India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 3-வது முறையாக பிச்சை கேட்பது போல ஓட்டு கேட்கிறோம். நாம் தமிழர் கட்சிக்கு இந்த முறையாவது வாக்களிக்க வேண்டும் என்று நேற்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்தார். ஈரோடு வேளாண் தொழிலும் நெசவுத் தொழிலும் நலிவடைந்துவிட்டது. இங்கே நாங்கள் ஓட்டு கேட்டு மட்டும் வரவில்லை. உங்கள் வாழ்க்கைக்காகவும் வந்துள்ளோம்’ என்றார்.
பவானிசாகர் அணையின் மொத்த கொள்ளளவு 105 அடியில் தற்போது 93.82 அடியாகவும், நீர் வரத்தானது 654 கன அடியாகவும், நீர் வெளியேற்றமானது 900 கன அடியாகவும் உள்ளது. குண்டேரிப்பள்ளம் அணையின் மொத்த கொள்ளளவான 41.75 அடியும் நிரம்பி வழிகிறது. பெரும்பள்ளம் அணையின் மொத்த கொள்ளளவான 30.84 அடியில் 19.59 அடியும், வரட்டுப் பள்ளம் அணையின் 33.46 அடியில் 30.61 அடியாகவும் நீர் இருப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் 19 வயது பெண். இவருக்கும் ஈரோட்டை சோ்ந்த 17 வயது சிறுவனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் கடந்த செப்டம்பா் மாதம் திருமணம் செய்து, ஈரோட்டில் வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளனா். தகவல் அறிந்த குழந்தைகள் நல குழுவினா், ஈரோடு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், போக்சோவில் அந்த பெண்ணை நேற்று கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், திமுக வேட்பாளர் சந்திரகுமாரை ஆதரித்து, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் நேற்று 52, 53வது வார்டு பகுதிகளில் பிரசாரம் நடந்தது. அப்போது, பெண்களுக்கு மாதம் ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை கிடைக்காமல் விடுபட்டவர்களுக்கு, தேர்தலுக்கு பின் முதல்வர் உரிய நடவடிக்கை எடுத்து வழங்குவார்’ என அமைச்சர் உறுதியளித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், வாக்குச்சாவடிக்கு நேரில் சென்று வாக்களிக்க இயலாத 85 வயது மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்குகளை பெறும் பணி நிறைவடைந்தது. இதன்படி இந்த தொகுதியில் தகுதியுள்ள 1570 மாற்றுத்திறன், 2529 முதியோர்களில், 85 வயதுக்கும் மேற்பட்ட முதியோர் 209 பேரும், மாற்றுத்திறனாளிகள் 47 பேரும் வாக்களித்தனர். 256 வாக்காளர்களில் 246 பேர் வாக்குகளை செலுத்தி உள்ளனர்.
தமிழ்நாட்டில் மும்மூர்த்திகளைக் கொண்ட ஒரே கோயில் என்ற பெருமை கொடுமுடி மகுடேஸ்வரர் கோயிலுக்கு மட்டுமே உள்ளது. இக்கோயில் உள்ள வன்னிமரம், 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாம். இதில் பூ பூக்கும் என்றாலும் காய் காய்க்காது. தண்ணீரில் வன்னி மரத்தின் இலைகளை போடுவதால், அந்த நீர் கெட்டுப்போகாதாம். பழனிக்கு காவடி எடுக்கும் பக்தர்கள் இந்த வன்னிமர இலையை காவிரி நீரில் போட்டு, காவடி சுமந்து பாதயாத்திரை செல்வார்களாம்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், திமுக வேட்பாளராக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும், வி.சி.சந்திரகுமாருக்கு ஆதரவு தெரிவித்து, தமிழ்நாடு வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, மணல் மேடு, கிராமடை, சென்னிமலை சாலை உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார். தேர்தல் பறக்கும் படையினர் காரை தடுத்து நிறுத்தி, திடீர் சோதனை மேற்கொண்டனர். பரிசு பொருட்கள், பணமோ இல்லாததால் கிளம்பி கிளம்பி சென்றனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், மொத்தம் 46 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 13 வேட்பாளர்கள் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள். மற்றவர்கள் சுயேட்சை வேட்பாளர்கள். இந்நிலையில், சுயேட்சை வேட்பாளர் அக்னி ஆழ்வார் என்பவர், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பணப் பட்டுவாடாவைத் தடுக்க வேண்டும் எனக் கூறி, சென்னை தலைமைச் செயலகத்திற்கு பண மாலையுடன் சென்று மனு அளித்தார்.
தேர்தல் பிரச்சாரம் என்றால் வேட்பாளர் வாகனத்தில் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரிப்பது வழக்கம். ஆனால் ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் நடந்து சென்று ஓட்டு கேட்கிறார். இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் முத்துசாமி, மக்களை நேரடியாக சந்தித்து ஓட்டு கேட்க வேண்டும் என்பதற்காக வீடு, வீடாக நடந்து சென்று பிரசாரம் செய்வதாக, விளக்கம் அளித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்.5ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த இடைத்தேர்தலில் பூத் சிலிப் வழங்கும் பணி தற்போது தொடங்கியுள்ளது. வீடு வீடாக சென்று அங்கன்வாடி பணியாளர்கள் பூத் சிலிப்பை விநியோகம் செய்கின்றனர். இங்கு திமுக சார்பில் சந்திரகுமார், நாம் தமிழர் சார்பில் சீதாலட்சுமி உள்ளிட்ட 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.