Erode

News September 17, 2024

ஈரோட்டின் தொண்டு செய்து பழுத்த பழம்!

image

சமூகத்தில் புரையோடிக்கொண்டிருந்த சா’தீய’ சிந்தனைகளை அப்புறப்படுத்த ஈரோட்டில் உதித்த பெரியார் என்று அறியப்படும் ஈ.வெ.ராமசாமியின் பிறந்த தினம் இன்று. இவரை SOCIAL ENGINEER என்று கூட அழைக்கலாம். இந்த சோசியல் இன்ஜினியரிங் அவ்வளவு எளிதில் நடக்கக் கூடியது அல்ல; அதை செய்து காட்டியவர் ஈவெரா என்ற பெரியார். அவரை தொண்டு செய்து பழுத்த பழம் என்று அவரை நேசிப்போர் சொல்வதுண்டு. பெரியார் குறித்து உங்கள் கருத்து?

News September 16, 2024

ஈரோடு அருகே தேனீ கடித்து பலர் காயம்

image

சென்னிமலை யூனியன் முருங்கத்தொழுவு ஊராட்சி ,கிழக்கு புதுப்பாளையம் கன்னிமார் சுவாமி கோவிலில் இன்று திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது, கோவில் அருகில் ஆலமரத்தில் இருந்த மலைத்தேன் கூடு கலைந்து திருமணத்துக்கு வந்திருந்த நபர்களை தேனீ கடித்ததில் 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

News September 16, 2024

ஈரோட்டில் மாணவர் சேர்க்கை: கால அவகாசம் நீட்டிப்பு

image

ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு மற்றும் கோபி ஆகிய இரண்டு இடங்களில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளது. இதில் 2024ஆம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு ஈரோடு அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை 0424-2275244, 70108 75256 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 16, 2024

ஈரோடு: அமைச்சருடன் தமிழ் புலிகள் தலைவர் சந்திப்பு

image

வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமியை ஈரோட்டில் அவரது இல்லத்தில் தமிழ் புலிகள் கட்சித் தலைவர் நாகை திருவள்ளுவன் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். உடன் ஈரோடு மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியம், மாநில நிதி செயலாளர் சிறுத்தை செல்வன், ஈரோடு மாவட்ட செயலாளர் சிந்தனைச் செல்வன், இளம்பாசறை தென் மண்டல செயலாளர் குணவளவன் உடன் இருந்தனர்.

News September 16, 2024

ஈரோடு வஉசி பூங்காவில் மயங்கியவர் மரணம்!

image

ஈரோடு வஉசி பூங்காவில் 50 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார். யார் அவர், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது பற்றி ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News September 16, 2024

ஈரோட்டுக்கு இன்று HAPPY BIRTHDAY

image

ஈரோடு நகர பரிபாலன சபை செப்டம்பர் 16, 1871 அன்று உருவாக்கப்பட்டது. எனவே ஆண்டுதோறும் செப்டம்பர் 16ஆம் தேதியை ஈரோடு மாவட்ட மக்கள் ஈரோடு தினமாக கொண்டாடி வருகிறார்கள். அதன்படி இன்று (செப்.16) ஈரோடு தினமாக கொண்டாடப்படுகிறது. ஈரோடு நகரத்திற்கு 152 ஆண்டுகள் நேற்றுடன் நிறைவடைந்தது. இன்று 153வது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது.

News September 15, 2024

ஈரோட்டில் இன்றைய தலைப்பு செய்திகள்

image

➤ ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வள்ளி கும்மி ஆட்டம் நடைபெற்றது. ➤ ஈரோட்டில் 6 மாதங்களில் காச நோயால் 164 பேர் பாதிப்படைந்துள்ளனர். ➤ நீடாமங்கலத்தில் இருந்து 21 சரக்கு ரயில் பெட்டிகள் மூலம் ஈரோட்டிற்கு 1000 டன் நெல் கொண்டு வரப்பட்டது. ➤ஈரோட்டில் அண்ணா சிலைக்கு முக்கிய தலைவர்வகள் மரியாதை செலுத்தினர்.

News September 15, 2024

தொழிற்சங்க கொடியேற்றி Ex.அமைச்சர் உரை

image

கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சரமான கே.ஏ.செங்கோட்டையன், பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா மற்றும் தொழிற்சங்க 50ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு இன்று கோபி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் பணிமனையில் கொடியேற்றி இனிப்புகளை வழங்கி உரையாற்றினார். இதில் ஏராளமான தொழிற் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

News September 15, 2024

ஈரோட்டிற்கு ரயிலில் கொண்டுவரப்பட்ட அரிசி

image

இன்று பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நீடா மங்கலத்தில் இருந்து 21 சரக்கு ரெயில்கள் பெட்டிகள் மூலம் ஆயிரம் டன் நெல் கொண்டுவரப்பட்டது. ஈரோடு ரெயில் பணிமனையில் நெல் மூட்டைகள் இறக்கப்பட்டு நூற்றுக்கணக்கான லாரிகள் மூலம் அரசு குடோனுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
பின்னர் அங்கிருந்து அரிசி அரவைக்கு கொண்டு செல்லப்பட்டு அரிசி ஆக்கப்பட்டு பொது விநியோக திட்டத்தின் மூலம் அனுப்பப்பட உள்ளது.

News September 15, 2024

6 மாதங்களில் காசநோயால் 164 பேர் உயிரிழப்பு

image

ஈரோட்டில் கடந்த 6 மாதத்தில் காசநோயால் 164 பேர் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், மைக்ரோ பாக்டிரியம் டியூபர்குளோசிஸ் என்ற கிருமியால் காசநோய் பரவுகிறது. இது குழந்தை முதல் முதியவர்கள வரை அனைவரையும் தாக்ககூடியது. இதுவரை காசநோய் பாதிப்பு இருந்த 1,693 பேர் குணமடைந்தும், 164 பேர் உயிரிழந்துள்ளனர்.

error: Content is protected !!