Erode

News September 6, 2024

ஈரோட்டில் உள்கட்சித் தேர்தல்

image

SDPI கட்சியின் கிளை முதல் தேசிய அளவிலான உட்கட்சி தேர்தல் 2024-2027 ஈரோடு வடக்கு மாவட்டத்தின் சார்பாக நேற்று நடைபெற்றது. பவானிசாகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புஞ்சைபுளியம்பட்டி நகரில்  தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலை தேர்தல் அதிகாரி (RO) A.சமீருல்லா நடத்தினார். இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் A.M.முகசின் காமினூன் மற்றும் மாவட்ட துணை தலைவர் S.சுலைமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

News September 5, 2024

ஈரோட்டிற்கு பாதுகாப்பு பணிக்கு வரும் 270 போலீசார்

image

விநாயகர் சதுர்த்தி விழா வரும் 7ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. எனவே ஈரோடு மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வருகிறது. மேலும் மாவட்டத்தில் 48 இடங்களில் சிலைகளை கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஈரோடு மாவட்டத்தில் 2,000 போலீசார் மற்றும் கோவையில் இருந்து 270 போலீசார் பாதுகாப்பு பணிக்கு வர உள்ளனர் என காவல்துறை வட்டாரம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

News September 5, 2024

ஈரோட்டில் இருந்து 3 நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்கம்

image

ஈரோட்டில் இருந்து விநாயகர் சதுர்த்தி மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. அதன்படி, நாளை 6ம் தேதி, 7ம் தேதி (சனி) மற்றும் 8ம் தேதி (ஞாயிறு) 3 நாட்கள் ஈரோட்டில் இருந்து நாமக்கல், கரூர், சேலம், கோவை, திருச்சி, மதுரை ஆகிய ஊர்களுக்கு கூடுதலாக 50 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஈரோடு மண்டல பொதுமேலாளர் மோகன்குமார் தெரிவித்துள்ளார்.

News September 5, 2024

ஈரோடு அருகே சாலை மறியலால் பரபரப்பு

image

பவானி பழைய பேருந்து நிலையம் பகுதியிலிருந்து பவானி அரசு ஆஸ்பத்திரி எதிரேயுள்ள பவானி ஆற்றங்கரையோர பகுதிகளில் நீர்நிலை புறம்போக்கில் கட்டப்பட்டுள்ள 133 வீடுகள் மற்றும் கடைகளை செப்டம்பர் 18க்குள் அகற்ற நீர்வளத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் இன்று பவானி-அந்தியூர் பிரிவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

News September 5, 2024

முதல்வர் கோப்பை போட்டிக்கு 21,690 பேர் பதிவு

image

தமிழ்நாட்டில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி செப்டம்பர் 10ம் தேதி தொடங்குகிறது. இதில் ஐந்து பிரிவுகளாக போட்டிகள் நடக்க உள்ளது. இப்போட்டியில் பங்கேற்பதற்கான முன்பதிவு கடந்த ஆகஸ்டு 17ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 2ஆம் தேதி முடிவடைந்தது. ஈரோடு மாவட்டத்தில், முதல்வர் கோப்பை போட்டிக்கு 21,690 பேர் பதிவு செய்துள்ளனர் என மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 5, 2024

ஈரோட்டில் 15,000 வீடுகளில் சோதனை

image

ஈரோடு மாநகராட்சியில், பருவ மழையால் ஏற்படும் டெங்கு மற்றும் வைரல் காய்ச்சல் முன்னெச்சரிக்கையாக கொசு ஒழிப்பு மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஈரோடு மாநகராட்சியில் கொசு ஒழிப்பு பணிக்காக 350 பேர் தினமும் 60 வார்டுகளில் 15,000 வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என ஈரோடு மாநகர் நல அதிகாரி பிரகாஷ் தெரிவித்தார்.

News September 5, 2024

ஈரோடு: தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் எம்எல்ஏ ஆய்வு

image

பவானிசாகா் சட்டமன்ற தொகுதி, ராஜன்நகா் பகுதியில் நேற்று முன்தினம் (செப்.3) குடியிருப்பு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் A.பண்ணாரி நேற்று (செப்.4) நோில் சென்று தீ விபத்து ஏற்பட்ட பகுதிகளை பாா்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கியும், மேலும் தேவையான உதவிகளை செய்து தருமாறு அதிகாரிகளுக்கு தெரிவித்தார்.

News September 4, 2024

ஈரோட்டில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்

image

ஈரோடு செட்டிபாளையத்தில் செப்டம்பர் 4 & 5 இரு தினங்கள் போர்த் கேம்பஸ் வழங்கும் மாபெரும் வேலை வாய்ப்பு நடைபெற உள்ளது. வங்கி துறையில் பணியாற்ற தனியார் வங்கிகள் இதில் பங்கேற்கின்றன. பட்டதாரிகள் 21 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் இதில் பங்கேற்கலாம். அனுபவம் உள்ளவர்களும், அனுபவம் இல்லாதவர்களும் கலந்துகொள்ளலாம், நுழைவு கட்டணம் இல்லை, மேலும் விவரங்களுக்கு 9150041003 தொடர்பு கொள்ளலாம்.

News September 4, 2024

படுகாயமடைந்த விவசாயிகளுக்கு Ex அமைச்சர் ஆறுதல்

image

சத்தியமங்கலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காசிபாளையத்தை சேர்ந்தவர் விவசாயி கோபால். இவர் குளத்தில் ஆடு மேய்த்து கொண்டிருந்த போது காட்டுப்பன்றி தாக்கியதில் படுகாயமடைந்தார். அவர் சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கு நேரில் சென்று முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், எம்எல்ஏ பண்ணாரி ஆறுதல் கூறினார்கள். உடன் அதிமுக கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.

News September 4, 2024

ஈரோடு: தலைமை ஆசிரியருக்கு சென்னையில் விருது

image

அந்தியூர் அருகே ஆலம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஜெயக்குமார். இவருக்கு 2023-24ஆம் கல்வி ஆண்டிற்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 5ஆம் தேதி சென்னையில் நடைபெறும் ஆசிரியர் தினத்தன்று விருது பெற உள்ளார். அவருக்கு பள்ளியின் ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ, மாணவியர் வாழ்த்துகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!