India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு, பெரியசெட்டிபாளையம், கணபதி நகரைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் (46). 2020 ல் கோவிந்தராஜ் தனது கடையில் வேலை பார்த்த 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வழக்கில் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி சொர்ணகுமாா் வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், கோவிந்தராஜுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.
ஈரோடு பவானி சாலை காமராஜ் நகரில் அலாவுதீன் என்பவர் வளர்பிறை என்ற பெயரில் பர்னிச்சர் கடை வைத்துள்ளார். நேற்று காலை 6.25 மணியளவில் பர்னிச்சர் ஷெட்டில் மின் கசிவு காரணமாக பழைய மர கட்டை துண்டுகளில் தீப்பிடித்து எரிய துவங்கியது. தகவலறிந்த ஈரோடு தீயணைப்பு துறையினர் அங்கு சென்று இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். இதில் மர பொருட்கள், ப்ளைவுட் உள்ளிட்டவை எரிந்து சாம்பலானது.
சத்தியமங்கலம் : கோவை முதல் கர்நாடக எல்லை வரையிலான புறவழிச் சாலை 4/6 திட்டத்தால் பாதிப்படையும் விவசாயிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று பிப்-28 வெள்ளிக்கிழமை மாலை 6 மணி அளவில் சத்தியமங்கலம் மலர் விவசாயிகள் தலைமைச் சங்க வளாகத்தில், வழக்கறிஞர் ஈசன் முருகசாமி தலைமையில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் புறவழிச்சாலை திட்டத்தை எதிர்கொள்வது, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.
பெருந்துறை அடுத்த வெள்ளோடு அருகே சாலை விரிவாக்கப் பணிகளுக்காக சாலையோரம் இருந்த மரங்கள் அகற்றப்பட்டன. இதில், 150 ஆண்டுகால பழமையான ஆலமரம் ஒன்று பிடுங்கப்பட்டு, மீண்டும் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் பகுதியில் நடப்பட்டது. பல ஆண்டுகளாக இந்த மரத்தின் அடியில் கடை நடத்தி வந்த பெண் அழுதது, அங்கிருந்தவர்கள் மனதை நெகிழ்வடைய செய்தது.
ஈரோடு மாவட்ட மக்கள் போலி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம். சமூக வலைதள பக்கங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும். வங்கி கணக்கு மற்றும் ஓடிபி எண்களை யாரிடமும் பகிர வேண்டாம். தெரியாத இணைப்பை கிளிக் செய்யவோ அல்லது மற்றவருக்கு அனுப்பவோ கூடாது என ஈரோடு மாவட்ட போலீசார் எச்சரித்துள்ளனர். மேலும் தொடர்புக்கு சைபர் கிரைம் எண்ணான 1930ஐ தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் பவானிசாகர் அணை உள்ளது. பவானிசாகர் அணை 105 அடி நீர்மட்ட கொள்ளளவு கொண்டது. இந்நிலையில் பவானிசாகர் அணைக்கு இன்று வினாடிக்கு 126 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இன்றைய நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 87.63 அடியாக உள்ளது. அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 900 கன அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
பொதுத்துறையை சேர்ந்த யூனியன் வங்கியில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘அப்ரென்டிஸ்’ பிரிவில் தமிழகம் முழுவதும் 122 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க எதாவது ஒரு பட்டப்படிப்பு படித்திருந்தால் போதும். 20 -28 வயது உடையவராக இருக்க வேண்டும். மாதம் ரூ.15,000 வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் வரும் <
ஈரோடு, கோவை பெரிய பஜாா் வீதி, பிரசன்டேஷன் கான்வென்டை சோ்ந்தவா் கன்னியாஸ்திரி மேரி நிா்மலா (67). கடந்த 24 தேதி மதியம் 12 மணிக்கு ஈரோடு அருகே மாவேலிபாளையம் வந்து கொண்டு இருந்தது. மேரி நிா்மலா ரயிலில் உள்ள கழிவறைக்கு சென்றாா். அப்போது நிலைதடுமாறி ஓடும் ரயிலில் இருந்து வெளியே தவறி விழுந்து படுகாயம் அடைந்து இறந்தார். இதுகுறித்து ரயில்வே போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில், ரங்கம்பாளையம், ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மார்ச் 15 மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. மேலும் தகவலுக்கு www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளம் மற்றும் 86754 12356, 94990 55942 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும் இதில் பங்குபெற படத்தில் உள்ள QR – யை ஸ்கேன் செய்து கட்டாய முன்பதிவு செய்ய வேண்டும்.
ஈரோடு, கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா, இன்று (26.2.2025) பெருந்துறை, காஞ்சிக்கோவில் பகுதியில் வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் நிலக்கடலை பயிரிடப்பட்டுள்ள விதைப்பண்ணை வயலை ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுவின் போது, பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர். பி.ரவிக்குமார், பெருந்துறை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவசங்கர், தேவகி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.