India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள நல்லாம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.2.11 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பள்ளி கட்டடத்தினை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி திறந்து இன்று ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.முன்னதாக, ரூ.30.10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட குள்ளம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தினை திறந்து வைத்தார்.
இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய மாநாடு ஐதராபாத்தில் டிச.27,28இல் நடைபெற்றது. இந்த மாநாட்டில், இந்திய மருத்துவ சங்க தேசிய நிர்வாகிகள், தமிழ்நாடு இந்திய மருத்துவ சங்க மாநில தலைவர் மருத்துவர் கே.எம்.அபுல்ஹசனுக்கு சிறந்த மாநில தலைவர் என்ற விருதினை வழங்கினர். மருத்துவர் அபுல்ஹசன் தமிழ்நாடு இந்திய மருத்துவ சங்க தலைவராக பொறுப்பேற்ற பிறகு ஆருயிர்-அனைவரும் உயிர் காப்போம் திட்டத்தை செயல்படுத்தினார்.
ஒலகடம் பகுதியைச் சேர்ந்தவர் டெல்லி செல்வராஜ் (70), டெல்லியில் இவர் துணி வியாபாரம் செய்து வந்தார். ஒலகடத்தில் தனியாக தங்கி இருந்தபோது கடந்த 15 நாட்களுக்கு முன்பு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். வெள்ளிதிருப்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். நகைக்காக கொலை செய்த குற்றத்திற்காக அசோக்குமார் (24), திலீபன் (20) மற்றும் 15 வயது சிறுவன் உள்ளிட்ட 3 பேரை போலீசார் நேற்று கைதுசெய்தனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்தும், கைதான ஞானசேகரன் செல்போனில் சார் சார் என யாரிடம் பேசினார் என்பதை காவல்துறையினர் மறைப்பதாக கூறியும், ‘யார் அந்த சார்?’ என்ற தலைப்பில், பவானிசாகர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட சத்தி சுற்று வட்டாரப்பகுதிகளில், பல்வேறு இடங்களில், அதிமுக சார்பில் சுவர்களில் ஒட்டப்பட்ட போஸ்டர், பொது மக்களுடைய பேசும் பொருளாக மாறி உள்ளது.
கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகரில் இருந்து, சேலத்துக்கு தக்காளி லோடு ஏற்றிக்கொண்டு, பொலிரோ பிக் அப் வேன் சென்றது. வேணை சேலம் மேட்டூர் பகுதியை சேர்ந்த, செல்வராஜ் என்பவர் ஓட்டி வந்துள்ளார். வேன் திம்பம் மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக, 2வது கொண்டை ஊசி வளைவில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோட்டில் ‘புட் பாய்சன்’ ஏற்பட்டு, 3 பேர், ஈரோடு அரசு மருத்துவமனையில், உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டிருப்பதாக, உணவு பாதுகாப்பு துறைக்கு கிடைத்தது. அதன்பேரில், அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்தினர். அதில் ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள ஒரு கடையில், சிக்கன் ரைஸ் பார்சல் வாங்கி சாப்பிட்ததால் அவர்களுக்கு, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது தெரியவந்தது. சம்பந்தப்பட்ட உணவகத்தை தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டது.
ஈரோடு, அம்மாபேட்டை, பாரதியார் வீதியில், அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ கதிரி பெருமாள் திருக்கோயில் உள்ளது. இக்கோவிலில், வைகுண்ட ஏகாதசி, சொர்க்கவாசல் திறப்பு, மஹா உத்ஸவம் 2025 ஜனவரி 10ஆம் தேதி (வெள்ளிக்கிழமை), காலை 5.30 மணிக்கு நடைபெற உள்ளது. அன்றைய தினம் முதலில், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ கதிரி பெருமாள் பிரகார உள்புறப்பாடும். அதனை தொடர்ந்து பரமபதவாசல் (சொர்க்கவாசல்) நடை திறக்கப்பட உள்ளது.
ஈரோடு, மாதவகிருஷ்ணா வீதியில், ஈரோடு நகர காவல் ஆய்வாளர் கோமதி தலைமையிலான போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்குள்ள ஒரு பெட்டி கடையில், புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே கடைக்காரரான ஈரோடு கிருஷ்ணம்பாளையம் ராமமூர்த்தி நகரை சேர்ந்த சுந்தரத்தின் மனைவி சாந்தியை (50), போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம் தொப்பூரில் இருந்து, கோவை நோக்கி துணி பண்டல்கள் ஏற்றிச் சென்ற லாரியை, டிரைவர் சிவா என்பவர் ஓட்டி வந்துள்ளார். அப்போது ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அடுத்த நெருஞ்சிப்பேட்டை பகுதியில் லாரி வந்து கொண்டிருந்தபோது, லாரியின் பின்பக்க டயர் வெடித்துள்ளது. அப்போது லாரி சாலையில் இடது புறமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரி ஓட்டுனர் சிவா எவ்வித காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
புத்தாண்டு பிறக்க இன்னும் 3 நாட்களே உள்ளன. இசை, வாணவேடிக்கை என பல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. ஈரோடு பார்க் பகுதியில் அன்று சிலர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட முயல்வர். இதனால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட உள்ளது. மேலும் புத்தாண்டு கொண்டாட கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். அவை: பைக் ரேசில் ஈடுபடக் கூடாது, மது அருந்தி வாகனம் ஓட்டக் கூடாது என கட்டுப்பாடுகள் விதித்தனர்.
Sorry, no posts matched your criteria.