Kallakurichi

News October 14, 2024

மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் வேண்டுகோள்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள முகநூல் அறிக்கையில் இன்று அக்டோபர் 14ஆம் தேதி மதியம் 12 மணி முதல் 3 மணி வரை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய பகுதிகளில் தலா 3 சென்டிமீட்டர் மழைப்பொழிவு பதிவாக வாய்ப்பு இருப்பதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

News October 14, 2024

கள்ளக்குறிச்சியில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கும் நிலையில், இன்று காலை10 மணி வரை தமிழகத்தின் 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று காலை 10 மணி வரை கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என ஆட்சியர் அறிவிப்பு

News October 13, 2024

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் (13.10.2024) இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் அல்லது 100 என்ற எண்ணை டயல் செய்யலாம் என மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது.

News October 13, 2024

TN-AIert அ பதிவிறக்கம் செய்து மக்கள் தகவல் தெரிவிக்கலாம்

image

பேரிடர் காலத்தில் பொதுமக்கள் TN-AIert ஆஃப் கைப்பேசி பதிவிறக்கம் செய்து பொதுமக்கள் வெப்பநிலை மழை போன்ற வானிலை முன்னறிவிப்புகள் தமிழில் வழங்குகிறது இதில் நான்கு நாட்களுக்கு முன்பான வானிலை அறிக்கைகள் தினசரி மழை அளவுகள் வெள்ள பாதிப்பு போன்ற தகவல்கள் அறிந்து கொள்ளலாம் ஆகையால் இந்த ஆப் ப்ளே ஸ்டோர் மூலமாக பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் பிரசாந்த் தகவல் தெரிவித்துள்ளார்.

News October 13, 2024

மல்யுத்தபோட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கல்

image

கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மஹாலில் நேற்று நடைபெற்ற மாநில அளவிலான கை மல்யுத்த போட்டியில் வெற்றி பெற்ற வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு கள்ளக்குறிச்சி நகர மன்ற தலைவர் சுப்புராயலு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் மற்றும் பரிசுத்தொகையினை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிகழ்வில் தமிழ்நாடு கை மல்யுத்த சங்கத்தின் மாநில செயலாளர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News October 12, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களின் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 12, 2024

ஆண்களுக்கு இலவச பயணம் இல்லையா ?

image

கள்ளக்குறிச்சி தானம் பகுதியில் இருந்து தியாகதுருகம் செல்லும் அரசு பேருந்தில் ஏறிய, இளைஞர் விஜய் என்பவர், டிக்கெட் எடுக்காமல் பயணித்துள்ளார். அவரிடம் நடத்துநர் டிக்கெட் கேட்டபோது, பெண்களுக்கு மட்டும்தான் இலவச பயணமா, ஆண்களுக்கு கிடையாதா எனக் கேட்டு தகராறு செய்துள்ளார். இதனால் விஜய்யை கீழே இறக்கிவிட்டுள்ளனர். ஆத்திரமடைந்த விஜய், ஓட்டுநரை கல்லால் தாக்கினார். இதில் ஓட்டுநரின் தலையில் காயம் ஏற்பட்டது.

News October 12, 2024

கள்ளக்குறிச்சியில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சாா்பில் அக்.18ஆம் தேதி சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் தியாகதுருகம் சாலையில் உள்ள தனியாா் அரிசி ஆலை உரிமையாளா் சங்க திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளாா். காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை நடைபெறும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

News October 11, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களின் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 11, 2024

திமுக நிர்வாகிகளுக்கு எம்.எல்.ஏ. வேண்டுகோள்

image

எழுத்தாளரும், மூத்த பத்திரிகையாளருமான முரசொலி செல்வம் நேற்று காலமானார். இந்நிலையில், திமுக தலைமை கழகத்தின் அறிவிப்பை ஏற்று உடனடியாக திமுக கொடியை அரைக்கம்பத்தில் தொடர்ந்து 3 நாட்கள் வரும் அக்.12ஆம் தேதி வரை பறக்க விட வேண்டும் என்று கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும், ரிஷிவந்தியம் எம்எல்ஏவான வசந்தம் கார்த்திகேயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

error: Content is protected !!