India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே சிறுவலூரில் கஞ்சா கடத்திய ஒடிசாவை சேர்ந்த சிவராஜ் சல்மா என்பவரை இன்று போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், கைது செய்யப்பட சிவராஜ் சல்மாவிடம் இருந்து 5 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம், கோபி அருகே பச்சைமலையில், இந்து சமய அறநிலையத்துறையின் கீழ், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் நடப்பாண்டு கந்தசஷ்டி, சூரசம்ஹாரம், திருக்கல்யாண உற்சவத் திருவிழா, வரும் நவம்பர் 2ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. நவ.2ல் சஷ்டி விரதம் காப்பு கட்டுதல் நடைபெறுகிறது. தொடர்ந்து தினமும் பல்வேறு ஹோமங்கள் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளன.
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், தீபாவளியை முன்னிட்டு கடைகள், வணிக நிறுவனங்கள் உரிய அனுமதி இன்றி பேனர் வைத்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சி பகுதியில், 50-க்கும் மேற்பட்ட இடங்களில் பேனர் வைக்க பெறப்பட்ட விண்ணப்பம் ஆய்வு செய்யப்பட உள்ளது என மாநகராட்சி இளநிலை பொறியாளர் ஸ்வரன் சிங் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், தீபாவளியை முன்னிட்டு கடைகள், வணிக நிறுவனங்கள் உரிய அனுமதி இன்றி பேனர் வைத்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சி பகுதியில், 50-க்கும் மேற்பட்ட இடங்களில் பேனர் வைக்க பெறப்பட்ட விண்ணப்பம் ஆய்வு செய்யப்பட உள்ளது என மாநகராட்சி இளநிலை பொறியாளர் ஸ்வரன் சிங் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தற்காலிக பட்டாசு கடை அமைக்க, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் கால அவகாசம் முடிவந்துள்ளது. இந்நிலையில் மாவட்டம் முழுவதும் இணையதளம் மூலம் மொத்தம் 265 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் அதிகாரிகள் நேரில் ஆய்வு நடத்தி 249 கடைகளுக்கு அனுமதியும், 7 கடை விண்ணப்பங்கள் நிராகரிப்பும், மீதமுள்ள 9 கடை விண்ணப்பங்கள் தொடர்பாக ஆய்வு நடைபெற்றுவருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக சத்தியமங்கலம், பவானிசாகரில் 85.60 மி.மீ. மழை பதிவானது. இதேபோல் கொடிவேரி-13.20, நம்பியூர்-3, சத்தி-51, தாளவாடியில், 22 மி.மீ. மழை பதிவானது. மழைக்கு பெருந்துறையில் வீடுகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது. ஒரு கான்கிரீட் வீடு இடிந்து விழுந்தது. இதனால் மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளானார்கள்.
புஞ்சைபுளியம்பட்டி அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் ஒரு தரப்பினர் தற்காலிக பந்தல் அமைத்து, சுவாமி சிலையை வைத்து வழிபாடு செய்துள்ளனர். இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் மற்றொரு தரப்பிலும் சிலை வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு வந்த புஞ்சைபுளியம்பட்டி போலீசார் மற்றும் அதிகாரிகள் அரசுக்கு சொந்தமான இடத்தில் இருந்த சுவாமி சிலை மற்றும் பந்தல்களை அகற்றினர்.
அந்தியூர் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது. அவற்றில் விவசாயிகளுடைய சிறுதானிய உற்பத்தி கண்காட்சி. ஊட்டச்சத்து உட்பட பல்வேறு கண்காட்சிகள் நடைபெற்றது. அவற்றில் ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சங்கரா கலந்து கொண்டு பார்வையிட்டார். அவருடன் வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறையைச் அலுவலர்கள் சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
1045 குளம், குட்டைகள், 1066 கிலோமீட்டர் குழாய் பதித்து, ஆறு நீரூந்து நிலையங்கள் மூலம் திட்டம் செயல்படுகிறது. அத்திக்கடவு அவிநாசி திட்ட ஆலோசனை கூட்டம் 5வது நீருந்து நிலையத்தில் (Pump House) நடைபெற்றது. இதில் L&T பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள், அரசு நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள், தன்னார்வ அமைப்பைச் சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர். திட்டத்தில் சிறப்பாக செயல்பட ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறையில் நேற்று மாலை லஞ்ச ஒழிப்பு திடீர் சோதனை மேற்கொண்டனர். லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில் போலீசார் திடீர் சோதனை நடத்தினார். அப்பொழுது சார் பதிவாளராக முத்துக்குமார் இருந்தார். இரவு வரை நீடித்த சோதனையில் கணக்கில் வராத ரூ. 2 லட்சத்து 56 ஆயிரத்து 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அலுவலர்களிடம் சார் பதிவாளரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.