Erode

News January 10, 2025

ஈரோடு இடைத்தேர்தலில் திமுக போட்டி?

image

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. மேலும், இடைத்தேர்தலில் போட்டியிடுபவர்களின் வேட்பு மனுக்கள் இன்று (10-ம் தேதி) முதல் 17-ஆம் தேதி வரை பெறப்படுகிறது. இந்நிலையில் இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விரைவில் உறுதியான தகவல் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

News January 10, 2025

247வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்த ‘தேர்தல் மன்னன்’

image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. இதில், சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த ‘தேர்தல் மன்னன்’ என்று அழைக்கப்படும் பத்மராஜன் (64) என்பவர் இன்று முதல் வேட்பாளராக, தேர்தல் அலுவலர் மணீஷிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். இது இவர் தாக்கல் செய்துள்ள 247வது வேட்பு மனு ஆகும். இவர் கடைசியாக வயநாடு மக்களவை தேர்தலில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

News January 10, 2025

ஈமச்சடங்கு கெட்டப்பில் வந்த வேட்பாளர்

image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுபவர்களின் வேட்பு மனுக்கள் இன்று (10-ம் தேதி) முதல் 17-ஆம் தேதி வரை பெறப்பட உள்ளது. இந்நிலையில் இன்று முதல் நாள்  கோவை சங்கராபுரத்தை சேர்ந்த நூர் முகமது என்பவர் தீச்சட்டி, சாவு மணி, பால் ஆகியவையுடன் வந்து  ‘தேர்தலில் பணத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் ஜனநாயகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்’ என வலியுறுத்தி வேட்புமனு தாக்கல் செய்தார். 

News January 10, 2025

3 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்!

image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுபவர்களின் வேட்பு மனுக்கள் இன்று (10-ம் தேதி) முதல் 17-ஆம் தேதி வரை பெறப்பட உள்ளது. இந்நிலையில் இன்று முதல் நாள் வேட்புமனுத்தாக்கல் நிறைவு பெற்றது. முதல் நாளான இன்று 3 சுயேட்சை வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர். இதில் தேர்தல் மன்னன் பத்மநாபன், நூர் முகம்மது, முன்னாள் ராணுவ வீரர் மதுர விநாயகம் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

News January 10, 2025

தேர்தல் பணிக்கு வந்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

image

ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பணிக்காக வந்திருந்த நெடுஞ்சாலை துறை உதவியாளர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.ஆட்சியர் அலுவலகத்தில் நெடுஞ்சாலைதுறை அலுவலக உதவியாளராக பணியாற்றும் சந்திரமோகன் தேர்தல் பணிக்காக மாநகராட்சி அலுவலகத்திற்குள் சந்திரமோகன் செல்ல முயன்றபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார். மயங்கிய சந்திரமோகனை மீட்டு மருத்துவமனைக்கு சென்றனர் சந்திரமோகன் மரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர் கூறினார்

News January 10, 2025

ஈரோடு கிழக்கில் வேட்பு மனு தாக்கல் தொடக்கம்

image

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் பிப்.5ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. வேட்புமனுக்களை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வழங்கலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்துள்ளார்.

News January 10, 2025

ஈரோடு கிழக்கில் இன்று வேட்புமனு தாக்கல்

image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்று (ஜன.10) வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. ஜனவரி 17ஆம் தேதி வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 18ஆம் தேதி நடக்கிறது. வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் ஜனவரி 20 ஆகும். இதில் ஜன.10 முதல் 17 வரை – ஜன.11, 12, 14, 15, 16 விடுமுறை நாட்களாக இருப்பதால், ஜன.10,13,17 ஆகிய 3 நாட்கள் மட்டுமே வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்ய முடியும்.

News January 9, 2025

ஈரோடு கிழக்கில் நாளை வேட்பு மனு தாக்கல்

image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு நாளை (ஜன.10) வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. ஜனவரி 17ஆம் தேதி வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 18ஆம் தேதி நடக்கிறது. வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் ஜனவரி 20 ஆகும். இதில் ஜன.10 முதல் 17 வரை – ஜன.11,12, 14, 15, 16 விடுமுறை நாட்களாக இருப்பதால், ஜன.10,13,17 ஆகிய 3 நாட்கள் மட்டுமே வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்ய முடியும்.

News January 9, 2025

சீமான் உருவ பொம்மையை எரித்து போராட்டம் 

image

ஈரோட்டில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் சீமான் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமானை கண்டித்து பன்னீர்செல்வம் பூங்கா அருகே தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் திடீரென சீமானின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

News January 9, 2025

குறைகளை வாட்ஸ் அப்பில் தெரிவிக்கலாம்

image

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில், வாரம் தேறும் திங்கள் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் உட்பட அனைத்து குறைதீர்க்கும் கூட்டங்களும், இடைத் தேர்தலால் தற்காலிகமாக மறு உத்தரவு வரும் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை 1077, 0424-2260211 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம். மேலும் 9791788852 என்ற எண்ணில் வாட்ஸ் அப் மூலம் பதிவு செய்யலாம்.

error: Content is protected !!