Erode

News January 3, 2025

ஈரோடு: 9,856 கடைகளில் ஆய்வு

image

ஈரோடு மாவட்டத்தில் உணவகங்கள், பேக்கரிகள், தேநீர் கடைகள், இறைச்சி கடைகள் உள்ளிட்ட கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அப்போது ஆய்வு நடத்தி வருகின்றன. அந்த வகையில் கடந்த 2024-ம் ஆண்டில் ஈரோடு மாவட்டத்தில் 9,856 கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு மேற்கொண்டது. அதில் தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்த 349 கடைகள் கண்டறியப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது என மாநகராட்சி அறிவித்தது.

News January 3, 2025

ஈரோட்டில் கலைத்திருவிழா தொடங்கியது

image

ஈரோடு மாவட்டத்தில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், அரசு பள்ளிகளில் 9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு, மாநில அளவிலான கலைத்திருவிழா இன்று தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது. கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் நடந்த விழாவை, அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார். இன்று 2,660 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். நாடகம், நடனம், நாட்டுப்புற பாடல் போன்ற போட்டிகள் நடைபெற்றன.

News January 3, 2025

ஈரோடு அரசு மருத்துவமனையில் 7,45,056 பேர் சிகிச்சை

image

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை மல்டி ஸ்பெசியலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இங்கு கடந்த ஆண்டு மட்டும், 7 லட்சத்து 45 ஆயிரத்து 56 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். இதில் 52 ஆயிரத்து 321 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றனர். 2,580 புற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 17,053 பேர் சி.டி. ஸ்கேன், 54,421 பேர் எக்ஸ்ரே, 26,061 பேர் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுத்துள்ளனர்.

News January 3, 2025

ஈரோட்டில் நாளை மறுநாள் மாரத்தான் போட்டி

image

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில், மாணவ மாணவிகளுக்கு, மாரத்தான் போட்டி, ஈரோடு வ உ சி விளையாட்டு மைதானத்திலிருந்து, நாளை மறுநாள் (ஜன.5) காலை 6 மணிக்கு தொடங்குகிறது. 17 முதல் 25 வயது, 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆகிய பிரிவுகளாக நடத்தப்படும் இந்த போட்டியில், முதல் 3 இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கு முறையே ரூ.5,000, ரூ.3,000, ரூ.2,000 பரிசுகள் வழங்கப்படுகிறது.

News January 3, 2025

ஈரோட்டில் நாளை சைக்கிள் போட்டி

image

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில், மாணவ மாணவிகளுக்கு, சைக்கிள் போட்டி, ஈரோடு கனிராவுத்தர்குளம் சேமூர் அம்மன் நகரில், நாளை (ஜன.4) காலை 7 மணிக்கு தொடங்குகிறது. 13, 15, 17 ஆகிய வயதுக்குட்பட்டவர்களுக்கு, தனித்தனி பிரிவுகளாக நடத்தப்படும் இந்த போட்டியில், முதல் 3 இடங்களில் வெற்றிபெறும் மாணவ மாணவிகளுக்கு, முறையே ரூ.5,000, ரூ.3,000, ரூ.2,000 பரிசுகள் வழங்கப்படுகிறது.

News January 3, 2025

சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவர் கைது

image

ஈரோடு, வீரப்பம்பாளையம் பிரிவு பகுதியில், சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக, ஈரோடு வடக்கு போலீசாருக்கு, ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட, புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை சேர்ந்த அருண்பாண்டியன் (37) என்பவரை, போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.1,680 மதிப்பிலான, 12 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

News January 2, 2025

ஈரோடு: கீழே விழுந்து மின் ஊழியர் பலி!

image

கோபி அருகே கொளப்பள்ளூரை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. இவர் கெட்டி செவியூர் மின்வாரிய அலுவலகத்தில், பணியாற்றி வருகிறார். கெட்டிசெவியூர் அரசு பள்ளி அருகே உள்ள, மின் கம்பத்தில், பழுது பார்க்க ஏறும் போது, 20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்தவர், தலையில் அடிபட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து சிறுவலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 2, 2025

ஈரோடு: அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ் 

image

பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு, மாநில அளவிலான கலைத்திருவிழா நாளை (ஜன.3) மற்றும் நாளை மறுநாள் நடக்கிறது. 9-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான கலைத்திருவிழா ஈரோடு மாவட்டத்தில் கொங்கு கலை அறிவியல் கல்லூரி, இந்துஸ்தான் அறிவியல் வணிகவியல் கல்லூரி, கங்கா பள்ளி ஆகிய இடங்களில் நடத்தப்படுகிறது.

News January 2, 2025

இரண்டு புதிய நகராட்சிகள் உருவாக்கம்

image

ஈரோடு மாவட்டம் பெருந்துறை, கவுந்தப்பாடி ஆகிய இரண்டு புதிய நகராட்சிகளை உருவாக்கியுள்ளது. தமிழகத்தில் 13 புதிய நகராட்சிகளை உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில், பெருந்துறை பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. கவுந்தப்பாடி ஊராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, இந்த நகராட்சியுடன் சலங்கபாளையம் மற்றும் பி.மேட்டுப்பாளையம் பேரூராட்சிகள் இணைக்கப்படுகின்றன.

News January 2, 2025

விவசாயிகளுக்கு அழைப்பு

image

தமிழ்நாடு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, ஈரோடு விற்பனைக்குழு பவானி ஒழுங்குமுறை கீழ்கண்ட வேளாண் பொருட்கள் விற்பனைக்கு தேவைப்படுகிறது. 100 கிலோ கம்பு, தினசரி 200 கிலோ கிளிமூக்கு மாங்காய், தர்பூசணி மற்றும் முலாம் பழம் போன்றவை தேவை உள்ளது என வேளாண்மை துணை இயக்குநர்/செயலாளர்,  தெரிவித்துள்ளார். கூடுதல் விவரத்திற்கு (99444-47261), (99444-47261) என்ற எண்களை அழைக்கலாம்.

error: Content is protected !!