India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சத்தியமங்கலம் தாலுகா அரசூர் அடுத்த குயவன்குழி பகுதியில் ஆகஸ்ட் 21ஆம் தேதி (புதன்கிழமை) மனுநீதி நாள் முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் பொதுமக்கள் பங்கேற்று தங்கள் கோரிக்கை மனுக்களை, முகாமில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அளித்து பயன்பெறலாம் என ஈரோடு கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார். இந்த மனுநீதி நாள் முகாமுக்கு கலெக்டர் ராஜ கோபால் சுன்காரா தலைமை வகிக்கிறார்.
ஈரோடு தபால் துறையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தேர்வானவர்களின் உத்தேசப் பட்டியல் வெளியாகியிருக்கிறது. ஈரோடு தபால் துறையில் கிளை அஞ்சலக அலுவலர், கிளை உதவி அஞ்சலக அலுவலர், தபால்காரர் ஆகிய 98 பணியிடங்களை நிரப்ப அண்மையில் அறிவிப்பு வெளியாகியிருந்தது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது என்பதால், ஏராளமானோர் விண்ணப்பித்திருந்தனர். தேர்வானவர்கள் <
ஈரோடு மாவட்டத்தில் மின் பராமரிப்புப் பணி காரணமாக இன்று (ஆகஸ்ட் 20) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்காணும் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவை: அவல்பூந்துறை, கானாபுரம், தூயம்புந்துறை, பூந்துறை, சேமூர், பள்ளியூத்து, திருமங்கலம், செங்கல்வலசு, வேலம்பாளையம், ரத்தைசூத்திரப்பாளையம் மற்றும் கே.ஏ.எஸ். தொழில்கள்.
ஈரோடு, அந்தியூர் வட்டாரத்தில் பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக முதலமைச்சர் நிவாரண உதவித் தொகையாக தலா 1 லட்சம் வீதம் 5 பேர்களுக்கு இன்று ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா இன்று குறைதீர்க்க முகாமில் வழங்கினார். பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களையும் பெற்றார்.
➤பவானிசாகர் அணை இன்று தனது 70ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.
➤விஜய் அரசியலுக்கு வந்தால் 5 முனை போட்டி முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
➤ஈரோடு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
➤உலகப் புகைப்பட தினத்தை ஒட்டி ஈரோடு போட்டோ வீடியோ கலைஞர்கள் சங்கம் சார்பில் பைக் விழிப்புணர்வு பேரணி
➤அந்தியூர்: பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது
➤ஈரோட்டில் ஆவணி அவிட்டம் கோலாகலம்
சத்தியமங்கலத்தில் பவானிசாகர் எம்.எல்.ஏ பண்ணாரி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசுகையில், உள்ளாட்சி தேர்தல் நடந்தால் அதிமுக கோட்டை என மீண்டும் நிருபிக்க வேண்டும். தற்போது உள்ள 4 முனை போட்டி நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதால் 5 முனை போட்டியாக மாறலாம் என்பதால் போட்டி கடுமையாக இருக்கலாம் என்றார்.
தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் இரவு 7 மணி வரை ஈரோடு மாவட்டத்தில் லேசானது முதல் மிதமான பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது.
சென்னிமலை யூனியன் முகாசி பிடாரியூர் ஊராட்சி காமாட்சியம்மன் மண்டபத்தில் இன்று மக்களுடன் முதல்வர் முகாம் நடக்கிறது. இம்முகாமினை சென்னிமலை யூனியன் சேர்மன் காயத்ரி இளங்கோ தொடங்கி வைத்தார். இதில் சென்னிமலை பி.டி.ஓ., பாலமுருகன், தலைவர் கேபிள். நாகராஜ், துணைத் தலைவர் சதீஷ் சுப்பிரமணியம், திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் பிரபு, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஆறுமுகம் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் +1, +2 மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்ட அசல் மதிப்பெண் சான்றிதழில் பிழை இருந்தால் திருத்தம் செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. எனவே பிழை இருந்தால் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். இந்த சான்றிதழ்கள் சென்னை தேர்வுத்துறை இயக்குனரகத்துக்கு அனுப்பி, பிழை திருத்தம் அல்லது மாற்று அசல் சான்றிதழ் வழங்கப்படும் என ஈரோடு மாவட்ட பள்ளி கல்வித்துறையினர் தெரிவித்தனர்.
பவானிசாகர் அணை இன்று தனது 70ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இது ஆசியாவிலேயே மிக நீளமான மண் அணை மற்றும் தமிழ்நாட்டில் 2வது பெரிய அணை. அணை கட்டப்பட்டது முதல் 70 ஆண்டுகளில், 22 முறை நிரம்பியுள்ளது. 1948ஆம் ஆண்டு தொடங்கி 7 ஆண்டு கட்டுமான பணிகளுக்கு பின் 1955 ஆக.19ஆம் தேதி அப்போதைய முதல்வர் காமராஜர் பவானிசாகர் அணையை நாட்டுக்கு அர்ப்பணித்தார். அணை குறித்து உங்கள் கருத்தை பதிவிடுங்க; ஷேர் பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.