India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு மாவட்ட நிா்வாகம் சாா்பில் குடியரசு தின விழா மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் ஆணைக்கல்பாளையம் ஆயுதப்படை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆட்சியர் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா். காவலா்கள் உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு அலுவலா்கள், பணியாளா்கள் என 100 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
நேற்று குடியரசு தினத்தை ஒட்டி தொழில் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்காத 90 நிறுவனங்கள் உரிமையாளர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது என இது குறித்து நேற்று ஆய்வு செய்த தொழிலாளர் ஆணையர் ஜெயலட்சுமி கூறியுள்ளார். இவர்கள் நேற்று ஈரோடு பெருந்துறை, பவானி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் இந்த பகுதியில் உள்ள நிறுவனங்களில் ஆய்வு செய்து இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஈரோடு கிழக்கு சட்டமற்ற தொகுதி இடைத்தேர்தலில் 85 வயதுக்கும் மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் தபால் வாக்கு அளிக்கும் பணி இன்று (ஜன.27) கடைசி நாள் ஆகும். கடந்த 23ம் தேதி தொடங்கிய இந்த வாக்குப்பதிவு 24, 25, 27ஆம் தேதி என 4 நாள்கள் நடைபெற்றது. இத்தொகுதிக்கு வரும் பிப்.5ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. திமுக சார்பில் சந்திரசேகர், நாம் தமிழர் சார்பில் சீதாலட்சுமி போட்டியிடுகின்றனர்.
ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட, ஈரோடு வருகை தந்தார் துறைவைகோ. அப்போது மதிமுக கட்சி அலுவலகத்தில் மொழிப்போர் தியாகிகள் திருவுருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். பெரியாரும் வேண்டும் பெருமாளும் வேண்டும் என்று தான் சொல்வேன் என்ற துரைவைகோ, பெரியாரை இழிவுபடுத்தும் யாராக இருந்தாலும், ஈனப்பிறவி தான் என்றார்.
அம்மாபேட்டை அருகே உள்ள கோண மூக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் ரோகிணி வயது 30. இவரது வீட்டில், பூட்டை திறந்து, வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த, அரை பவுன் தங்கம் மற்றும் கால் கொலுசு ஆகியவற்றை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்றுள்ளார். இது குறித்து அம்மாபேட்டை போலீசில், ரோகிணி புகார் தெரிவித்தார். புகார் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, பிரகாஷ் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஈரோட்டைச் சேர்ந்த கௌதம்(27). இவரது மனைவி அசின்(19). இவர்களுக்கு 2 மாதம் முன் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் நேற்று முன் தினம் தடுப்பூசி செலுத்தும் முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதில் குழந்தை மயக்கம் அடைந்ததாக கூறப்படுகிறது. உடனே, மருத்துவமனையில் சேர்த்த நிலையில், குழந்தை இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தடுப்பூசியதால் குழந்தை இறந்ததாக போலீசாரிடம் புகார் அளித்தனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மா.கி.சீதாலட்சுமிக்கு ஆதரவாக ஈரோடு காளை மாடு சிலை மற்றும் மரப்பாலம் பகுதிகளில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார். இலவசங்கள் என்ற ஏமாற்று அறிவிப்புகளால் 60 ஆண்டுகளாக மயக்கத்தில் உள்ள மக்கள் இனிமேலாவது விழித்துக்கொள்ள வேண்டும் என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
நாடு முழுவதும் குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி ஈரோடு மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நேற்று இரவு முதல் ஈரோடு ரயில் நிலையம், மற்றும் பேருந்து நிலையங்களில் பலத்த பாதுகாப்பு, தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். ரயில் நிலையங்களில் விடிய விடிய பயணிகளின் உடைமைகளை கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் அனுப்பப்படுகின்றனர்.
தமிழக பாஜகவில், அமைப்பு தேர்தல் மூலம் மாவட்ட தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக மாவட்ட தலைவர்களை பட்டியலை மாநில தேர்தல் அதிகாரியும், மாநில துணை தலைவருமான எம்.சக்கரவர்த்தி அறிவித்துள்ளார். இதில் ஈரோடு வடக்கு மாவட்ட பாஜக புதிய மாவட்ட தலைவராக எஸ்.எம்.செந்தில்குமார் மற்றும் தெற்கு மாவட்ட பாஜக புதிய மாவட்ட தலைவராக எஸ்.எம்.செந்தில் செய்யப்பட்டுள்ளனர்.
ஈரோட்டில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது, திமுக 1000 ரூபாய் வழங்கும் திட்டம் தவிர என்ன செய்தார்கள் எதுவுமில்லை. பேரிடரின் போது உரிய இழப்பீடு கூட பெறமுடியாமல் மாநில உரிமைகள் பற்றி பேசுவது எந்த விதத்தில் நியாயம். நாதக வீதிவீதியாக வந்து வாக்கு கேட்கிறோம். திமுக வந்து கேட்கவில்லை. உங்கள் மீது நம்பிக்கை வைத்து தான் தொடர்ந்து தேர்தலில் நாங்கள் போட்டியிடுகிறோம் என்றார்.
Sorry, no posts matched your criteria.