Erode

News September 4, 2024

ஈரோட்டில் தீவிர கண்காணிப்பு

image

ஈரோடு மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, போலீசார் சோதனை சாவடிகளில், விநாயகர் சிலைகள் எங்கு இருந்து எங்கு கொண்டு செல்லப்படுகிறது, வாகனங்களில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றனவா என போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் 8 புதிய இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்தும், பழைய 10 சோதனை சாவடிகளிலும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

News September 4, 2024

ஈரோட்டில் போலீசார் தீவிர கண்காணிப்பு

image

ஈரோடு மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, போலீசார் சோதனை சாவடிகளில், விநாயகர் சிலைகள் எங்கு இருந்து எங்கு கொண்டு செல்லப்படுகிறது, வாகனங்களில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் 8 புதிய இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்தும், பழைய 10 சோதனை சாவடிகளிலும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

News September 4, 2024

வெடிகுண்டு மிரட்டல்: மாணவர்களுக்கு எச்சரிக்கை

image

ஈரோடு, பூந்துறை ரோட்டில் தனியார் பள்ளிக்கு நேற்று முன்தினம் இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இந்த இமெயிலை அனுப்பியவர்களிடம் போலீசார் விசாரித்த போது அதே பள்ளியில் படிக்கும் 2 மாணவர்கள் அனுப்பியது தெரிய வந்தது. மேலும், விசாரித்ததில் பள்ளி பிடிக்காததால், விடுமுறைக்காக வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது உறுதியானது. இதனையடுத்து அவர்களை எச்சரித்து அனுப்பினர்.

News September 4, 2024

துப்பாக்கியால் சுட்ட நபர் கைது: போலீஸ் விசாரணை

image

ஈரோடு, அம்மாபேட்டையில் கட்டிட தொழிலாள செந்தில்குமார் என்பவரை துப்பாக்கியால் சுட்ட மற்றொரு கட்டிட தொழிலாளி கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர். இதில் காயம் அடைந்த செந்தில்குமார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், கார்த்திக்கை கைது செய்த போலீசார், அவர் கையில் துப்பாக்கி வந்தது எப்படி என விசாரணை செய்து வருகின்றனர்.

News September 4, 2024

ஈரோடு மாணவர்கள் கவனத்திற்கு

image

தமிழ் வளர்ச்சி துறை சார்பில், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை, ஈ.வெ.ரா., பிறந்தநாளை முன்னிட்டு வரும் 12, 13ஆம் தேதி பேச்சுப் போட்டி பன்னீர்செல்வம் பூங்கா அருகே உள்ள அரசு பெண்கள் மாதிரி பள்ளியில் நடக்கவுள்ளது. இதில் முதல் 3 இடங்களை பெறுவோருக்கு ரூ.5,000, ரூ.3,000, ரூ.2,000 வழங்கப்படும். இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என அறிவித்துள்ளனர்.

News September 3, 2024

ஈரோடு விவசாயிகளுக்கு அழைப்பு

image

ஈரோடு மாவட்டத்தில் நடப்பு காரீப் பருவத்தில், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்திற்கு துவரை, மக்காச்சோளம், நிலக்கடலை, எள், ராகி பயிர்கள் உள்வட்ட அளவில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் அரசு பொது சேவை மையம், தேசிய வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் செப்டம்பர் 16ம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் என பவானிசாகர் உதவி வேளாண்மை அதிகாரி தெரிவித்துள்ளார்.

News September 3, 2024

மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவில் பணி

image

ஈரோடு மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவில், சட்ட உதவி பாதுகாப்பு கவுன்சில் முறை பிரிவுக்கு, தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்களிடம் இருந்து உதவியாளர்-கிளார்க், பியூன் பணியிடங்களுக்கு தொகுப்பூதியம் அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. இதற்கு மாவட்ட நீதிமன்ற இணையதளமான https://erode.dcourts.gov.in உள்ள விண்ணப்பத்தின் படி செப்டம்பர் 6ம் தேதி மாலை 5:30 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

News September 3, 2024

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவரா நீங்கள்?

image

ஈரோடு மாவட்டத்தில் Way2News நிருபராக மாற விருப்பமும், ஆர்வமும் உள்ளதா? உங்கள் பகுதிகளில் பகுதிகளில் நடக்கும் தினசரி நிகழ்வுகளை செய்திகளாக பதிவிட்டு கூடுதல் வருவாய் ஈட்டுங்கள். நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு செய்திக்கும் உரிய ரூபாய் வழங்கப்படும். உங்கள் ஊரின் நிருபராக மாறுங்கள் கூடுதல் வருவாய் ஈட்டுங்கள்! இப்போதே நிருபராக பதிவு செய்யவும். தொடர்புக்கு 91603 22122

News September 3, 2024

அரசு கலை கல்லூரி பேராசிரியர் டிஸ்மிஸ் 

image

சத்தியமங்கலம் அரசு கலைக் கல்லூரியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் வணிகவியல் துறை கௌரவ பேராசிரியர் பிரேம் குமார், மாணவிகளை ஆபாச வார்த்தைகளால் திட்டியதால், தரக்குறைவாக நடந்ததால் மாணவிகள் கல்லூரி முதல்வருக்கு புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் குழு அமைத்து விசாரித்ததில், பேராசிரியர் தவறாக நடந்தது தெரியவந்து. உடனே கல்லூரியில் இருந்து டிஸ்மிஸ் செய்தனர். 

News September 3, 2024

தடகள போட்டியை துவக்கி வைத்த அமைச்சர்

image

ஈரோடு மாவட்ட தடகள போட்டி சங்கத்தின் சார்பாக, 22வது தடகள போட்டி, ஈரோடு வ.உ.சி., பார்க் மைதானத்தில் இன்று துவங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு ஆயத் தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி பங்கேற்று போட்டிகளை துவங்கி வைத்தார். இதில் ஏராளமான தடகள வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!