India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மொடக்குறிச்சி தோட்டக்கலை துறை சார்பில், சென்னிமலை வனச்சரக நாற்று பண்ணையிலிருந்து தேக்கு மற்றும் மகாகனி மரக்கன்றுகளை தோப்பாக வைக்க விரும்பும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் இலவசமாக வழங்கப்படுகிறது. தேவைப்படும் விவசாயிகள் தோட்டக்கலைத் துறையை தொடர்புகொள்ளலாம் என தோட்டக்கலை உதவி இயக்குநர் பா. சிந்தியா 9787045557 அறிவித்துள்ளார். தேவைப்படும் விவசாயிகள் ஆதார் அட்டை ,பட்டா நகல் தேவை.
உலகில் நாளுக்கு நாள் புது புது மோசடிகள் அரங்கேறி வருகின்றன. அதன்படி, தற்போது சைபர் குற்றவாளிகளின் புதிய மோசடியாக, 50 ஜிபி இலவச டேட்டா தருவதாக, லிங்க் அனுப்பி மோசடி நடைபெறுகிறது. இந்த லிங்கை தொட்டால் தங்கள் வங்கியில் இருந்து பணம் திருடப்படும் வாய்ப்புள்ளது. எனவே மக்கள் இதனை நம்பி ஏமாற வேண்டாம் எனவும், சைபர் கிரைம் உதவிக்கு 1930 எண்ணை அழைக்கலாம் என ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஈரோடு அருகே குமலன்குட்டையில், இந்து முன்னணி மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில், ஸ்ரீ விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் திருவுருவ சிலை நேற்று மாலை திருவீதி உலா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி சுவாமி தரிசனம் செய்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சியின் சூரம்பட்டி கிழக்கு மண்டல் தலைவர் நிர்மல் உட்பட கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தமிழகத்தில் வசித்து வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் (வெளி மாநிலங்களில் இருந்து நிரந்தரமாக ஈரோடு மாவட்டத்திற்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்) பொது விநியோக திட்டத்தில் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களை பெற விரும்பினால், புதிய குடும்ப அட்டை கோரி e-shram வலைதளத்தில் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். இதனை ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
சத்தியமங்கலத்தில் இருந்து கேர்மாளத்திக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதேபோல கேர்மாளத்தில் இருந்து சத்தியமங்கலத்திற்கு பயணிகளை ஏற்றுகொண்டு அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. இன்று மாலை வைத்தியநாதபுரம் அருகே 2 பேருந்துகளும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பேருந்து முன் பக்க கண்ணாடி உடைந்து சேதாரமானது.
ஈரோடு மாவட்டம் நஞ்சனாபுரத்தில் உள்ள கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மகளிர் குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, செல்வராஜ் எம்பி, அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்எல்ஏ, வங்கி அதிகாரிகள்ஸ மகளிர் குழுவினர் கலந்து கொண்டனர்.
ஈரோடு அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மற்றும் கலைமகள் மேல்நிலைப் பள்ளி ஆகிய 2 மையங்களில், யுபிஎஸ்சி போட்டி தேர்வுக்கு படிப்போருக்கு நான் முதல்வன் மதிப்பீட்டு தேர்வு நேற்று நடைபெற்றது. இத்தேர்வினை எழுத 658 பேர் விண்ணப்பித்த நிலையில், 434 பேர் தேர்வு எழுதினர். 224 பேர் தேர்வு எழுத வரவில்லை. இத்தேர்வில் தேர்ச்சி பெறும் 1,000 பேரை தேர்வு செய்து மாதம் ரூ7,500 வீதம் 10 மாதங்கள் வழங்கப்படும்.
ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 படித்த மாணவர்களில், உயர் கல்வியில் சேராத மாணவர்களை கண்டறிந்து, அவர்களை உயர் கல்விக்கு ஊக்கப்படுத்தும் வகையில், ‘உயர்வுக்குப் படி’ என்ற சிறப்பு முகாம், இன்று மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், நிர்வாக காரணங்களால் இம்முகாம் நாளை மறுநாள் (செப்.11) மாற்றப்பட்டுள்ளது என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
அந்தியூர் அடுத்த அம்மாபேட்டை பகுதியில் நேற்று மாலை மிதமான மழை பெய்தது. அம்மாபேட்டை, படவல்கால்வாய், பட்டஞ்சாவடி, கோம்பூர், ஊமாரெட்டியூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், நேற்று மாலை சிறிது நேரம் லேசானது முதல் மிதமான மழை கொட்டியது. இதனால் குளிர்ந்த சூழல் நிலவியதால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் நேற்று காலை வரை அம்மாபேட்டையில் 15 மிமீ மழை பதிவாகியுள்ளது.
விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வெளியூரில் வேலைபார்ப்பவர்கள், படிப்பவர்கள் ஈரோட்டுக்கு வந்த நிலையில், விடுமுறை முடிந்து மீண்டும் நேற்று வெளியூர் திரும்பினர். ஏராளமானோர் ஈரோடு பஸ் ஸ்டாண்டில் குவிந்ததால் மாலையிலிருந்தே கூட்டம் அலைமோதியது. பெரும்பாலான பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டும் நள்ளிரவு வரை கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததால் பஸ் கிடைக்காமல் பயணிகள் தவித்தனர்.
Sorry, no posts matched your criteria.