India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவன் திரிபுரத்தை அழிக்க, மேருமலையை வில்லாகப் பயன்படுத்தியபோது, அதிலிருந்து சிதறிய ஒரு சிறுபகுதியே சிவன்மலை எனப்படுகிறது. பார்வதி, அகத்தியர் சிவனை நோக்கித் தவம் செய்த தலம் என்றும், வள்ளியை மணம்முடித்த முருகன் வள்ளியுடன் இங்கு வந்து குடிகொண்டாரம். திருநள்ளாறு சென்று சனீஸ்வரனை தரிசிப்பதும், சூரிய நாராயணர் கோவில் சென்று சூரியனை வழிபடுவதால் ஏற்படும் சிறப்பும், சிவன்மலை முருகனை வழிபட்டால் கிடைக்கும்.
கோயம்புத்தூர் டு சேலம் பைபாஸ் சாலையில் உள்ள விஜயமங்கலம் டோல்கேட் அருகே இன்று ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 20 பேர் காயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனியார் பேருந்து சென்று கொண்டு இருக்குபோது, குறுக்கே பைக் வந்ததால் இவ்விபத்து ஏற்பட்டது. இதில் பைக்கில் வந்தவர் சம்பவயிடத்திலே உயிரிழந்த நிலையில், பேருந்தில் பயணம் செய்த 20 பேருக்கு காயம் ஏற்பட்டது.
தமிழகத்தில் ஈரோட்டில் 102 டிகிரி வெயில் கொளுத்தியதால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். நடப்பாண்டில் அதிகபட்ச ஈரோட்டில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது. சேலத்தில் 100, கரூர் பரமத்தியில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது. கடும் வெயிலால் பல்வேறு பாதிப்புகள் வரும் என்பதால் மக்களே வெயில் காலத்தில் வெளியே செல்லும் போது தண்ணீர் பாட்டில் எடுத்துச் செல்லுங்கள். (share பண்ணுங்க)
ஈரோடு மாநகராட்சிக்கு சொந்தமான கிழ்காணும் வணிக வளாகங்களில் காலியாக உள்ள கடைகளுக்கான முன் பொது ஏலம் மற்றும் பொது ஏலம் கீழ்கண்ட தேதிகளில் நடைபெறவுள்ளது. சோலார் வணிக வளாகம் மார்ச் 5ம் தேதியும், கனிமார்க்கெட் (பிஎஸ் பார்க்)வணிகவளாகம், காளைமாட்டுசிலை வணிகவளாகம், நேதாஜி வணிகவளாகம் மார்ச் 7ம் தேதியும், மத்தியபேருந்து வணிகவளாகம் மார்ச் 12ம் தேதியும் ஏலம் நடைபெறவுள்ளது.
ஈரோடில் சிறு தொழில் கடன் திட்டங்களின் கீழ், கடன் பெறுவதற்கு சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் தனிநபர் கடன், சுயஉதவி குழுக்கள் இத்திட்டத்தின் கீழ் கடன் பெறமுடியும். அதன்படி, ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி – சிவகிரி கிளையில் இன்று லோன் மேளா நடைபெற்றது.
தமிழ்நாட்டில் பிளஸ் 1 பொதுத்தேர்வு இன்று(மார்ச்.5) தொடங்கி வருகிற 27ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், ஈரோடு மாவட்டத்தில் 23,877 மாணவ, மாணவிகளும், தனித்தேர்வர்களாக 380 பேரும் எழுத உள்ளனர். இவர்கள் தேர்வு எழுத வசதியாக 108 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள், விபத்தினால் பாதிப்படைந்த மாணவ, மாணவிகள் தேர்வு எழுத வசதியாக ஸ்கிரைப் 412 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஈரோட்டில் உள்ள உணவகங்களில் இட்லி தயாரிப்பின்போது பிளாஸ்டிக் தாள் பயன்படுத்தப்படுகிறதா என உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் சோதனை நடத்தினர். இட்லி தயாரிப்பின்போது துணிக்கு பதில் பிளாஸ்டிக் தாள் பயன்படுத்தப்படுவதாக தகவல்கள் வந்தன. இதனை ஆய்வு செய்த உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் தங்க விக்னேஷ் கருங்கல்பாளையம் இட்லி கடை, ஹோட்டல்கள், சிற்றுண்டி போன்ற இடங்களில் நேற்று சோதனை மேற்கொண்டனர்.
ஈரோட்டில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் மார்ச் மாதம் 15ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் 10, 12, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் பங்கேற்று வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி கொள்ளலாம். இதில் பங்குபெற முன்பதிவு அவசியம். மேலும், தொடர்புக்கு 86754 12356 என்ற எண்ணை அழைக்கவும்.
சித்தோடு, வாசவி கல்லூரி அருகே கனரா வங்கி கிராமப்புற சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இப்பயிற்சியானது வரும் 10ம் தேதி முதல் 20ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இங்கு மசாலா பொடிகள், அப்பளம், ஊறுகாய் தயாரிக்க இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது.மேலும், விவரங்களுக்கு 0424-2400338, 87783 23213, 72006 50604 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு, முன்பதிவு செய்து பயன்பெறலாம்.
ஈரோடு, ஆயுதப் படையில் காவலராக நவீன்குமாா்(35) என்பவர் பணியாற்றி வந்தார். இவர், ஈரோடு அடுத்த ஆணைக்கல்பாளையம் காவலா் குடியிருப்பில் உள்ள தனது வீட்டில், நேற்று மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்து வந்த ஈரோடு தாலுகா போலீசார், காவலர் நவீன்குமார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Sorry, no posts matched your criteria.