Erode

News October 24, 2024

கோபி அரசு ஐடிஐயில் புதிய தொழில் பிரிவில் சேர கால நீட்டிப்பு

image

கோபி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் புதிய தொழில் பிரிவில் சேர அக்.30ம் தேதி வரை கால நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக்குறிப்பு: மெக்கானிக் எலக்ட்ரிக் வீக்கில்ஸ், இண்டஸ்ட்ரியல் ரோபோட்டிக் மற்றும் டிஜிட்டல் மேனுஃபாக்சரிங் டெக்னீசியன் என 2 புதிய பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் விவரங்களுக்கு 70108-75256 எண்ணில் தொடர்புகொள்ளவும்.

News October 24, 2024

கோபியில் அதிகபட்சமாக 63.20 மி.மீ. மழை பதிவு

image

ஈரோடு மாவட்டத்தில், சில தினங்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை பல்வேறு இடங்களில் பெய்த மழையளவு விவரம் (மி.மீ): ஈரோடு, 9.80, கோபி, 63.20, மொடக்குறிச்சி, 1, பெருந்துறை, 7, கொடுமுடி, 20, சென்னிமலை, 5.40, பவானி, 4, கவுந்தப்பாடி, 2.40, அம்மாபேட்டை, 1.80, எலந்தகுட்டை மேடு, 27, குண்டேரிபள்ளம், 8 மி.மீ., மழை பெய்தது. கோபியில் அதிகபட்சமாக, 63.20 மி.மீ., மழையளவு பதிவானது.

News October 24, 2024

ஈரோடு: தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில், நாளை (அக்.25) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் தனியார்துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள இளைஞர்கள் பங்கேற்கலாம். மேலும் தகவலுக்கு, ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அல்லது 86754 12356, 94990 55942 எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 23, 2024

ஈரோட்டில் 4 இடங்களில் பட்டாசு கடை

image

ஈரோடு மாவட்டத்தில் ஆண்டுதோறும் போலீஸ் கேண்டீன் சார்பில் பட்டாசு கடை அமைக்கப்படும். நடப்பாண்டும் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின்படி எஸ்.பி., அலுவலக போலீஸ் கேண்டீன், ஈரோடு ஆயுதப்படை வளாகம், கோபி, சத்தி என நான்கு இடங்களில் வரும், 26ம் தேதி முதல் பட்டாசு கடை துவங்குகிறது.இங்கு ‘கிப்ட் பாக்ஸ்’ மட்டும் விற்பனை செய்யப்படும்.போலீசார் மட்டுமின்றி பொதுமக்களும் வாங்கி கொள்ளலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

News October 23, 2024

 தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு

image

 அந்தியூர் தனியார் பள்ளியில் தேர்வு எழுதிக் கொண்டிருந்த சிறுமி மயக்கம் அடைந்து கீழே விழுந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அந்த சிறுமிக்கு கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.  அதே பள்ளியில் அந்த சிறுமியின் தாய் ஆசிரியராக பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

News October 23, 2024

 புத்துயிர் பெறுமா பவானி புதிய பஸ் நிலையம் ?

image

பவானி நகராட்சியில் மேட்டூர் ரோட்டில் புதிய பஸ் நிலையம் கடந்த 1990ம் ஆண்டு கட்டப்பட்டது. பஸ் நிலையம் கட்டப்பட்டு 35 வருடங்களுக்கு மேலாவதால் கட்டுமானங்கள் வலுவிழந்து காணப்படுகிறது. மழைக்காலங்களில் பயணிகள் அவதிக்குள்ளாகும் நிலை காணப்படுகிறது. எனவே, அனைத்து வசதிகளுடன் பவானி புதிய பஸ் நிலையத்தை மேம்படுத்தி, புத்துயிர் அளிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

News October 23, 2024

விவசாயிகளுக்கு ஈரோடு கலெக்டர் அறிவிப்பு

image

ஈரோடு மாவட்டத்தில் ஒவ்வொரு மாதத்திலும் கடைசி வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த மாதத்துக்கான கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை (அக்.25) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் 11:30 மணி வரை மனுக்கள் வழங்கலாம். காலை 11:30 மணி முதல் 12:30 மணி வரை விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் குறைகளை நேரில் தெரிவிக்கலாம்.

News October 23, 2024

விவசாயிகளுக்கு ஈரோடு கலெக்டர் அறிவிப்பு

image

ஈரோடு மாவட்டத்தில் ஒவ்வொரு மாதத்திலும் கடைசி வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த மாதத்துக்கான கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை (அக்.25) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் 11:30 மணி வரை மனுக்கள் வழங்கலாம். காலை 11:30 மணி முதல் 12:30 மணி வரை விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் குறைகளை நேரில் தெரிவிக்கலாம்.

News October 23, 2024

ஈரோட்டில் கனமழை: சூழ்ந்த வெள்ளம்

image

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு, பகல் நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், நீர்நிலைகளில் நிரம்பி உபரிநீர் ஓடைகளில் வெளியேறி வருகிறது. நேற்று காலை திடீரென கனமழை பெய்தது. லேசாக தொடங்கிய மழை, படிப்படியாக அதிகரித்து கொட்டித் தீர்த்தது. ஈரோடு வஉசி பெரிய காய்கறி மார்க்கெட் பகுதி சேறும் சகதியுமாக காட்சியளித்தது. இதனால் மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

News October 23, 2024

தீபாவளி: ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டுக்கு 5 நாள் விடுமுறை

image

தீபாவளியை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் மஞ்சள் ஈரோடு, பெருந்துறை மற்றும் கோபி என பல இடங்களில் ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் 30ஆம் தேதி முதல் நவம்பா் 1 வரையும், 2 மற்றும் 3ம் தேதி சனி, ஞாயிறு என்பதாலும் ஐந்து நாட்கள் விடுமுறை விடப்படுவதாக ஈரோடு மஞ்சள் வணிகா்கள் மற்றும் கிடங்கு உரிமையாளா்கள் சங்க செயலாளா் சத்தியமூா்த்தி தெரிவித்துள்ளார்.