India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சித்தோடு வெல்லம் சொசைட்டியில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 30 கிலோ எடையில், 3900 மூட்டை நாட்டு சர்க்கரை வரத்தானது. ஒரு மூட்டை, 1150 முதல், 1230 ரூபாய்; உருண்டை வெல்லம், 2,300 மூட்டை வரத்தாகி ஒரு மூட்டை, 1300 ரூபாய் முதல் 1410 ரூபாய்; அச்சு வெல்லம், 340 மூட்டை வரத்தாகி ஒரு மூட்டை 1340 ரூபாய் முதல் 1370 ரூபாய் வரை விற்பனையானது. கடந்த வாரத்தைவிட, நாட்டு சர்க்கரை, உருண்டை வெல்லம் வரத்து அதிகரித்துள்ளது.
மறைந்த சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் நேற்று காலமானார். சென்னையில் வைக்கப்பட்டுள்ள அவர் உடலுக்கு கோபிசெட்டிபாளையம் திராவிடா் கழகத்தின் சார்பில் அதன் மாவட்ட தலைவர் சென்னியப்பன் சென்று செலுத்தினார். திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் உடன் இருந்தார்
ஈரோடு மாவட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் நேற்று ஈரோடு மாவட்டம் முழுவதும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. ஈரோடு, பெருந்துறை, கொடுமுடி, பவானி,அந்தியூர், சத்தியமங்கலம் போன்ற அனைத்து பகுதிகளிலும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் மொத்தம் 628 வழக்குகள் எடுக்கப்பட்டு, 228 வழக்குகள் தீர்த்து வைக்கப்பட்டன.
பெரியார் குடும்பத்தை சேர்ந்தவரும், ஈரோடு கிழக்கு எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இன்று (15/12/2024) பிற்பகல் 3 மணிக்கு ஈரோடு அரசு மருத்துவமனை அருகிலுள்ள காமராசர் சிலையிலிருந்து பன்னீர்செல்வம் பூங்கா பெரியார் சிலை வரை அமைதி ஊர்வலம் நடைபெற உள்ளது. இதில் அனைவரும் பங்கேற்க தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ. சென்னையில் காலமானார். அவரது இரங்கல் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்த ஈரோட்டை சேர்ந்த காங். கட்சியினர், உடனடியாக சென்னை விரைந்தனர். சென்னையிலேயே இறுதி சடங்கு நடைபெற உள்ள நிலையில், காங். நிர்வாகிகள், தொண்டர்கள், அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர், பொதுமக்கள் உள்ளிட்டோர், அஞ்சலி செலுத்த அணி, அணியாக சென்னைக்கு புறப்பட்டு சென்றனர்.
ஈரோடு மாவட்டத்தில், 2024-25ஆம் ஆண்டில் வரும் டிசம்பர் 16ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி வரை கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இந்த தடுப்பூசி முகாம் 111 குழுக்கள் மூலம் 3,08,500 கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. எனவே ஈரோடு மாவட்டத்தில் உள்ள கால்நடை வளர்ப்போர் இம்முகாம்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ ஆவார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வெற்றிபெற்ற திருமகன் ஈவெரா கடந்த வருடம் காலமானார். அதைத் தொடர்ந்து அவருடைய தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் இன்று அவர் காலமானார். அதன் காரணமாக 2ஆவதாக அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் வர இருக்கிறது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவனின் இன்று காலமானார். இந்நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவனின் மறைவால் மிகுந்த வேதனை அடைகிறேன். அவரது இழப்பால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் பேரியக்கத்தின் தோழர்களுக்கும், ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ-வுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று காலமானார். இவர் கடந்த ஒரு வாரம் முழுவதும் தனியார் மருத்துவமனையில் சிசிக்கை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மருத்துவமனைக்கு விரைந்த காங்., கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, மருத்துவர்கள் அவரைக் காப்பாற்ற முயற்சித்து வருகிறார்கள் எனத் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.