Erode

News October 2, 2024

ஈரோட்டில் காந்தி சிலைக்கு கலெக்டர் மரியாதை

image

ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில், ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், காந்தியடிகள் 156வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவுக்கு, ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கி, காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, ஈரோடு – காதிகிராப்ட் விற்பனை நிலையத்தில் கதர் சிறப்புத் தள்ளுபடி விற்பனையை தொடங்கி வைத்தார்.

News October 2, 2024

ஈரோடு மக்களே ‘டிச.31’ கடைசி நாள்

image

ஈரோடு மாவட்டத்தில் 01.01.2009- பிறந்து தங்களது பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவேற்றம் செய்யாதவர்கள் 31.12.2024ம் தேதிக்குள் ரூ.200/- செலுத்தி ஏற்கனவே பிறப்புச் சான்றிதழ் பெற்ற அலுவலகத்தில் பெயர் பதிவு செய்துகொள்ளலாம். மேலும் இதற்காக கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இதனை ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

News October 2, 2024

ஈரோட்டில் மானியத்துடன் வங்கிக் கடன் உதவி: கலெக்டர்

image

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மகளிர் விவசாய நிலம் வாங்குவதற்கு தாட்கோ மானியத்துடன் குறைந்த வட்டியில் வங்கிக் கடனுதவி வழங்குகிறது. இதில் கடனுதவி பெற www.tahdco.com என்ற தாட்கோ இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

News October 2, 2024

மாவட்ட தொழில் மையத்தில் கலெக்டர் ஆய்வு

image

ஈரோடு மாவட்டம் சிறு குரு தொழில் நிறுவனங்கள் மாவட்ட தொழில் மையத்தை இன்று ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா திடீரென்று ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது அங்குள்ள பதிவேடுகள் சரிபார்த்தார். மேலும் தொழில் தொடங்குவதற்காக எவ்வளவு பேர் விண்ணப்பித்துள்ளனர். புதிதாக தொழில் தொடங்கியவர்கள் பற்றியும் கேட்டறிந்தார்.

News October 1, 2024

மர்ம காய்ச்சலால் பள்ளி மாணவன் உயிரிழப்பு

image

பவானி அருகே உள்ள சேத்துனாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவன் தினேஷ்குமார். இவர் கடந்த ஒரு வார காலமாக மர்ம காய்ச்சல் அவதிப்பட்டு வந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று மர்ம காய்ச்சலால் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News October 1, 2024

ஈரோடு மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்

image

ஈரோடு மாவட்டத்தில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நாளை மாவட்டத்தின் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் ஊராட்சி பொது செலவினம், தணிக்கை அறிக்கை 2023-24, ஜல் ஜீவன் இயக்கம் போன்ற பல்வேறு கருத்துருக்கள் விவாதிக்கப்பட உள்ளது. இக்கூட்டத்தை கண்காணிக்க அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர் என கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

News October 1, 2024

ஈரோடு: ரயில் சேவையில் மாற்றம்

image

ஈரோடு-செங்கோட்டை இடையே மதுரை இரயில்வே கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே ஈரோட்டிலிருந்து செங்கோட்டை செல்லும் ரயில் (16845) வரும் 7ஆம் தேதிமுதல் 28ஆம் தேதி வரை திண்டுக்கல்-செங்கோட்டை இடையே மட்டும் இயக்கப்படும். இதேபோல் செங்கோட்டையிலிருந்து ஈரோடு வரும் ரயில் (16846) வரும் 8ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை செங்கோட்டை-திண்டுக்கல் இடையே மட்டும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 1, 2024

ஈரோட்டில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை: ஆட்சியர்

image

ஈரோடு மாவட்டத்தில், நாளை (அக்டோபர் 2) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இயங்கும் பார்களில் மது விற்பனை ஏதும் நடைபெறாது. மேலும் அன்றைய தினம் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேற்று செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News September 30, 2024

உதயநிதிக்கு அந்தியூர் எம்எல்ஏ வாழ்த்து

image

ஈரோடு மாவட்டம் அந்தியூர் எம்எல்ஏ ஏஜி வெங்கடாசலம் தமிழக துணை முதலமைச்சர் ஆக பதவியேற்றுக்கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு நேரில் சென்று வாழ்த்துகளை அந்தியூர் சட்டமன்ற தொகுதி மக்களின் சார்பாகவும் மலைவாழ் மக்களின் சார்பாகவும் பணி சிறக்க வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து கொண்டிருந்தனர்.

News September 30, 2024

ஈரோடு: டிஜிட்டல் பேமெண்ட் வசதி அறிமுகம்

image

சத்தி வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் துணை வேளாண்மை விரிவாக்க மையங்களில் விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்களான விதை நெல், உளுந்து, மக்காசோளம், நிலக்கடலை மற்றும் உரங்கள் உள்ளிட்ட அனைத்து இடுபொருட்களும் மானிய விலையில் வழங்கப்படுகிறது. முன்பு ரொக்கமாக பணம் செலுத்தினர். இனி டிஜிட்டல் பேமெண்ட் முறையில் செலுத்தி பொருட்களை வாங்கி செல்லலாம் என உதவி இயக்குநர்(பொ) கற்பகம் தெரிவித்துள்ளார்.