India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிப்.5 நடக்கிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஜன.10 தொடங்கி ஜன.17 வரை நடக்கிறது. ஆனால் அரசு விடுமுறை நாட்களைத் தவிர ஜன.10, 13, 17 ஆகிய 3 நாட்கள் மட்டும் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் ராஜகோபால் சுன்கரா அறிவித்து உள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிப்.5 அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கிறது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சித்தோடு ஐ.ஆர்.டி.டி. கல்லூரியில் பிப்.8 அன்று நடைபெறும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்து உள்ளார். எனவே தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக அங்கு கொண்டு சென்று வைக்கப்படும்.
ஈரோடு இடைத்தேர்தலில் உறுதியாக போட்டியிடுவோம் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து, கள்ளக்குறிச்சியில் நிருபர்கள் சந்திப்பில் சீமான் பேசிய போது ஈரோடு இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிடுவதற்கு தான் அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு இடைத்தேர்தலில் உறுதியாக போட்டியிடுவோம் என்று சீமான் மேலும் கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு (2), பெருந்துறை, கோபி ஆகிய இடங்களில் உள்ள மஞ்சள் சந்தையில், திங்கள் முதல் வெள்ளி வரை மஞ்சள் ஏலம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வரும் ஜனவரி 11 முதல் 19 வரை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மஞ்சள் ஏலத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி நடக்கிறது. ஜன 10 முதல் ஜன 17 வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை விடுமுறை என்பதால் ஜன.10, 13, 17 ஆகிய 3 நாட்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் ராஜகோபால் சங்கரா தெரிவித்துள்ளார்.
ஈரோடு, கொல்லம்பாளையத்தில் உள்ள கனரா வங்கி கிராமப்புற சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தில், பெண்களுக்கான இலவச ஆரி எம்பிராய்டரி பயிற்சி, ஜனவரி 9ஆம் தேதி முதல் பிப்ரவரி 17ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில் இலவச சீருடை, உணவு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் தகவலுக்கு 0424-2400338, 87783-23213,72006-50604 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல், வரும் 10-ம் தேதி தொடங்கி, 17-ம் தேதி வரை நடக்கிறது. இதில் 14-ம் தேதி பொங்கல் பண்டிகை விடுமுறை வருகிறது. தேர்தல் விதிமுறையின்படி அன்றைய தினமும் வேட்பு மனுக்கள் பெறப்படும் என்று தேர்தல் நடத்தும் அலுவலர் மனிஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் விரிவான அறிக்கை கொடுப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், ஈரோடு மண்டலத்தின் சார்பில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வரும் ஜனவரி 10 முதல் 14ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதில், ஈரோடு மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம், நாமக்கல் திருச்செந்தூர், இராமேஸ்வரம், நாகர்கோவில், கரூர் ஆகிய பகுதிகளுக்கு 300 புறப்பாடுகள் பேருந்து இயக்கப்பட உள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு எதிரொலியாக, 24 மணி நேரத்துக்குள், அரசு கட்டிடங்களில் உள்ள, அரசியல் கட்சி தலைவர்களின் பெயர்கள், உருவப்படங்கள் மறைக்கப்படும் என்று, தேர்தல் நடத்தும் அலுவலர் மணிஷ் தெரிவித்துள்ளார். மேலும் 48 மணி நேரத்துக்குள் தனியார் கட்டிடங்களில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள், மறைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு, தாட்கோ மூலம் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. எனவே பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற 21 முதல் 32 வயது நிரம்பியவர்கள் www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம். மேலும் தகவலுக்கு மாவட்ட தாட்கோ மேலாளர் அலுவலகம் அல்லது 0424-2259453 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.