Erode

News September 3, 2024

தடகள போட்டியை துவக்கி வைத்த அமைச்சர்

image

ஈரோடு மாவட்ட தடகள போட்டி சங்கத்தின் சார்பாக, 22வது தடகள போட்டி, ஈரோடு வ.உ.சி., பார்க் மைதானத்தில் இன்று துவங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு ஆயத் தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி பங்கேற்று போட்டிகளை துவங்கி வைத்தார். இதில் ஏராளமான தடகள வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

News September 3, 2024

ஈரோட்டில் அதிகரித்த தென்மேற்கு பருவமழை

image

தென்மேற்கு பருவமழை ஜூன் தொடக்கத்தில் தொடங்கி செப்டம்பர் இறுதியில் மறைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தென்மேற்கு பருவமழை, மழை அளவு குறித்து, இந்திய வானிலை ஆய்வு துறை, சென்னை மண்டல வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் 1.6.2024 முதல் 2.9.2024 வரை 160.4 மி.மீ மழை பெய்ய வேண்டும், ஆனால் நடப்பாண்டு 235.9 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

News September 2, 2024

ஈரோடு மாவட்ட போலீசார் எச்சரிக்கை

image

உலகில் நாளுக்கு நாள் புது புது மோசடி அரங்கேறி வருகிறது. அதன்படி, தற்போது சைபர் குற்றவாளிகளின் புது மோசடியாக, பழைய இந்திய ரூபாய் நாணயங்களை மாற்றி தருவதாகவும், குறிப்பிட்ட நம்பருக்கு போன் செய்தால் வீட்டிற்கே வந்து பணம் கொடுப்போம் என கூறி மோசடி நடைபெறுகிறது. எனவே மக்கள் இதனை நம்பி ஏமாற வேண்டாம் எனவும், சைபர் கிரைம் உதவிக்கு 1930 எண்ணை அழைக்கலாம் என ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

News September 2, 2024

50000 ரூபாய் அபராதத்துடன் வழக்கு தள்ளுபடி

image

பவானி நதியில் சட்டவிரோதமாக தண்ணீரை எடுத்து வர்த்தக பயன்பாட்டுக்கு விற்று வரும் நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி செல்வராஜ் என்பவர் வழக்கு, மனுதாரருக்கும், அந்த நிறுவனத்துக்கும் இடையில் உள்ள பிரச்சனை சம்பந்தமாக குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த  நிறுவனம் தரப்பு, தனிப்பட்ட விரோதம் காரணமாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல
வழக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

News September 2, 2024

மாரத்தான் போட்டி: பரிசுகளை குவிந்த மாணவிகள்

image

நேற்று கோபி கலை அறிவியல் கல்லூரி நடத்திய மராத்தான் போட்டியில் சென்னிமலை எம்.பி.என் நாச்சிமுத்து கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் 21 கிலோமீட்டர் பிரிவில் சி.வித்யா முதலிடம் பிடித்தார். அவருக்கு ரூபாய் 10,000 பரிசினை முன்னாள் டிஜிபி ரவி  வழங்கி கவுரவித்தார். அதே கல்லூரியில் நிர்மலா 10 கிலோ மீட்டர் பிரிவில் இரண்டாம் இடம் பிடித்தார். அவருக்கு ரூபாய் 6000 பரிசு வழங்கப்பட்டது.

News September 2, 2024

தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

image

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து பள்ளிக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. மிரட்டல் வந்ததையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் போலீசார் பள்ளியில் சோதனை செய்து வருகின்றனர்.

News September 2, 2024

முதல்வர் கோப்பை போட்டிக்கு இன்று கடைசி நாள்

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்களுக்கான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி இம்மாதம் நடத்தப்படவுள்ளது. இதற்கு முன்பதிவு ஆக.17ல் துவங்கி, கூடுதல் அவகாசத்துடன் இன்று (செப்.2) வரை வழங்கப்பட்டது. ஈரோட்டைச் சேர்ந்தவர்கள் இன்று மாலைக்குள் https://www.sdat.tn.gov.in/என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

News September 2, 2024

கோபி பகுதியில் நாளை மின்தடை

image

ஈரோடு மாவட்டத்தில் நாளை(3ஆம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோபி துணை மின்நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், கோபி பேருந்து நிலையம் பகுதி, பாரியூர், மொடச்சூர், பா.வெள்ளாளபாளையம், நஞ்சகவுண்டன்பாளையம், குள்ளம்பாளையம், வேட்டைகாரன்கோவில், வடுகபாளையம், பழையூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

News September 1, 2024

ஈரோடு கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் நாளை மாலை 3 மணிக்கு பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் தொடர்பான நிகழ்வுகளை தடுத்து நிறுத்தல் மற்றும் கையாளுதல் குறித்த கூட்டம் தமிழக அரசின் தலைமை செயலாளரால் காணொலி மூலம் நடைபெற உள்ளது. எனவே ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி-கல்லூரி, தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் இதில் தவறாது பங்கேற்ற வேண்டும் என ஈரோடு கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

News September 1, 2024

அரசு மருத்துவமனை அருகே வாகனங்கள் நிறுத்த தடை

image

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை புதிய கட்டிடம் உள்ள நுழைவுவாயில் வழியாக ஆம்புலன்ஸ்கள் செல்வதற்கு வசதியாக மேம்பாலத்திற்கு கீழ் மீனாட்சி சுந்தரனார் சாலையில் வாகனங்கள் நிறுத்தக்கூடாது, என போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். மீறி நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என தடுப்புகள் வைத்து உள்ளனர்.

error: Content is protected !!