India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஊராட்சிக்கோட்டை கூட்டுக் குடிநீர் திட்டத்தில் சூரியம்பாளையத்துக்கு வரும் பிரதான குடிநீர் குழாய் வாழ்வு பழுதடைந்துள்ளது. இதனால் இன்று (ஜன. 15) பிற்பகல் முதல் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. இந்த வாழ்வு சரி செய்யும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்த பிறகு குடிநீர் வழங்கப்படும் என்றும், எனவே குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் மாநகராட்சி ஆணையாளர் மனிஷ் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இந்த முறை திமுக நேரடியாகப் போட்டியிடுகிறது. இதற்கான பிரச்சாரத்தில் திமுக அமைச்சரும் ஈரோடு மேற்கு எம்எல்ஏவுமான முத்துசாமி ஈடுபட்டார். அப்போது நா.த.க தொடர்பான கேள்விக்கு அமைச்சர் முத்துசாமி, ‘நாம் தமிழர் கட்சி இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக முடிவு செய்து, வேட்பாளரை அறிவித்துள்ளது. ஒரு கட்சி சார்பில் அவர் போட்டியிடுகிறார். இதனால் போட்டி இருக்கத்தான் செய்யும்’ என்றார்.
அந்தியூரில் உள்ள தனியார் வங்கியில், பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, வங்கிக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று இரவு அங்கு வந்த மர்ம நபர்கள் ஏடிஎம் இயந்திரத்தை கற்களால் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். அந்தியூர் போலீசார் அங்குள்ள சிசிடிவி கேமராவை பார்வையிட்டு, குற்றவாளியை தேடி வருகின்றனர். மேலும் இயந்திரத்தில் வைக்கப்பட்டுள்ள பணம் ஏதாவது எடுக்கப்பட்டுள்ளதா எனவும் விசாரணை நடந்து வருகிறது.
ஈரோடு: கடம்பூர் மலை கிராமம் காடட்டியைச் சேர்ந்தவர் மாதேவப்பா (68). இவர் இன்று தேன் பாறை என்ற இடத்தில் விறகு எடுக்க சிலருடன் சென்றுள்ளார். அப்போது, புதர் மறைவில் இருந்து வெளியே வந்த யானை ஒன்று, விறகு எடுத்துக்கொண்டு இருந்தவர்களை தாக்கியது. மற்றவர்கள் தப்பி ஓட மாதேவப்பாவை யானை தாக்கியதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து கேர்மாளம் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சந்திரகுமாருக்கு ஆதரவாக அமைச்சர் முத்துசாமி, கூட்டணி கட்சியினர் வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்தனர். அப்போது பேசிய அமைச்சர், 100% விதிகளை பின்பற்றி வாக்கு சேகரிப்போம். கடந்த இடைத்தேர்தலை எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். மக்கள் வாக்குச்சாவடிக்குள் சென்று அவர்கள் மனசாட்சிப்படி வாக்களிப்பார்கள்” என்றார்
ஈரோடு ரங்கம்பாளையம் ரிங் ரோட்டில் வாகனங்கள் வேகமாக செல்வதால், அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. இந்நிலையில் இன்று மதியம் அதிவேகத்தில் வந்த கார், இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க திரும்பிய போது, சாலையின் நடுவில் உள்ள தடுப்புச் சுவற்றின் மீது ஏறி விபத்து ஏற்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக ஓடத்துறை எல்.எம்.பாலப்பாளையம் மாரப்பம்பாளையத்தை சேர்ந்த சீதாலட்சுமி போட்டியிடுகிறார். MA, M.Phil. பட்டதாரி. கணவர் பெயர் இரா. செழியன். மகள் இசைமதி (12). சீதாலட்சுமி 13 ஆண்டுகள் ஆசிரியை பணி செய்துள்ளார். இவர் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் திமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் நேரடியாக களம் காண்கின்றன. இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சி சார்பில், சீதாலட்சுமி போட்டியிடுவார் என, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால், போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மது விற்பனை தொடர்பான ஆய்வுக்கூட்டம், மாவட்ட தேர்தல் அலுவலர் ராஜகோபால் சுன்கரா தலைமையில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் போதைப்பொருட்களை விற்கும் நபர்கள் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டார். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் திமுக, நாம் தமிழர் கட்சி என இருமுனை போட்டி நிலவுகிறது. இரு கட்சி வேட்பாளர்களும் ஜன.17 வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். இந்நிலையில் திமுக வேட்பாளர் சந்திரகுமாருக்கு ஆதரவாக வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி தேர்தல் பிரச்சாரத்தை இன்று (ஜன.14) மாலை 4 மணிக்கு பெரியார்நகரில் இருந்து தொடங்குகிறார். அவர் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகேட்டு வீடு, வீடாக செல்கிறார்.
Sorry, no posts matched your criteria.