India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், செய்தியாளர்களை நேற்று சந்தித்தார். அப்போது, “இந்த இடைத்தேர்தலில் எந்த அரசியல் கட்சிகள் பெறாத வகையில் வெற்றி இருக்கும். குறைந்தபட்சம் 1.20 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். பல கட்சிகள் தனியாகவும், ஒட்டுமொத்தமாக நிறுத்தினாலும், திமுக வெற்றி பெறும். இந்த தேர்தலில் திமுக வெற்றி எழுதி வைக்கப்பட்ட வெற்றி” என தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. அதன்படி இன்று காலை 9 மணி முதல், மாலை வரை, பவானி, ஊராட்சிகோட்டை, கோபி, நம்பியூர் சுற்றுவட்டாரப்பகுதிகள், கஸ்பாபேட்டை சுற்றுவட்டாரப்பகுதிகள், அந்தியூர், பர்கூர் சுற்றுவட்டாரப்பகுதிகள், சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப்பகுதிகள், எழுமாத்தூர், உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய, அகில இந்திய ஊழல் தடுப்பு கூட்டமைப்பு தலைவர் அக்னி ஆழ்வார் வந்தார். இவர் தனது வேட்புமனுக்கான டெப்பாசிட் தொகைக்காக நாணயங்களை எடுத்து வந்து, அதிகாரிகளிடம் சமர்பித்தார். இவற்றை எண்ணி சரிபார்க்கும் பணியில், அலுவலர்கள் ஈடுபட்டனர். இவர் ஏற்கெனவே விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், நாதக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என ஈரோடு பெரியார் கூட்டமைப்பினர் மனு அளித்துள்ளனர். ஈரோடு எஸ்பி ஜவகர், ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் செயல்படும், தேர்தல் அலுவலகத்தில், அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ப.ரத்தினசாமி அளித்த மனுவில், மக்களிடையே இன மொழி அடிப்படையில் பிரிவினைவாத கருத்துக்களை பேசி வருகிறார் என்றார்.
ஈரோடு இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மா.கி.சீதாலட்சுமி தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் எக்காரணத்திற்காகவும் வேட்புமனு நிராகரிக்கப்படக்கூடாது என்பதற்காக, தலைமையின் உத்தரவின் பேரில் மா.கி.சீதாலட்சுமி சார்பில் 3 முறை வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாம். மேலும், மாற்று வேட்பாளராக நாம் தமிழர் கட்சியின் சார்பில் மேனகா என்பவரும் வேட்புமனு கொடுத்துள்ளாராம்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த திமுக வேட்பாளர் விசி சந்திரகுமார் ”ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக நாங்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறோம். அப்படி நாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் 100 % திமுக வெற்றி என்று சொல்லவில்லை. அப்படி சொன்னால் அருகில் இருக்கும் பெண்கள் 100% இல்லை.. 200% திமுக வெற்றி பெறும் என கூறுகிறார்கள்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இன்ஸ்டாகிராமில் தனது நகைச்சுவையான நடிப்பால் பிரபலமானவர் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ராகுல். இவரை 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்ந்து வருகிறார்கள். மேலும், இவர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் ராகுல் நேற்று இரவு சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், மதியம் 3 மணியுடன் நிறைவடைந்தது. கடந்த 10, 13 ஆகிய 2 நாட்களில், 9 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் வேட்புமனு தாக்கலின் இறுதி நாளான இன்று, திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாதக வேட்பாளர் சீதாலட்சுமி ஆகியோர் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். வேட்புமனுக்களை திரும்பப்பெற ஜன.20ம் தேதி கடைசிநாள்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில், திமுக சார்பில் போட்டியிடும் சந்திரகுமார், இன்று ஈரோடு மநகராட்சி அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலரிடம், தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன் திமுக துணைப் பொதுச் செயலாளர் அந்தியூர் செல்வராஜ், உள்ளிட்டோர் இருந்தனர். இடைத்தேர்தல் வரும் பிப்.5ம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சி சார்பாக சீதாலட்சுமி போட்டியிடுகிறார். வேட்பு மனு தாக்கலின் கடைசி நாளான இன்று, சீதாலட்சுமி இன்று காலை வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் 4 வேட்பாளர்கள் இருந்தனர். ஈரோடு இடைத்தேர்தலில், திமுக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் நேரடியாக களம் இன்றங்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. வரும் பிப்.5ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
Sorry, no posts matched your criteria.