய நகராட்சி ஆணையராக சரவணன் என்பவர் நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில், இன்று கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் கள்ளக்குறிச்சி நகராட்சியின் புதிய நகராட்சி ஆணையராக சரவணன் சற்றுமுன் பொறுப்பேற்று கொண்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், காட்டுநெமிலி கிராம ஊராட்சியை உளுந்தூர்பேட்டை நகராட்சியுடன் இணைக்கப்போவதாக அறிந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு எங்களை நகராட்சியுடன் இணைக்க கூடாது என முழக்கமிட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு சிட்கோ தொழிற்பேட்டைகளில் காலி தொழில்மனைகள் விற்பனைக்கு தயாராக உள்ளது. இதற்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட காலி மனைகளை பார்வையிட கடலூர் செம்மண்டலம் சிட்கோ தொழிற்பேட்டை கிளை மேலாளரை நேரிலோ தொலைபேசி மூலமாக தொடர்பு கொள்ளலாம் என இன்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.