India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு கோடை வெயிலின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே கடந்த சில தினங்களாக, வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், பரவலாக மழைபெய்து வருகிறது. இந்நிலையில், இன்று மாவட்டத்தின் சில பகுதிகளில், மாலை 6 மணி வரை, கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றார்போல், பொதுமக்கள் தங்கள் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது.
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால் மார்ச்.26 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் இன்று ஈரோட்டில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் அருகே சாவடிப்பாளையம் யார்டில் தண்டவாளம் புதுப்பித்தல் பணி நடக்கிறது. இதனால் 23,25ம் தேதி என 2 நாட்கள் ஈரோட்டில் இருந்து இயக்கப்படும் ரயில் ஈரோடு வரும் ரயில்களில் மாற்றம் செய்யப்படுகிறது. ஈரோடு ஸ்டேஷனில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட வேண்டிய ஈரோடு-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் (எண் 16845), 23, 25 கரூரில் மதியம், 3:05 மணிக்கு புறப்படும் என சேலம் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஈரோடு, மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் சுகாதார ஆய்வாளர், மருத்துவமனை பணியாளர் உள்ளிட்ட 16 காலியிடங்கள் நிரப்படவுள்ளன. இதற்கு 8th, B.Sc, Diploma, ITI, MBBS, Nursing முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.8,500 முதல் ரூ.60,000 வரை வழங்கப்படும். மார்ச்.24 கடைசி நாளாகும். விண்ணபிக்க இங்கே க்ளிக் செய்யவும். இதை வேலை தேடும் உங்களுடைய நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
ஈரோட்டில் பேருந்து நிலையம் அருகில், ஆட்டோ ஓட்டிக் கொண்டிருப்பவர் செந்தில். இவர் இன்று ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கும்போது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனே ஆட்டோவை ஓரமாக நிறுத்திய நிலையில் செந்தில் மயக்கம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் உடனே 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு முதலுதவி அளித்தும் பலன் அளிக்கவில்லை. ஆட்டோ ஓட்டி கொண்டு இருக்கும்போது உயிரிழந்த சம்பவம் அப்பகுதில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம் கிச்சிபாளையத்தை சேர்ந்த ஜான் என்கிற சாணக்கியா, நசியனூர் தேசிய நெடுஞ்சாலைகள் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய சதீஸ், சரவணன், பூபாலன் ஆகியோரை சுட்டு பிடித்த காவல்துறையினர், வெட்டு காயம்பட்ட கார்த்திகேயனையும் கைது செய்தனர். இந்நிலையில் சேலத்தை சேர்ந்த பார்த்திபன், அழகரசன், சேதுவாசன், சிவகுமார், பெரியசாமி ஆகிய 5 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு அடுத்த சித்தோடு – அரசினர் பொறியியல் கல்லூரி பகுதியில், கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில், பெண்களுக்கான அழகுக்கலை இலவச பயிற்சி வகுப்பு ஏப்ரல் 2 முதல் மே 10 வரை நடைபெற உள்ளது. இதில் பயிற்சி, சீருடை உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்படும். விருப்பம் உள்ள நபர்கள் 0424 2400338, 8778323213, 7200650604 என்ற எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
சேலம், கிச்சிப்பாளையத்தை சேர்ந்த ரவுடி ஜான் என்கிற சாணக்கியா மீது சேலம் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி போன்ற குற்ற வழக்குகள் உள்ளன. கடந்த 2020 ஆம் ஆண்டு கிச்சிப்பாளையத்தை சேர்ந்த செல்லத்துரையை ஜான் கொலை செய்துள்ளார். எனவே செல்லதுரை கொலைக்கு பழி தீர்ப்பதற்காக ஜானை கும்பல் வெட்டி சாய்த்து இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக, வெயில் சுட்டெரித்து வந்தது. இதனிடையே நகரின் சில பகுதிகளில், கடந்த ஒரு வாரமாக, பரவலாக மழைபெய்து வருகிறது. இந்நிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, ஈரோடு மாவட்டத்தில் சில இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றார்போல், பொதுமக்கள் தங்கள் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது.
சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி வனப்பகுதியில் உள்ள மாரியம்மன் மிகவும் சக்தி வாய்ந்த காவல் தெய்வமாகும். அக்காலத்தில், அங்கு மேய்க்கப்படும் காராம்பசு ஒன்று தினந்தோறும் பாலை ஒரு வேங்கை மரத்தின் அடியில் கணாங்கு புற்கள் சூழ்ந்த சுயம்பு லிங்கத் திருவுருவம் மீது தன்னிச்சையாக சுரந்துள்ளது. அப்போது அங்கிருந்த ஒருவருக்கு தெய்வ அருள் வந்து பண்ணாரி அம்மன் அங்கு இருப்பதாக வாக்கு தெரிவித்ததாக கூறப்படுகிறது. (ஷேர்)
Sorry, no posts matched your criteria.