India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாட்டில் 6 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தியது. நேற்று அதிகபட்சமாக ஈரோட்டில் தலா 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது. தமிழகத்தில் வரும் 27 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்கக்கூடும்.
நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, ஈரோட்டில் மருத்துவர் மு.கார்மேகன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் கரும்பு விவசாயி சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பவானியில் பிரம்மகுமாரிகள் இயக்கத்தின் சார்பில் பவானி ராஜயோக தியான நிலையத்தில், 88 ஆவது திரிமூர்த்தி சிவஜெயந்தி விழா நேற்று மாலை நடந்தது. பல பிறவிகளுக்கு புண்ணியத்தை அடைய சோமநாதர் லிங்கத்துக்கு முன் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில், பவானி சுற்று வட்டாரத்திலுள்ள 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
அந்தியூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று டைட்டன் நிறுவனத்தால் படித்துக்கொண்டே ஊக்கத் தொகையுடன் கூடிய வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் அந்தியூர் அரசுப் பள்ளியை சேர்ந்த 10 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள், அதற்கான நியமன ஆணையை டைட்டன் கம்பெனியின் மனிதவள நிர்வாகி(HR) .ராஜ்குமார் மற்றும் பாலாஜி ஆகியோர் வழங்கினார்கள். நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியை தலைமை தாங்கினார்
சென்னிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோயில் ஒன்று உள்ளது. இக்கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இதற்கு திருச்செங்கோடு, அர்த்தநாரீஸ்வரர் கோயில், உதவி ஆணையர் ரமணிகாந்தன் தலைமை வகித்தார். இதில் ரூ.41,60,182 பணம், 203 கிராம் தங்கம் மற்றும் 2,732 கிராம் வெள்ளி இருந்தது.
பங்குனி உத்திரவிழா நாளை கொண்டாடப்படுவதையொட்டி கொடு முடிகாவிரி ஆற்றில் தீர்த்தம் எடுக்க, நுாற்றுக்கணக்கான பக்தர்கள் இன்று திரண்டனர். படித்துறை, வட்டக்கொம்மனை மற்றும் மணல்மேடு பகுதிகளில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்டோர் பலர் தீர்த்தம் முத்தரித்தனர். மேளதாளம் அரோகரா முழங்க கோஷத்துடன் மகுடேஸ்வரர், வீரநாராயணப்பெருமாளை தரிசனம் செய்து, பாதயாத்திரையாக பழநி மலை கோவிலுக்கு புறப்பட்டனர்.
சத்தியமங்கலத்தில் குன்றி கடம்பூா், குத்தியாலத்தூா், தாளவாடி மற்றும் பா்கூா் உள்ளிட்ட மலைக் கிராமங்களில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு தேர்தலுக்கு முந்தையநாள் அங்கு பெண்கள் தங்கவேண்டிய சூழல் இருப்பதால் அப்பகுதியில் பெண்கள் பணியாற்றுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். பெண்களுக்கு மாற்றாக ஆண்களை அங்கு பணியமா்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தாா்.
தாளவாடி அருகே கும்டாபுரம் கிராமத்தில் முகமது இம்ரான்(37)
என்பவருக்கு சொந்தமான மூன்று ஆடுகளை விவசாயத் தோட்டத்துக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று பட்டப் பகலில் கடித்துக் கொன்றது. இந்த சம்பவத்தால் அப்பகுதி விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர். கால்நடைகளை வேட்டையாடி வரும் சிறுத்தையை தாளவாடி வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஈரோடு மாநகராட்சி இரண்டாவது மண்டலம் 29ஆவது வார்டு சம்பத்நகர் பகுதியில் குறைந்த வாக்கு சதவிகிதம் உள்ள பகுதியில் உள்ள வாக்காளர்களிடம் 100 % வாக்குகள் பெற விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் விழிப்புணர்வு கோலங்கள் வரைந்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்வில் மாநகராட்சி செயற்பொறியாளர் மற்றும் வாக்கு சாவடி நிலை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சத்தியமங்கலம் அடுத்த மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் குண்டம் திருவிழா மார்ச் 26 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனால் மார்ச் 25 மதியம் 2 மணி முதல் மார்ச் 26 இரவு 9 மணி வரை பண்ணாரி-ஆசனூர் வழியாக மைசூர் செல்லும் அனைத்து வாகனங்களும் டி.ஜிபுதூர் நால்ரோடு-கடம்பூர்-ஆசனூர் வழியாக மைசூர் செல்லலாம் என சத்தியமங்கலம் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.