India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோட்டில் தமிழக அரசின் பொது சுகாதார (ம) நோய் தடுப்பு மருத்துவ துறையில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 8ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு, மருத்துவ ஆய்வக தொழில்நுட்பத்தில் டிப்ளமோ, B.SC( CHEMISTRY) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.<
ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் ஆண்டுதோறும் மகளிர் தினத்தை வித்தியாசமாக கொண்டாடி வருகின்றனர். அவ்வகையில் இந்த ஆண்டு மாமியாருக்கு பிடித்த உணவை மருமகள் ஆர்டர் செய்ய வேண்டும், மருமகளுக்கு பிடித்த உணவை மாமியார் ஆர்டர் செய்து ஊட்டி விட வேண்டும் என்ற புதுவகை விளையாட்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஏராளமான மாமியார் – மருமகள்கள் கலந்து கொண்டு உணவை ஊட்டி விட்டு அன்பை பகிர்ந்து கொண்டனர்.
ஈரோட்டில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று 102 டிகிரி வெயில் வாட்டி வதைத்தது. தமிழகத்தில் வெயில் அதிகமான பாதிப்பு உள்ள மாவட்டங்களில் ஈரோடு முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது. வெப்ப அலை வீசுவதால் பகல் நேரத்தில் வெயிலில் நடமாட வேண்டாம் என்றும், குளிர்ந்த ஆகாரங்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்றுமதி (ம) உள்நாட்டு பின்னலாடை உற்பத்தியில் ஈரோடு, திருப்பூர் அபார வளர்ச்சி பெற்றது. கோவிட் காலத்தில் கேரளாவில் சிறிய யூனிட் துவங்கி ஆடையாக வடிவமைத்து உள்ளுர் சந்தையில், பின்னலாடைகளை காட்டிலும் தரம் குறைவாக இருந்தாலும், ஒரு ஆடை விலை ரூ.25-க்கு விலை குறைவாக கிடைக்கிறது. இதனால், அங்கு விற்பனை சூடுபிடித்து கேரள மார்க்கெட் தொடர்பு ஈரோடு, திருப்பூருக்கு படிப்படியாக குறைந்து வருகிறது.
ஈரோடு மாவட்ட நிர்வாகம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் ஈரோடு கலை அறிவியல் கல்லூரி ரங்கம்பாளையத்தில் மார்ச் 15ஆம் தேதி நடைபெறுகிறது. 200 மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள், 10,000 மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 8, 10, 12, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் பங்கேற்கலாம். (Share பண்ணுங்க)
சென்னிமலை டவுன், ஒன்பதாவது வார்டு பார்க் சாலையில் உள்ள போலீஸ் குடியிருப்புக்கு பின்புறம் காய்ந்த புற்களில் திடீரென தீப்பிடித்தெறிந்தது. இதுகுறித்து உடனடியாக ஒன்பதாவது வார்டு கவுன்சிலர் சுரேகா ராஜ்குமார் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். மொடக்குறிச்சியில் இருந்து வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.
சத்தத்திலிருந்து புளியம்பட்டி நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்த செம்படா பாளையத்தை சேர்ந்த ரமேஷ், உன்னம்மாள் ஆகியோர் புளியம்பட்டியில் இருந்து மைசூர் நோக்கிச் சென்ற லாரி புளியம்பட்டி நல்லூர் அருகே மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் உயிர் இழந்து விட்டனர். உடல்கள் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்துபோலீசார் விசாரணை செய்கின்றனர்.
நீர் நிலைகளில் வாழும் பறவைகளின் எண்ணிக்கை மற்றும் பரவல் குறித்த தரவுகளை சேகரித்து, பாதுகாக்கும் முயற்சிகளை முன்னெடுக்கும் விதமாக ஈரநில பறவைகள் கணக்கெடுக்கும் பணி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான கணக்கெடுக்கும் பணி இன்று சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில், ஈரோடு வனக்கோட்ட பகுதிகளில் காலை 6.30 மணி முதல் முற்பகல் 11 மணி வரை நீர் நிலைகளில் உள்ள பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக 100 டிகிரி மற்றும் அதனை கடந்து வெயில் வாட்டுகிறது. நேற்று, 38.2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெயில் வாட்டியது. இது, 101 டிகிரி பாரன்ஹீட் முதல் 101.8 டிகிரி பாரன்ஹீட் அளவிலான வெப்பம் உணரப்பட்டது.குறிப்பாக காற்றில் ஈரப்பதம் இன்றி வெப்பமான நிலையே நீடித்தது. மதியம் 12:00 முதல் மாலை 4:00 மணி வரை மக்கள் நடமாட்டம் சாலைகளில் குறைந்து காணப்பட்டது.
ஈரோட்டில் பல புகழ்பெற்ற கோயில்கள் உள்ளன. அவற்றில் ▶திண்டல்மலை முருகன் கோயில். ▶பவானி சங்கமேஸ்வரர் கோயில். ▶பண்ணாரி மாரியம்மன் கோயில். ▶பெரிய மாரியம்மன் கோயில். ▶சென்னிமலை முருகன் கோயில். ▶கொடுமுடி அம்மன் கோயில் ஆகிய கோவில்கள் உள்ளன. ஈரோடு மக்களே உங்க ஊர் கோவில், குலதெய்வ கோவில்களை கீழே கமெண்ட் பண்ணுங்க. ▶உங்க சொந்தங்களுக்கு Share பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.