India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கினார். இதில் மாவட்ட மகளிர் உரிமைத்தொகை, வீட்டுமனைப்பட்டா, தார் சாலை வசதி போன்ற குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ்வழியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கும் புதுமைப்பெண் திட்டத்தில்மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா துவக்கி வைத்து, உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு வங்கி பற்று அட்டையை வழங்கினார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-4 போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜன.8ம் தேதி தொடங்கவுள்ளன. எனவே இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் தங்களது விவரங்களை https://forms.gle/3FNSWCaHj9CKRqwW6 என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தார்.
ஈரோடு – ஜோலார்பேட்டை முன்பதிவு இல்லாத எக்ஸ்பிரஸ் ரயில் (06412) இன்று (டிச.31) காலை 6 மணிக்கு ஈரோட்டில் இருந்து புறப்படுகிறது. இந்த ரயில் திருப்பத்தூரில் இருந்து ஜோலார்பேட்டை வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல் ஜோலார்பேட்டை – ஈரோடு ரயில் (06411) நாளை ஒரு நாள் ஜோலார்பேட்டை – திருப்பத்தூர் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் மதியம் 3:21 மணிக்கு திருப்பத்தூரில் இருந்து புறப்படுகிறது.
ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது. இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவி உபகரணங்கள் வேண்டி, கடனுதவி, நில ஆக்கிரமிப்பு மற்றும் காவல் துறை நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து, மொத்தம் 238 மனுக்கள் வரப்பெற்றன.
வரும் 31ஆம் தேதி இரவு, புத்தாண்டு பிறப்பையொட்டி, ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். அதில், புத்தாண்டு கொண்டாட்டங்கள் இரவு ஒரு மணிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும். இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் அதிக வேகத்துடன் செல்லக்கூடாது, வீலிங் சாகசங்கள் செய்யக்கூடாது, அவ்வாறு மீறி செய்தால் இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் பாரத தர்ஷன் குடும்ப சங்கமம் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, அண்ணாமலை சவுக்கடி போராட்டம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பதில் அளித்த இல.கணேசன், அண்ணாமலை பாஜகவை சேர்ந்தவர், நான் பாஜகவில் இல்லை என்று பதில் அளித்தார்.
தாராபுரம் அருகே பழனி முருகன் கோயிலுக்குப் பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதிய விபத்தில் பவானி கூடகரையைச் சேர்ந்த ராமன் (54) என்பவர் பலியானார். மேலும், பவானி கூட கரையைச் சேர்ந்த வினையன், பொன்னுச்சாமி, சுந்தரம், துரையன், அமுதராஜ் ஆகிய 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மக்கள், 01.01.2009க்கு பின்னர் பிறந்து தங்களது பிறப்புச் சான்றிதழில் பெயர் பதிவேற்றம் செய்யாதவர்கள் தங்கள் பெயரை ரூ.200 செலுத்தி ஏற்கனவே பிறப்பு சான்றிதழ் பெற்ற அலுவலகத்தில் டிசம்பர் 31க்குள் பதிவு செய்ய வேண்டும் என ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள நல்லாம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.2.11 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பள்ளி கட்டடத்தினை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி திறந்து இன்று ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.முன்னதாக, ரூ.30.10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட குள்ளம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தினை திறந்து வைத்தார்.
Sorry, no posts matched your criteria.