India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில், ரங்கம்பாளையம், ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மார்ச் 15 மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. மேலும் தகவலுக்கு www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளம் மற்றும் 86754 12356, 94990 55942 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும் இதில் பங்குபெற படத்தில் உள்ள QR – யை ஸ்கேன் செய்து கட்டாய முன்பதிவு செய்ய வேண்டும்.
ஈரோடு, ஈவிஎன் சாலையில் உள்ள தெற்கு கோட்ட மின் விநியோக செயற்பொறியாளர் அலுவலகத்தில், நாளை 12ம் தேதி காலை 11 மணி அளவில் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டமானது மின் பகிர்மான வட்டத்தின் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடக்கிறது. ஈரோட்டில் உள்ள மின் பகிர்மான வட்டத்தை சேர்ந்த மின் பயனீட்டார்கள் பங்கேற்று மின்சாரம் சார்ந்த குறைகளை தெரிவித்து நிவர்த்தி பெறலாம்
ஈரோடு அரசு மருத்துவமனையில் வெப்ப அலை சிறப்பு சிகிச்சைக்கான வார்டு நேற்று ஆரம்பிக்கப்பட்டது. ஈரோட்டில் தினமும் 100*சி வெப்பம் பதிவாகுவதாக இந்த சிறப்பு ஏற்பாடு செய்ய்ப்பட்டதாக மருத்துவ அதிகாரி சசிரேகா கூறினார். 24 மணி நேரமும் இந்த வார்டில் இரண்டு டாக்டர் மற்றும் செவிலியர் பணியில் தொடர்ந்து இருப்பார்கள் என தெரிவித்தார். தரை தளத்தில் இந்த வெப்ப அலை வார்டு இயங்கும் என தெரிவித்தார்.
ஈரோடு மாநகராட்சியில் 2024-2025ம் நிதியாண்டிற்கான சொத்து வரி, குடிநீர் வரி, உள்ளிட்ட வரிகள் கடந்த ஆண்டு வரை நிலுவையிலுள்ள வரிகளை வருகின்ற மார்ச் 31குல் வசூலிக்க உத்தரவிடப்பட்டது. இதில், வரி பாக்கி வைத்துள்ளவர்களின் வீடுகளுக்கு சென்று வரிகளை செலுத்தக்கோரி நோட்டீஸ் வழங்கிவருகின்றனர். 60 வார்டுகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, பில் கலெக்டர்கள், ஊழியர்கள் வரி வசூல் செய்துவருகின்றனர்.
ஈரோட்டில் தமிழக அரசின் பொது சுகாதார (ம) நோய் தடுப்பு மருத்துவ துறையில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 8ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு, மருத்துவ ஆய்வக தொழில்நுட்பத்தில் டிப்ளமோ, B.SC( CHEMISTRY) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். <
ஈரோடு என்றாலே மஞ்சள் வர்த்தகத்திற்கு புகழ் பெற்றது. இந்நிலையில் ஹோலி பண்டிகையையொட்டி மார்ச் 14.ஆம் தேதி மஞ்சள் ஏலத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க செயலா் சத்தியமூா்த்தி கூறியதாவது: மார்ச்14ஆம் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்படுவதால் ஈரோடு மஞ்சள் வர்த்தகத்துக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. Share பண்ணுங்க
பவானி சாகர் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 9 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.கோடம்பாளையத்தில் சாலையில் உறங்கியவர் மீது மோதாமல் இருக்க காரை திரும்பிய போது விபத்து நேரிட்டது. கர்நாடக மாநிலம் பி.ஜி. பாளையத்தை சேர்ந்த மைக்கேல் உயிரிழந்த நிலையில் 9 பேருக்கு சத்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு கலெக்டர் அலுவலத்தில் இன்று மக்கள் குரைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனு பெற்று, குறைகள் கேட்டறிந்தார். இந்நிகழ்வில், துறை சார்ந்த அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.
ஈரோட்டில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று 102 டிகிரி வெயில் வாட்டி வதைத்தது. தமிழகத்தில் வெயில் அதிகமான பாதிப்பு உள்ள மாவட்டங்களில் ஈரோடு முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது. வெப்ப அலை வீசுவதால் பகல் நேரத்தில் வெயிலில் நடமாட வேண்டாம் என்றும், குளிர்ந்த ஆகாரங்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், மாற்றுத்திறனாளி பயனாளிக்கு ஆவின் பாலகம் அமைத்திட ரூ.50,000/- ஊக்கத்தொகை பெறுவதற்கான ஆணையினை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார் உட்பட பலர் உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.