Erode

News January 6, 2025

‘நம்ம ஊரு திருவிழா’ நிகழ்ச்சி

image

ஈரோடு அடுத்த சித்தோட்டில் உள்ள டெக்ஸ்வேலியில் விழாக்காலங்களில் நிர்வாகம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அதன்படி, 2025ஆம் ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டு ‘நம்ம ஊரு திருவிழா’ நிகழ்ச்சி ஜனவரி 12ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், உரி அடித்தல், சிலம்பாட்டம், கோலப்போட்டி, குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள் இலவச அனுமதியுடன் நடைபெற உள்ளது.

News January 6, 2025

மாவட்ட அணைகளின் நீர் இருப்பு நிலவரம்

image

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் மொத்த கொள்ளளவான 105 அடியில் தற்போது 97.5 அடியாகவும் நீர் நீர் வரத்தானது 375 கனாடியாகவும் நீர் வெளியேற்றமானது 900 கனஅடி ஆகவும் உள்ளது. குண்டேரிப்பள்ளம் (41.75) வரட்டுப்பள்ளம் (33.46) ஆகிய இரண்டு அணைகளிலும் முழு கொள்ளளவும் நிரம்பி வழிகிறது. பெரும்பள்ளம் 30.84 அடியில் தற்போது 21.95 கனஅடியாக நீர் இருப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

News January 6, 2025

தீ வைத்து ஒருவர் உயிரிழப்பு

image

புளியம்பட்டி நேருநகர் வீதியில் குடியிருந்து வருபவர் வினோத் (35). திருப்பூர் பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவர் வீட்டில் யாரும் இல்லாத போது நேற்று இரவு 10 மணி அளவில் தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டதில் படுகாயமடைந்த நிலையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 6, 2025

சிறப்பு ரயில் அறிவிப்பு

image

மகாகும்பமேளாவை முன்னிட்டு ஈரோடு வழியே கயாவுக்கு சிறப்பு இரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திருவனந்தபுரம் வடக்கு – கயா சிறப்பு இரயில் ஜன.7, 21, பிப்., 4ல் மதியம் 2 மணிக்கு புறப்பட்டு கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியே வெள்ளி அதிகாலை 1:30க்கு கயாவை செல்லும். மறுமார்க்கமாக ஜன.10, 24, பிப்., 7ல் இரவு 11:55 மணிக்கு புறப்பட்டு திங்கள் காலை 10:15க்கு திருவனந்தபுரம் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 6, 2025

ஈரோட்டில் அடுத்த மாதம் இடைத்தேர்தல்?

image

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த இவிகேஎஸ்.இளங்கோவன் டிச.14 சென்னையில் காலமானார். பின் இத்தொகுதி காலியாக உள்ளது. டெல்லி சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (பிப்.) நடக்க இருப்பதால் அதனுடன் சேர்த்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலும் நடத்தப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரி பார்க்கும் பணி  நடைபெறுகிறது.

News January 6, 2025

சென்னிமலை கோவிலில் பிப்.3-ல் தைப்பூச விழா 

image

ஈரோடு மாவட்டம், சென்னிமலை முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப் பூச தேர்த்திருவிழா 15 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், 2025ஆம் ஆண்டுக்கான தைப்பூச விழா பிப்ரவரி 3ஆம் தேதி துவங்குகிறது. பிப்ரவரி 11ஆம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. இதையொட்டி தேரோட்டத்திற்கு தேர் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

News January 5, 2025

குரூப்-4 போட்டி தேர்வர்களுக்கு இனிய செய்தி 

image

ஈரோடு, சென்னிமலை சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், டிஎன்பிஎஸ்சி குரூப்-4 போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வரும் ஜனவரி 8ஆம் தேதி தொடங்கவுள்ளது. இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் https://forms.gle/3FNSWCaHj9CKRqwW6 என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 5, 2025

ஈரோடு – பவானி சாலையில் திடீரென தீப்பிடித்த கார் 

image

வீரப்பன்சதிதிரம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் இன்று (ஜன.5) சொந்த வேலை காரணமாக தனது காரில் ஈரோடு – பவானி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அசோகபுரம் அருகே சென்ற போது, காரின் முன்பக்கம் தீப்பற்றி மளமளவென எரிந்தது. இதனையடுத்து அவர் அருகில் பெட்ரோல் பங்கில் இருந்த தீயணைப்பு கருவியை எடுத்து வந்து தீயை அணைத்தார். இந்தசம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

News January 5, 2025

பெருந்துறையில் வங்கதேசத்தினர் 7 பேர் கைது

image

ஈரோடு, பெருந்துறை அருகே உரிய ஆவணங்கள் பாஸ்போர்ட் விசா இன்றி பல ஆண்டுகளாக தங்கியுள்ள வங்கதேசத்தைச் சேர்ந்த 7 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் சட்டவிரோதமாக பெருந்துறையில் தங்கி இங்குள்ள தொழில் நிறுவனங்களில் கூலி வேலை செய்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News January 5, 2025

தேனீக்கள் கடித்து முதியவர் பலி

image

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (60). இவரது மகன் அருள் (36). மீன் பிடி தொழில் செய்து வரும் அருள், அக்காள் சரண்யா, தந்தை தங்கராஜ் ஆகியோர் பாசூர் காவிரிக்கரை பகுதியில் தென்னந்தோப்பில் மீன் பிடி வலையை பிரித்து கொண்டு இருந்தனர். அப்போது தேனீக்கள் கடித்ததில் தங்கராஜ் உயிரிழந்தார். மற்ற 2 பேரும் காயமடைந்தனர்.

error: Content is protected !!