Erode

News January 5, 2025

தேனீக்கள் கடித்து முதியவர் பலி

image

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (60). இவரது மகன் அருள் (36). மீன் பிடி தொழில் செய்து வரும் அருள், அக்காள் சரண்யா, தந்தை தங்கராஜ் ஆகியோர் பாசூர் காவிரிக்கரை பகுதியில் தென்னந்தோப்பில் மீன் பிடி வலையை பிரித்து கொண்டு இருந்தனர். அப்போது தேனீக்கள் கடித்ததில் தங்கராஜ் உயிரிழந்தார். மற்ற 2 பேரும் காயமடைந்தனர்.

News January 4, 2025

‘ரேஷன் கடைகளில் கருவிழி கருவி பொருத்த நடவடிக்கை’

image

ஈரோடு, தனியார் திருமண மண்டபத்தில் தமிழக அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் கருத்தரங்கு தொடங்க விழா இன்று (ஜன.4) நடைபெற்றது. இதில் அமைச்சர் அர.சக்கரபாணி கலந்துகொண்டார். அப்போது கைரேகை அடிப்படையிலான ரேஷன் அட்டையில் சில சிக்கல்கள் உள்ளதால், மாநிலத்தில் உள்ள 35,000 ரேஷன் கடைகளிலும் கருவிழி கருவி பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.

News January 4, 2025

ஈரோடு மாவட்ட போலீசார் எச்சரிக்கை! 

image

ஈரோடு மாவட்ட மக்கள் போலி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம். சமூக வலைதள பக்கங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும். வங்கி கணக்கு மற்றும் ஓடிபி எண்களை யாரிடமும் பகிர வேண்டாம். தெரியாத இணைப்பை கிளிக் செய்யவோ அல்லது மற்றவருக்கு அனுப்பவோ கூடாது என ஈரோடு மாவட்ட போலீசார் எச்சரித்துள்ளனர். மேலும் தொடர்புக்கு சைபர் கிரைம் எண்ணான 1930ஐ தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர். இதை மற்றவர்களுக்கும் Share பண்ணுங்க!

News January 4, 2025

இடைத்தேர்வில் சஞ்சய் சம்பத் போட்டியிட காங்., தீர்மானம்

image

ஈரோடு மாநகர் மாவட்ட காங். கட்சி நிர்வாகிகள் கூட்டம் ஈரோட்டில் மாவட்ட தலைவர் திருச்செல்வம் தலைமையில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் மறைந்த ஈவிகேஎஸ்.இளங்கோவனுக்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து அவரது மகன் சஞ்சய் சம்பத் வரும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

News January 4, 2025

பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் வினியோகம்

image

தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன் வினியோகம் நேற்று ரேஷன் கடை பணியாளர்கள் வீடு வீடாக சென்று டோக்கன் வினியோகம் செய்தனர். ஈரோடு மூலப்பாளையத்தில் உள்ள ரேஷன் கடை பணியாளர் அருகில் உள்ள வீடுகளுக்கு சென்று நேற்று பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன் விநியோகம் செய்தனர். இந்த டோக்கன் வருகிற ஜனவரி 8-ம் தேதி வரை வீடு வீடாக சென்று வழங்கப்படும். ஜன. 9 அன்று முதல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். 

News January 4, 2025

சிறுத்தை குட்டிகள் நடமாட்டம்

image

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட ஆசனூர் வனப்பகுதியில் யானை, சிறுத்தை, புலி போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக ஆசனூர் வனப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் சமீப காலமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்று ஆசனூர் வனப்பகுதியில் உள்ள சாலையில் 2 சிறுத்தை குட்டிகள் நடனமாடியதை கண்டு அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றன.

News January 4, 2025

ஈரோடு என பெயர் எப்படி வந்தது?

image

நம்மில் பலருக்கு ஊர் பெயர் எப்படி வந்தது என அவ்வப்போது சந்தேகம் எழும். அந்த வகையில் “ஈரோடு” என்ற பெயர் எப்படி வந்தது என பார்ப்போம். இந்த ஊரியில் உள்ள பெரும்பள்ள ஓடை, பிச்சைக்காரன் பள்ள ஓடை என்ற இந்த 2 ஓடைகள் சேர்ந்தது தான் ஈரோடை. இதை தான் காலப்போக்கில் “ஈரோடு” என்றதாக வரலாற்றாசிரியர்கள் சொல்கின்றனர். ஈரோடு மக்களே இதே போல் உங்கள் ஊர் குறித்த வெவ்வேறு வரலாறு இருந்தால் கமெண்ட் பண்ணுங்க.

News January 3, 2025

ஈரோடு தலைப்புச் செய்திகள்

image

1. ஈரோடு மாவட்டத்தில் வேலுநாச்சியார் பிறந்ததினம் அனுசரிக்கப்பட்டது.
2.ஈரோடு அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் தானம்.
3.ஈரோட்டில் கலைத்திருவிழா தொடங்கியது.
4.ஈரோட்டில் நாளை சைக்கிள் போட்டி மாணவ மாணவிகளே ரெடி ஆகிக்கோங்க!
5. கர்நாடக மது பாக்கெட் வைத்திருந்தவர் கைது

News January 3, 2025

ஈரோடு அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் தானம்

image

ஈரோடு அரசு மருத்துவமனையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து தாய்ப்பால் வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு தாய்மார்களிடம் இருந்து தாய்ப்பால் தானமாக பெறப்படுகிறது. கடந்த 4 மாதங்களில் தாய்மார்களிடம் இருந்து, 83 லிட்டர் தாய்ப்பால் தானமாக பெறப்பட்டுள்ளது. இதன் மூலமாக 395 பச்சிளம் குழந்தைகள் பயன் அடைந்தனர்.

News January 3, 2025

ஈரோடு அரசு மருத்துவமனையில் 2,820 குழந்தைகள் பிறப்பு

image

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டில், கடந்த ஆண்டில், 2,820 குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் 1,911 குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலமாக பிரசவம் செய்யப்பட்டன. இதேபோல் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 12,430 பேருக்கு நாய் கடி சிகிச்சையும், 383 பேருக்கு பாம்பு கடி சிகிச்சையும் வழங்கப்பட்டதாக மருத்துவமனை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் தெரிவித்தார்.

error: Content is protected !!