India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டில் 2024 -2025ம் ஆண்டுக்கான காரிப் பயிர் காப்பீடு திட்டம் செய்துகொள்ளுமாறு ஈரோடு அனைத்து வருவாய் கிராம விவசாயிகள் பயன் பெற்றுக்கொள்ளுமாறு ஈரோடு வேளாண்மை இணை இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ளார். அருகில் உள்ள இ-சேவை மையம் மற்றும் வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் பதிவு செய்து கொள்ளலாம், மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண்மை மையத்தை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஈரோடு நகர பரிபாலன சபை செப்டம்பர் 16, 1871 அன்று உருவாக்கப்பட்டது. எனவே ஆண்டுதோறும் செப்டம்பர் 16ஆம் தேதியை ஈரோடு மாவட்ட மக்கள் ஈரோடு தினமாக கொண்டாடி வருகிறார்கள். அதன்படி நாளை (செப்.16) ஈரோடு தினமாக கொண்டாடப்பட உள்ளது. ஈரோடு நகரத்திற்கு 152 ஆண்டுகள் இன்றுடன் நிறைவடைந்தது. நாளை 153வது ஆண்டில் அடி எடுத்து வைக்க உள்ளது.
ஈரோடு, அம்மாபேட்டை பகுதியில் பாலமலை உள்ளது. இந்த மலை சேலம் மாவட்டம், மேட்டூர் வனசரகத்திற்கு உட்பட்டது. இந்நிலையில், இம்மலையில் உள்ள சிவன் கோவிலுக்கு புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் பக்தர்கள் வருவது வழக்கம். எனவே மலை ஏறும் பக்தர்கள் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழையவோ, மது அருந்தவோ, புகை பிடிக்கவோ, குப்பைகளை போடவோ கூடாது என வனத்துறை சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் குரூப் 2 தேர்வு இன்று நடைபெற்றது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 25,475 பேர் குரூப் 2 தேர்வு விண்ணப்பித்திருந்தனர். இதில் 18,943 பேர் தேர்வு எழுதினர். 6,532 பேர் தேர் எழுத வரவில்லை. மேலும் ஈரோடு – தெற்குப்பள்ளம், தி பாரதி வித்யா பவன் பள்ளியில் நடைபெற்ற குரூப் 2 தேர்வினை ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேரில் சென்று ஆய்வுசெய்தார்.
➤தாளவாடியில் சாலையில் சென்று கொண்டு இருந்த வாகன ஓட்டிகளை யானை துரத்தியதால், நுழையில் 2 பேர் உயிர் தப்பினர். ➤ஈரோட்டில் டாஸ்மாக் கடைக்கு வரும் 17ஆம் தேதி விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளனர். ➤ஈரோட்டில் குருப் 2 தேர்வு நடைபெற்றது. இதில் தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ➤சென்னிமலையில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
தாளவாடியில் இருந்து ஆசனூர் செல்லும் சாலை கும்டாபுரம் அருகே இன்று மதியம் அவ்வழியாக இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது வனப்பகுதியில் இருந்து வந்த ஒற்றை யானை வாகன ஓட்டியை துரத்தியது. யானையிடம் இருந்து அதிர்ஷ்டவசமாக 2பேர் உயிர் தப்பினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள நிலமற்ற ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி வகுப்பு விவசாய தொழிலாளர்களுக்கு, நிலம் வாங்க சந்தை மதிப்பில் 50% (அ) ரூ.5 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் மகளிருக்கு முன்னுரிமை மற்றும் முத்திரை தாள் மற்றும் பதிவு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படும். மேலும் விபரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை 0424-2259453 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் இன்று குரூப் 2ஏ தேர்வு நடைபெறுகிறது. இதில் ஈரோட்டில் மட்டும் 87 மையங்களில் 25,474 பேர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வினை கண்காணிக்க மூன்று பறக்கும் படை குழுவும்,19 நடமாடும் குழுவும், மூன்று கண்காணிப்பு அலுவலர்களும் 19 ஆய்வு அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். வினாத்தாள் வைக்கப்பட்டுள்ள ஈரோடு கருவூலத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வரும் 17ம் தேதி (செவ்வாய்கிழமை) மிலாது நபியை முன்னிட்டு, மது விற்பனை இல்லாத நாளாக அனுசரிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் வரும் 17ம் தேதி டாஸ்மாக் கடைகள், அதனுடன் இயங்கும் பார்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்று மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
பவானி அடுத்த ஊராட்சிக்கோட்டை பேரேஜ் பகுதியில் லாரி மீது கழிவுநீர் வாகனம் மோதி விபத்து ஏற்ப்பட்டது. மேட்டூரில் இருந்து பவானி நோக்கி இன்று மாலை சரக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. லாரி ஊராட்சிக்கோட்டை அருகே வரும் போது எதிரே பவானியில் இருந்து வந்த கழிவுநீர் மற்றொரு வாகனத்தை முந்தி செல்ல முற்பட்டது. அப்போது கழிவுநீர் வாகனம், சரக்கு லாரியின் பக்கவாட்டில் மோதி விபத்திற்குள்ளானது.
Sorry, no posts matched your criteria.