Erode

News September 12, 2024

ஈரோடு கலெக்டர் அறிவிப்பு

image

ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 படித்த மாணவர்களில், உயர் கல்வியில் சேராத மாணவர்களை கண்டறிந்து, அவர்களை உயர் கல்விக்கு ஊக்கப்படுத்தும் வகையில், ‘உயர்வுக்குப் படி’ என்ற சிறப்பு முகாம், இன்று கோபி கலை அறிவியல் கல்லூரில் நடைபெற உள்ளது. இதில் மாணவர்கள் பங்கேற்று பயனடையலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

News September 12, 2024

ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு வாழ்த்து

image

2023-24ஆம் ஆண்டு ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ரூ.17.92 கோடி லாபம் ஈட்டியுள்ளது. முன்னாள் வங்கி இயக்குநர்களுக்கும், கூடுதல் பதிவாளர்/மேலாண்மை இயக்குநருக்கும், அனைத்து நிலை பணியாளருக்கும் இணைந்து புதிய கூட்டுறவு வங்கி லாபகரமாக இயங்கிய உதவிய அனைத்து பணியாளர்களுக்கும் கிருஷ்ணராஜ் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

News September 12, 2024

ஈரோட்டில் ரூ.50 லட்சம் கல்விக்கடன்

image

ஈரோடு ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் உயர்வுக்குப் படி 2024 முகாம் நேற்று நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா துவக்கிவைத்தார். இதில் பங்கேற்ற 148 மாணவ-மாணவிகளில் 43 பேரின் மேற்படிப்புக்காக கல்லூரியில் உடனடி சேர்க்கை வழங்கப்பட்டது. மேலும் கல்விக்கடன் மேளாவில் விண்ணப்பித்த 180 மாணவ, மாணவியர்களில் 20 பேருக்கு ரூ.50 லட்சம் கல்விக்கடன் வழங்கப்பட்டது.

News September 11, 2024

ஈரோட்டில் பூண்டு விலை தொடர்ந்து உச்சம்

image

ஈரோடு மார்க்கெட்டில் சில்லரை விலையில் நாட்டு பூண்டு மற்றும் மலை பூண்டு ஒரு கிலோ ரூ.380 முதல் ரூ.420 வரையும் விற்பனையானது. இதனால் கிலோ கணக்கில் வாங்கும் பொதுமக்கள் அரை கிலோ, கால் கிலோ என்ற கணக்கில் பூண்டினை வாங்கி சென்றனர்.பூண்டு மண்டி உரிமையாளர் கார்த்தி கூறியதாவது:ஜனவரி மாதத்திற்கு பிறகு பூண்டின் விலை குறைய துவங்கும். புது பூண்டு வரத்தாகும் வரை பூண்டின் விலை தொடர்ந்து அதிகரிக்கும் என்றார்.

News September 11, 2024

ஈரோடு: மாணவ, மாணவிகளுக்கு மாரத்தான் போட்டி

image

ஈரோடு மாவட்டம் எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகுகள் சார்பில் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சந்திரா கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார். சுகாதாரத்துறை இணை இயக்குநர் அம்பிகா, தன்னார்வலர்கள், மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

News September 11, 2024

ஈரோடு: மேளதாளத்துடன் எடுத்துச் செல்லப்பட்ட சிலைகள்

image

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி காந்தி நகரில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாக வைத்த விநாயகர் சிலைகளை பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் எழுச்சியுடன் கொண்டாடினர். அன்னதானம் மற்றும் மேளதாளத்துடன் காந்திநகர் பொதுமக்கள் சார்பாக ஏழு இடங்களில் விநாயகர் சிலைகள்
பூஜை செய்து ஆற்றுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

News September 11, 2024

ஈரோட்டில் வேலை: விண்ணப்பிக்க அழைப்பு

image

ஈரோடு மாநகராட்சி நகர்புற சுகாதார நிலையத்தில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையிலான மருந்தாளுநர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் என மாநகராட்சி ஆணையாளர் மனிஷ் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். இதற்கு கல்வி சான்று நகல்கள் மற்றும் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்தை வரும் 24ஆம் தேதிக்குள் ஆணையாளர், ஈரோடு மாநகராட்சி அலுவலகம், ஈரோடு என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 11, 2024

ஈரோட்டில் இன்று மின்தடை

image

ஈரோடு ஆட்சியர் அலுவலக துணை மின் நிலையம் மற்றும் அதற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (செப்.11) பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால் பின்வரும் பகுதிகளில் காலை 9 முதல் மதியம் 2 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அவை: காந்திநகர், பழனியப்பா வீதி, ஈ.பி.காலனி, பெருந்துறை சாலை, பாலசுப்பிரமணியன் நகர், சின்னமுத்து வீதி. எனவே துமக்கள் அதற்கேற்றாற்போல் தயார்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

News September 10, 2024

முகமூடி கொள்ளை நாடகம் என போலீஸ் தகவல்

image

சென்னிமலை அடுத்துள்ள அர்த்தனாரி பாளையத்தில் வீட்டில் இருந்த ரம்யா என்பவரை 3 முகமூடிக் கொள்ளையர்கள் புகுந்து கட்டிப் போட்டுவிட்டு வீட்டிலிருந்து ரூ. 3 லட்சம் கொள்ளையடித்து சென்றதாக தம்பி கோகுல கிருஷ்ணன் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணையில் ரம்யா கடன் பிரச்சனையால் பணத்தை எடுத்துக்கொண்டு முகமூடிக் கொள்ளையர்கள் புகுந்ததாக நாடகமாடியது தெரியவந்தது. இது தொடர்ந்து ரம்யாவை போலீசார் கைது செய்தனர்.

News September 10, 2024

ஈரோடு: விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் இலவசம்

image

மொடக்குறிச்சி தோட்டக்கலை துறை சார்பில், சென்னிமலை வனச்சரக நாற்று பண்ணையிலிருந்து தேக்கு மற்றும் மகாகனி மரக்கன்றுகளை தோப்பாக வைக்க விரும்பும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் இலவசமாக வழங்கப்படுகிறது. தேவைப்படும் விவசாயிகள் தோட்டக்கலைத் துறையை தொடர்புகொள்ளலாம் என தோட்டக்கலை உதவி இயக்குநர் பா. சிந்தியா 9787045557 அறிவித்துள்ளார். தேவைப்படும் விவசாயிகள் ஆதார் அட்டை ,பட்டா நகல் தேவை.

error: Content is protected !!