India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தீபாவளி பண்டிகை ஒட்டி தீபாவளி பாப் அப் மற்றும் பிரைட் ஸ்பார்க் அகாடமி இணைந்து நடத்தும் குழந்தைகளுக்கான ஓவிய போட்டி மற்றும் வண்ணம் தீட்டும் போட்டி நாளை மாலை ஈரோடு ஹோட்டல் மெரினாவில் நடைபெறுகிறது. 5 வயது முதல் 10 வயது குழந்தைகள் கலந்து கொள்ளலாம், இதில் கலந்து கொள்ளும் குழந்தைகள் இன்று மாலைக்குள் பதிவு செய்து கொள்ளவும், மேலும் தொடர்புக்கு 9597663386 என்ற எண்ணில் அழைத்து பதிவு செய்து கொள்ளலாம்.
ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட அறிக்கை: தீபாவளியில் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். பட்டாசு வெடிப்பதால் நிலம், நீர், காற்று மாசுபடுகிறது. வருங்காலத்தில் பசுமை பட்டாசுகளையே உற்பத்தி செய்து விற்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளனர். தீபாவளி காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு, 7 முதல், 8 மணி வரையும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
குழந்தை பிறந்து பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்காதவர்கள் 15 ஆண்டுகளில் பெயர் சேர்க்க வேண்டும். இந்நிலையில், ஈரோடு மாவட்டம், கோபி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 2009ஆம் ஆண்டுக்கு பின் பிறந்தவர்கள் பிறப்பு சான்றிதழில் தங்கள் பெயரை பதிவு செய்ய வரும் டிசம்பர் 31 கடைசி தேதியாகும். எனவே கோபி நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்து பதிவு செய்து கொள்ளலாம் என கோபி நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கீழ்கண்ட பகுதிகளில் இன்று பொது விநியோக திட்ட குறைதீர் நாள் முகாம் நடைபெற உள்ளது. அதன்படி, ஈரோடு-சின்னமாரியம்மன் கோயில், பெருந்துறை-வள்ளிபரத்தான்பாளையம், மொடக்குறிச்சி-ராசாம்பாளையம், கொடுமுடி-சோளக்காளிபாளையம், கோபி-கடுக்கம்பாளையம், நம்பியூர்-சாந்திபாளையம், பவானி-சின்னபுலியூர், அந்தியூர்-எண்ணமங்கலம், சத்தி-அரியப்பம்பாளையம், தாளவாடி-மல்லங்குழி பகுதியிலும் முகாம் நடைபெற உள்ளது.
ஈரோடு, வேளாளர் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரியில், ஈரோடு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், இன்று மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 200க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றனர். எனவே தனியார் துறையில் ஆர்வம் உள்ள இளைஞர்கள் பங்கேற்று பயன் பெறலாம் என கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பனை மர தொழிலாளர்கள் நலவாரியத்தின் சார்பில், திண்டல், கதிரம்பட்டி – பெரும்பள்ளம் ஏரிக்கரையில் 1 லட்சம் பனை விதைகள் நடும் விழா இன்று நடைபெற உள்ளது. இதற்கு தமிழ்நாடு பனை மர தொழிலாளர்கள் நலவாரியத்தின் தலைவர் நாராயணன் தலைமை வகிக்கிறார். அமைச்சர் முத்துச்சாமி நிகழ்வை துவக்கி வைக்கிறார். ஈரோடு எம்.பி., கே.இ.பிரகாஷ், ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் முன்னிலை வகிக்க உள்ளனர்.
ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நாளை (20.10.24), ஈரோடு – மணல்மேட்டில் உள்ள மாவட்ட அலுவலகம், கலைஞர் அறிவாலயத்தில் நடைபெறவுள்ளது. இதற்கு மாவட்ட கழக அவைத்தலைவர் குமார்முருகேஷ் தலைமை வகிக்கிறார். எனவே இக்கூட்டத்தில் ஈரோடு தெற்கு மாவட்ட திமுகவினர் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அமைச்சரும், தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான சு.முத்துசாமி தெரிவித்துள்ளார்.
சென்னிமலையில் இன்று பெருந்துறை போக்குவரத்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது ஒரு இளைஞர் புல்லட் வண்டியில் செல்லும்போது வெடிச்சத்தம் போன்ற ஒரு அதிபயங்கர சத்தம் கேட்டுக் கொண்டே சென்றது. இதனைக் கண்ட போக்குவரத்து போலீசார், அந்தப் பைக்கை ஓட்டி வந்த இளைஞருக்கு அபராதம் விதித்து எச்சரிக்கை செய்து அனுப்பினர்.
கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் தினந்தோறும் வந்து செல்வார்கள். அங்கு படகு சவாரி, அணையிலிருந்து கொட்டும் நீரில் குளிப்பது போன்ற சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்வார்கள். கடந்த 4 நாட்களாக கனமழையின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது சுற்றுலா பயணிகள் செல்வதற்கு இன்று முதல் பொதுப்பணித்துறை அனுமதி வழங்கி உள்ளது.
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அக்டோபர் 23ஆம் தேதி முதல் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ (பிரிலிம்ஸ்) போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தங்கள் விவரங்களை https://forms.gle/13skgPbY9TZk5Zf18 என்ற லிங்க்கில் பதிவு செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு 0424-2275860, 9499055943 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.