India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாளை (ஜன.26) குடியரசு தினத்தை முன்னிட்டு உங்கள் ஊரில் கிராம சபைக் கூட்டங்கள் மற்றும் அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பொது இடங்களில் குடியரசு தின விழா கொடியேற்ற நிகழ்ச்சிகளும், நடைபெற உள்ளன. இந்த நிகழ்வுகளை வே2நியூஸில் பதிவிட்டு, உங்கள் ஊர் செய்திகளை அனைவருக்கும் சென்றடைய உதவுங்கள். எப்படி அனுப்புவது என்று தெரியலையா? இந்த <
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறுகிறது. எனவே 3 பறக்கும் படை, 3 நிலை கண்காணிப்பு குழுக்கள், ஒரு வீடியோ குழு அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தற்காலிகமாக 12 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, அதில் துணை ராணுவ படையினர் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வரும் ஜன.31ஆம் தேதி பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், ஈரோடு மாவட்டத்தில் ஜன.31ஆம் தேதி மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பவானிசாகர் அணையின் மொத்த கொள்ளளவான 105 அடியில் தற்போது 93.99 அடியாகவும் நீர் வரத்தானது 920 கன அடியாகவும் நீர் வெளியேற்றமானது 900 கன அடியாகவும் உள்ளது. குண்டேரிப்பள்ளம் அணையின் மொத்த கொள்ளளவான 41.75 அடியும் நிரம்பி வழிகிறது. பெரும்பள்ளம் ஆணையின் மொத்த கொள்ளளவான 30.84 அடியில் 20.08 அடியும், வரட்டு பள்ளம் அணையின் 33.46 அடியில் 30.61 அடியாக நீர் இருப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாதக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சீதாலட்சுமியை செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது பேசிய அவர்: ஈரோடு கிழக்கு தொகுதியில், திமுக சார்பில் அமைச்சர் பட்டாளம் வாக்குக் கேட்டு வந்தால், ஒன்றரை ஆண்டுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகள் என்னவாயிற்று என்று மக்கள் கேள்வி கேட்பார்கள். அதற்கு பயந்தே அமைச்சர்கள் இந்த பக்கம் வரமாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வருகிற 5-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த இடைத்தேர்தலுக்காக மொத்தம் 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 20% கூடுதலாக சேர்த்து முதன்மை அலுவலர்கள், முதல் நிலை அலுவலர்கள்,2-ம், 3ம் நிலை அலுவலர்கள் தலா 284 பேரும், 1,200 வாக்காளர்களை கொண்ட வாக்குச்சாவடிகளுக்கு 4-ம் நிலை அலுவலர்கள் 58 பேரும் என்று மொத்தம் 1,194 அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிர்ணயிக்கப்பட்ட நேரத்துடன் முடிவடைகின்ற 48 மணி நேரத்திற்குள் ஏதேனும் கருத்துக்கணிப்பு அல்லது பிற வாக்குப்பதிவு ஆய்வு முடிவுகள் உட்பட எந்தவொரு தேர்தல் விவகாரங்களையும், எந்தவித மின்னணு ஊடகத்திலும் காட்சிப்படுத்த கூடாது. இதனை மீறுபவர்களுக்கு 2 வருட சிறை தண்டனை (அ) அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்து விதிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சத்தி கொத்தமங்கலத்தை சேர்ந்தவர் கவுதமின் மனைவி அசின் (19). இவர்களுக்கு 3 மாத குழந்தை உள்ளது. இந்நிலையில் இன்று குழந்தையை அசின் வெள்ளியம்பாளையம்புதூர் அங்கன்வாடி மையத்துக்கு அழைத்து சென்று தடுப்பூசி போட்டுக்கொண்டு வீட்டுக்கு வந்தார். சிறிது நேரத்தில் பேச்சு மூச்சு இல்லாமல் இருந்த குழந்தையை ஜிஎச்க்கு கொண்டு சென்றபோது உயிரிழந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து பவானிசாகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும், நாம் தமிழர் கட்சியை வேட்பாளர் சீதாலட்சுமிக்கு ஆதரவு தெரிவித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தனது பிரசாரத்தை தொடங்கினார். ஈரோடு காவேரிசாலையில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், “வாக்கை விற்கும் அரசியல் முறையை ஏற்கக் கூடாது. நாம் நோட்டை வாங்கிக்கொண்டு ஓட்டை விற்கிறோம். அவர்கள் ஓட்டை வாங்கிக்கொண்டு நாட்டை விற்கிறார்கள்”, என்றார்.
ஈரோடு கிழக்கு & மேற்கு மற்றும் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய ஈரோடு மாநகர் மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்திற்கு, விதிகளின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை இன்று தவெக தலைவர் விஜய் நியமித்துள்ளார். இதில் மாவட்ட தவெக செயலாளர்: பாலாஜி, மாவட்ட இணைச் செயலாளர்: அப்துல்ஹக்கிம், பொருளாளர்: முருகேசன், துணை செயலாளர்: பிரகாஷ், மஞ்சு மற்றும் 10 செயற்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.